எண்ணெயே தேவையில்லை..தண்ணீரை வைத்து பூரி சுடுவது எப்படி? இதோ ரெசிபி..

Poori Without Oil : இந்தியர்களின் ஃபேவரட் ஆன உணவுகளுள் ஒன்றாக இருக்கிறது, பூரி. இதனை எண்ணெயில் சுடுவது வழக்கம். ஆனால், எண்ணெயே இல்லாமல் எப்படி தண்ணீரில் சுடுவது? இதோ முழு விவரம்.

Written by - Yuvashree | Last Updated : Mar 9, 2026, 06:26 PM IST
  • எண்ணெய் இல்லாமல் பூரி செய்வது எப்படி?
  • இந்த ரெசிபியை தெரிந்து கொள்ளுங்கள்..
  • ரொம்ப ஈசிதான்..
எண்ணெயே தேவையில்லை..தண்ணீரை வைத்து பூரி சுடுவது எப்படி? இதோ ரெசிபி..

Poori Without Oil : இந்தியாவை பொருத்தவரை, பல்வேறு உணவுகள் பிரபலமானதாக விளங்குகின்றன. அதில் முக்கியமான ஒன்றாக இருப்பது, பூரிதான். பல்லாண்டு வரலாற்றை கொண்டிருக்கும் இந்த பூரி, எண்ணெய் வைத்து தயாரிக்கப்படுகிறது. ஆனால் கடந்த சில காலமாக இதனை எப்படி என்னையே இல்லாமல் தயாரிக்கலாம் என்பது பலரது  கேள்வியாக இருந்தது. அதற்கு இப்போது தீர்வு கிடைத்துள்ளது. 

Add Zee News as a Preferred Source

எண்ணெய் இல்லாமல் பூரி தயாரிப்பது எப்படி?

இணையத்தில் கடந்த சில நாட்களாக எண்ணெய் இல்லாமல் பூரி தயாரிப்பது எப்படி? என்பது குறித்து பலரும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். பூரியை, எண்ணெயில் சுட்டு சாப்பிட்டால்தான் சுவையாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும், டயட் மற்றும் உடல் ஆரோக்கியம் காரணமாக பலரும் அனைத்து உணவு பொருட்களையும் எண்ணெய் இல்லாமல் சாப்பிட வேண்டும் என்று நினைக்கின்றனர். இதனால்தான், பூரியின் எண்ணெய் இல்லாத ரெசிப்பியும் வைரலாகி வருகிறது.

0% எண்ணெயே இல்லாத பூரியை செய்வது எப்படி தெரியுமா? பூரிக்கு வழக்கம் போல, மாவை பிசைந்து கொள்ள வேண்டும். மாவு மென்மையாக மாறியதும், அதனை சிறிய உருண்டைகளாக செய்து உருட்டிக்கொள்ள வேண்டும். 

பூரிக்கு எப்படி வட்டமாக திரட்டுவீர்களோ, அதே போல திரட்டிக்கொள்ள வேண்டும். பின்பு, இட்லி பாத்திரத்தை எடுத்து, அதில் இட்லி வேக வைப்பது போல தண்ணீர் நிரப்பி, கடைசி மேல் அடுக்கில் 4 திரட்டிய பூரி மாவை வைக்க வேண்டும். 

இட்லி குண்டானில் தட்டு போட்டு மூடி, 7-8 நிமிடங்களுக்கு பூரியை வேக வைக்க வேண்டும். பின்பு, மாவு வெந்ததும் அதை எடுத்து ஒரு தட்டில் வைத்து சூடு தீரும் வரை ஆர வைக்க வேண்டும். 

அடுத்த செயல்முறை..

எடுத்து வைத்த மாவு ஆறியதும், பூரிக்களை ஒவ்வொன்றாக எடுத்து Air Fryer-ல் வைக்க வேண்டும். பின்னர் அதை மூடி, சுமார் 100 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் 30 வினாடிகள் வைக்க வேண்டும். குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு எடுத்தால், எண்ணெயில் பொரித்த போது பூரி எப்படி இருக்குமோ அதே போல இப்போது பூரி உப்பி வந்திருக்கும். இதை, தகுந்த பதார்த்தத்துடன் வைத்து சாப்பிடலாம்.

இன்னொரு வழி..

பூரியை எப்பாேதும் போல திரட்டிய பிறகு கடாயில் தண்ணீர் வைத்து 1-2 நிமிடங்கள் திரட்டிய பூரியை போட்டு எடுக்க வேண்டும். பின்பு, மேலே கூறியது போல ஏர் ஃப்ரையரில் போட்டு எடுக்க வேண்டும். இது, பூரியை எண்ணெய் இல்லாமல் சுடுவதற்கு இன்னொரு சூப்பரான வழியாகும்.

பூரியின் வரலாறு:

பூரி சுமார் 600ஆம் நூற்றாண்டில் தயாரிக்கப்பட ஆரம்பித்த உணவு பொருளாகும். இதனை முதலில் நெய்யில் சுட்டு எடுத்தார்களாம். இந்த பூரியை மகாபாரதத்தில் கூட சுட்டிக்காட்டி இருக்கின்றனர். வட இந்தியாவில் இருந்து வந்த இந்த உணவு பொருளை, நம் ஊரில் பலரும் கிழங்குட்ன் வைத்து ருசித்து சாப்பிடுவ்ர். இது முதலில், மாலையில் சாப்பிடப்படும் ஸ்னாக்ஸ் உணவு பொருள் போலத்தான் தயாரிக்கப்பட்டதாம். பின் நாளில்தான் இது காலை டிபன், இரவு உணவாக மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News