இன்றைய மோசமான உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை காரணமாக, முதியவர்களை விட இளையவர்கள் அதிக அளவில் மாரடைப்பு மற்றும் இதய நோய்க்கு பலியாவதை பார்க்கிறோம். ஏன் சிறுவர்கள் கூட மாரடைப்பால் உயிர் இழக்கும் செய்தி அவ்வப்போது வந்து நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாகிறது. தற்போது, கொலஸ்ட்ரால் பிரச்சனை என்பது பலருக்கு இருக்கும் உடல்நல சிக்கலாக உள்ளது. மாரடைப்பு மற்றும் இதய நோய்கள் ஏற்பட கொலஸ்ட்ரால் தான் முக்கிய காரணமாக உள்ளது. இதற்கு உடற்பயிற்சியுடன் கூடவே டயட்டில் கவனம் செலுத்துவது மிக அவசியம்.
அளவிற்கு அதிக கொலஸ்ட்ரால் பேராபத்து
கொலஸ்ட்ரால் நமது உடலுக்கு அவசியமானது தான். ஹார்மோன்களை உருவாக்குவது முதல், செல் சுவர்களை வலுவாக வைத்திருக்க, வைட்டமின் டி உற்பத்தி செய்ய என பல வகைகளில் அவசியம் தான். ஆனால் அது அளவிற்கு அதிகமாகும் போது, இதய தமனிகளின் சுவர்களில் படிய தொடங்கி, ரத்த ஓட்டம் தடைபட்டு, மாரடைப்பு ஏற்படுகிறது. அதோடு கொலஸ்ட்ரால் அதிகமாகும் போது, உடலின் பல்வேறு பகுதிகளுக்கு ரத்த ஓட்டம் சீராக இல்லாமல், ஆக்ஸிஜன் கிடைக்காமல், உடல் வலி சோர்வு உள்ளிட்ட பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
கொலஸ்ட்ராலை எரிக்கும் மேஜிக் கிரீன் சட்னி
கொலஸ்ட்ரால் என்னும் கெட்ட கொழுப்பை குறைப்பதில், டயட் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில் இன்று நாம் அறிந்து கொள்ள போகும் கிரீன் சட்னி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் நாம் சேர்க்கும் கொத்தமல்லி மற்றும் புதினா குளோரோஃபில் மற்றும் நார்ச்சத்து நிறைந்தது. இது செரிமானத்தை மேம்படுத்தி கொழுப்பை இருக்கிறது. இதில் சேர்க்கும் மற்றொரு பொருளான பூண்டு, கொழுப்பை எரிப்பதோடு ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது. நார்ச்சத்து நிறைந்துள்ளதால், மலச்சிக்கல் உள்ளிட்ட செரிமான பிரச்சனைகளும் நீங்கும்.
கொலஸ்ட்ராலை எரிக்கும் மேஜிக் கிரீன் சட்னி தயாரிக்க தேவையானவை:
கொத்தமல்லி - 50 கிராம்
புதினா - 20 கிராம்
பூண்டு - 20 கிராம்
வெங்காயம் - ஒன்று
புளி - சுவைக்கு ஏற்ப
உப்பு - சுவைக்கு ஏற்ப
பச்சை மிளகாய் - 4
கடலை பருப்பு - ஒரு ஸ்பூன்
ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, அதில் சிறிதளவு கடலைப்பருப்பு சேர்த்து வறுக்கவும். பின்னர் அதில் குறித்து வைத்த பூண்டு, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். இவை ஓரளவு வதங்கியதும், அதில் பொடியாக நறுக்கிய புளி, கொத்தமல்லி மற்றும் புதினா சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். நன்கு ஆறியதும், மிக்ஸி ஜாரில் போட்டு அரைக்கவும். அதன் மீது நல்லெண்ணையில், கடுகு உளுத்தம் பருப்பு கருவேப்பிலை தாளித்தால், சுவையான கிரீன் சட்னி தயார். இது கொழுப்பை எரித்து, இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
மேலும் படிக்க | சுகர் லெவலை சுலபமாய் குறைக்கும் ஆரோக்கியமான உணவுகள்: கண்டிப்பா சாப்பிடுங்க
மேலும் படிக்க | உடல் பருமனைச் சட்டென குறைக்க உதவும்... புரதம்- நார்ச்சத்து நிறைந்த சூப்பர் உணவுகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ