)
How To Make Diet Pongal Recipe 2026: தமிழர் திருநாளாம் பொங்கல் அன்று, பெரும்பாலான வீடுகளில் சர்க்கரை பொங்கல் மற்றும் வெண் பொங்கல் தவிர்க்க முடியாத உணவாக இருக்கும். சுவைக்காக நாம் இதில் அதிகளவு நெய் மற்றும் எண்ணெய் சேர்த்துச் செய்வோம். ஆனால், உடல் எடையைக் குறைக்க டயட்டில் இருப்பவர்கள் பண்டிகை காலங்களில் அதிக கலோரிகள் கொண்ட உணவைச் சாப்பிடத் தயங்குவார்கள். அப்படிப்பட்டவர்கள் இந்த பொங்கல் பண்டிகைக்கு ஆரோக்கியமான திணை பொங்கல் செய்து சாப்பிடலாம். திணையில் அதிக அளவு நார்ச்சத்து நிரம்பியுள்ளது. இது உணவை எளிதில் செரிமானம் செய்ய உதவுவதோடு, குடல் புண்கள் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கவும் உதவுகிறது.
திணை- 2 கப், பாசிப்பருப்பு - 1 கப், இஞ்சி - 1 துண்டு, செக்கு தேங்காய் எண்ணெய் - 2 தேக்கரண்டி, தண்ணீர் - தேவையான அளவு, மிளகு - சிறிதளவு, சீரகம் - சிறிதளவு, பச்சை மிளகாய் - 2, பெருங்காயத்தூள் - சிறிதளவு, கறிவேப்பிலை - தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு, முந்திரி பருப்பு - சிறிதளவு
முதலில் ஒரு சிறிய பாத்திரம் எடுத்து வரகரிசியை அதில் இட்டு நன்கு ஊற வைக்கவும். ஒரு வாணலியில் பாசிப்பருப்பை ஆகியவற்றை தனித்தனியாக லேசாக வறுத்துக் கொள்ளவும். பிறகு அதை ஊற வைத்துள்ள வரகரிசியுடன் சேர்த்து அலசி எடுத்துக்கொள்ளவும். பிறகு இஞ்சியை தோலைச் சீவி, பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அதேபோல் பச்சை மிளகாயை, இரண்டாகக் கீறிக் கொள்ளவும். அதன்பின் மிளகு, சீரகம் இரண்டையும் ஒன்றிரண்டாக பொடித்துக் கொள்ளவும்.
பிறகு குக்கரில் திணை, பாசிப்பருப்பை, பொடியாக நறுக்கிய இஞ்சி, பெருங்காயத்தூள், உப்பு மற்றும் 3 கப் தண்ணீரை விட்டு மூடி 4 விசில் வரும் வரை வேகவைத்து எடுக்கவும். சற்று ஆறியவுடன், குக்கரைத் திறந்து நன்றாக மசித்துக் கொள்ளவும்.
அதன்பின் வாணலில் சிறிதளவு செக்கு தேங்காய் எண்ணெயை விட்டுச் சூடாக்கவும். பிறகு அதில் முந்திரி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் மிளகு, சீரகப் பொடியைப் போட்டு வருத்துக்கொள்ளவும். அதன் பின் பொங்கலின் மேல் இந்த தாளிப்பு கலவையை ஊற்றி நன்கு கிளறி இறக்கவும். இதோ சுவையான திணை பொங்கல் ரெடி.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ