How To Make Kitkat Milkshake : ஏப்ரல்-மே மாதம் வந்தாலே, வாட்டி வதைக்கும் வெயிலும் கூடவே வந்துவிடும். இதனை சமாளிக்க பலர், ஒரு நாளைக்கு இருமுறை குளிப்பது, அடிக்கடி ஜூஸ் குடிப்பது உள்ளிட்டவற்றை செய்வோம். இதற்கு ஹெல்தியான மில்க் ஷேக் குடிப்பதும் சிறந்தது. சுவையான சில மில்க் ஷேக்களை எப்படி செய்ய வேண்டும் என பார்க்கலாம் வாங்க.
தேவையான பொருட்கள்:
- சிறிய சைஸ் 3-4 கிட்கேட்களை எடுத்துக்கொள்ள வேண்டும்
- 1 அல்லது ½ கப் பால் எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த பால் கிரீமியா இருக்க வேண்டும்.
- 2 ஸ்கூப் வெண்ணிலா ஐஸ்கிரீம்
- 1-2 டீ ஸ்பூன் சர்க்கரை.
- ஐஸ் க்யூப்ஸ் தேவைப்பட்டால்.
- சாக்லேட் சிரப் அல்லது கிட் கட் துகள்கள்.
எப்படி செய்ய வேண்டும்?
- முதலில் கிட்கேட்களை சின்ன சின்ன துகள்களாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
- கிட் கேட், வெண்ணிலா ஐஸ் கிரீம், பால் ஆகியவற்றை சேர்த்து அவை ஸ்மூத்தாக மாறும் வரை கலக்க வேண்டும்.
- இதனுடன் சிறிதளவு சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
- இதனை ஒரு பெரிய கிளாசில் ஊற்றி வைக்க வேண்டும்.
- சாக்லேட் சிரப் அல்லது, சிறிதளவு கிரிக்கெட் துகள்களை மேலே தூவி வேண்டுமானால் ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடலாம்.
இந்த மில்க் ஷேக் கெட்டியாக வேண்டுமென்றால், இதனுடன் ஐஸ் கிரீமை அதிகமாக சேர்க்கவும். தண்ணியாக வேண்டுமென்றால், ஐஸ் கிரீம் சேர்க்காமல் கிட்-கேட் மற்றும் குளிர வைத்த பாலை மட்டும் சேர்க்கவும்.
ஹெல்தியாக வேண்டுமென்றால்...
இதே மில்க் ஷேக் உங்களுக்கு ஹெல்தியாக வேண்டும் என்றால் அதனை வேறு மாதிரி செய்ய வேண்டும்.
தேவையான பொருட்கள்:
- 1 சிறிய கிட்கேட்
- 1 வாழைப்பழம்
- 1 கப் சர்க்கரை சேர்க்காத பாதாம் பால்.
- 1-2 ஐஸ் க்யூப்ஸ்
- 1 டீஸ்பூன் சர்க்கரை சேர்க்காத கோக்கோ பவுடர்
- சிறிதளவு லவங்கப்பட்டை
எப்படி செய்ய வேண்டும்?
- முதலில் கிட்-கேட்களை சின்ன சின்ன துண்டுகளாக வெட்ட வேண்டும்
- கிட்கேட், பால், கோகோ பவுடர், வாழைப்பழம் என அனைத்தையும் சேர்த்து நன்றாக அடித்து கலக்க வேண்டும்
- இதில் இன்னும் நீங்கள் இனிப்பு சேர்க்க விரும்பினால் தேன் சேர்த்துக் கொள்ளலாம்.
- இதனை ஒரு பெரிய கிளாசில் ஊற்றி உடனடியாக குடிக்க வேண்டும்.
இது ஏன் ஹெல்தி?
- முன்னர் கூறியதில், ஐஸ்கிரீம் உபயோகித்திருந்தும். ஆரோக்கிய மில்க் ஷேக்கில், அதற்கு பதிலாக வாழைப்பழத்தை சேர்க்கிறோம். இது இயற்கையான இனிப்பு உணவு பொருளாக இருப்பதோடு உடலுக்கும் நன்மை சேர்க்கும்.
- ஆரோக்கிய கிட்கேட் மில்க் ஷேக்கில், சிறிதளவு மட்டுமே கிட் கேட் சேர்க்கிறோம். இதனால் அதில் இருக்கும் இனிப்பு அளவு கம்மியாக இருக்கும்.
- இதில் அதிக சர்க்கரை சேர்க்கவில்லை. இயற்கையான இனிப்பு வகைகளை மட்டுமே சேர்கிறோம்.
- பாதாம் பாலை குறைந்த கொழுப்பு மிக்க பால் என்றும் குறிப்பிடுவர். இதனை kit-kat மில்க்-ஷேக்கில் உபயோகிப்பதால் அது ஆராேக்கியமான மாற்றாக இருக்கும்.
மேலும் படிக்க | சூப்பரா கிறிஸ்மஸ் கேக் செய்யலாம்! 2 பொருட்கள் போதும்! எப்படி தெரியுமா?
மேலும் படிக்க | சுவையான ரோட்டு கடை காளான் செய்வது எப்படி? ஈசியான ரெசிபிதான்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









