)
How To Make Your Hair Grow Faster : மக்கள் பலர் பாலின பேதமின்றி சந்திக்கும் ஒரு விஷயம், முடி உதிர்தல். பலருக்கு முடி உதிர்வதோடு மட்டுமின்றி, மலரும் முடிகள் மெலிதானதாகவும் இருக்கின்றன. இதைத் தவிர்த்து முடியை வேகமாகவும் அடர்த்தியாகவும் வளர வைக்க சில வழிகள் இருக்கின்றன. அவை என்னன்ன என்பதை இங்கு பார்க்கலாம்.
ஸ்டைலிங்:
முடியை straightening, அல்லது ironing செய்வது பலரது வழக்கம். இதை செய்வதால் முடி வளர்ச்சி பாதிக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். அப்படி இவற்றை செய்ய வேண்டும் என்றால், அதிக சூடு அளவை வைக்காமல் குறைந்த அளவில் வைத்து பயன்படுத்தலாம் என கூறுகின்றனர்.
ஈரமான முடி:
பலர் முடியில் விழும் சிக்கலை எடுக்க முடி ஈரமாக இருக்கும்போதே சிக்கெடுப்பதுண்டு. அப்படி தலையில் ஈரம் சொட்ட சொட்ட இருக்கும்போதே நாம் சீப்பை வைத்து சீவுவதால் முடி விரைவில் உடைய கூடும் என்று கூறப்படுகிறது. மேலும், முடி உடையாமல் பாதுகாக்கும் செல்களையும் இது அழிக்கிறதாம்.
கலரிங்:
தலையில் ப்ளீச்சிங், கலரிங் செய்வது வாடிக்கையாகிவிட்டது. இவையும் முடியை பாழாக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள். அப்படியும் கலர் அடிக்க வேண்டும் என்றால் ஒரு சில பகுதி முடியை மட்டும் எடுத்து அதிக கெமிக்கல் கலக்காத பொருட்களை உபயோகிக்க வேண்டுமாம்.
முடி வெட்டுதல்:
முடி வெட்டவில்லை என்றால் அதிகமாக வளரும் என்று பலர் தவறாக நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் உண்மையில் முடியை ட்ரிம் செய்தால் மட்டுமே சரியாக வளரும் என்பது மருத்துவர்களின் கருத்தாக இருக்கிறது. முடியின் நுனியில் இருக்கும் உடைந்த நுனி, வெட்டும்போதுதான் சரியாக வளரும். முடி வளர்க்க வேண்டும் என்பது உங்களது ஆர்வமாக இருந்தால் ஒரு மாதத்திற்கு அறையின் ட்ரிம் செய்யலாம் என்று கூறப்படுகிறது.
வைட்டமின்:
முடி வளர்ச்சிக்கு வைட்டமின் எடுத்துக் கொள்வதும் முக்கியம். ஒமேகா 3, Zinc, வைட்டமின் சி, வைட்டமின் டி உள்ளிட்ட சத்து நிறைந்த உணவு பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டுமாம். முட்டை, யோகர்ட், முந்திரி பழம், ஓட்ஸ் ஆகியவை இதற்கு உதவும்.
சரியான எண்ணெய்கள்:
முடி வளர்ச்சிக்கு நாம் தலையில் தடவும் என்னையும் மிகவும் முக்கியம். தேங்காய் எண்ணெய், சூரியகாந்தி என்னை, கேஸ்டர் ஆயில் ஆகியவை இதற்கு உதவுமாம். அதேபோல உபயோகிக்கும் ஷாம்புவும் சரியானதாக இருக்க வேண்டும். சல்பேட் இல்லாத ஷாம்புக்களை உபயோகிக்க வேண்டும் என பரிந்துரைக்கின்றனர் மருத்துவர்கள்.
முடியை பராமரித்தல்:
முடி, உடலின் மென்மையான ஒரு பாகம் ஆகும். எனவே, அதனை போட்டு வாட்டி வதைக்க கூடாது. அதனை அதிகமாக அலசவும் கூடாது. எனவே, முதலில் உங்களது முடியை மென்மையாக கையாள கற்றிக்கொள்ள வேண்டும். சிக்கு எடுக்கும் போது, பெரிய பள் கொண்ட சீப்பை பயன்படுத்த வேண்டும்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ