பொது வெளியில் பேச பயமா? இந்த டிப்ஸை பின்பற்றினால் உலகமே உங்களுக்கு அடிமை..

How To Overcome Stage Fear : ஒரு சிலருக்கு, பொதுவெளியில் பேசவே பயமாக இருக்கும். அவர்கள், சில சைக்காலஜி டிப்ஸை பின்பற்றினால் கண்டிப்பாக அவர்களாலும் பிறர் மத்தியில் பேசி ஜொலிக்க முடியும்.  

Written by - Yuvashree | Last Updated : Apr 7, 2025, 05:24 PM IST
  • மேடை பயத்தை தாண்டி வர டிப்ஸ்
  • பேசுவதற்கு என்ன செய்ய வேண்டும்?
  • இதோ சில சிம்பிளான வழிக்காட்டி..
பொது வெளியில் பேச பயமா? இந்த டிப்ஸை பின்பற்றினால் உலகமே உங்களுக்கு அடிமை..

How To Overcome Stage Fear : பள்ளியில் வகுப்பறையில் பேச சொன்ன போது ஆரம்பித்த பயம், கல்லூரியில் கல்சுர்ஸில் ஆட பயம், இப்போது அலுவலகத்திலும் மீட்டிங்கில் பேச பயம். இப்படி எதற்கெடுத்தாலும் நம்மில் சிலர் பேச வேண்டும் என்றாலே நம்மில் சிலரை பயம் ஆட்கொண்டு விடும். ஒரு சிலர், நம்மிடம் பழகி, கம்ஃபர்ட் ஆன பிறகே சகஜமாக பழகுவர். இதனால், பொது வெளியில் தெரியாதவர்கள் மத்தியில் பேச வேண்டும் என்றாலே அவர்களுக்கு மிகவும் சங்கடமாக இருக்கும். இந்த பயத்தை தாண்டி வெளிவர சில வழிகள் இருக்கிறது. அவை என்ன தெரியுமா?

Add Zee News as a Preferred Source

உடல் மொழி:

பொது வெளியில் வாயால் பேச பயப்படுபவர்கள், உடல் மொழியாலும் கூட பேசுவார்கள். ஆராய்ச்சியில், வாய் மொழியை விட உடல் மொழிகள் சக்திவாய்ந்த மொழியாக பார்க்கப்படுகிறது. ஒருவர் பேசுகையில் தலையசைத்தல், பேசுபவரின் கண்களை பார்ப்பது, பேசுவது கேட்கவில்லை என்றால் முன்னாள் வருவது என அனைத்துமே ஒரு வித உடல்மொழிதான். இது உங்களுக்கு உணர்ச்சி ரீதியான அறிவை வளர்ப்பதோடு மட்டுமன்றி, பிறர் மத்தியில் உங்கள் மீதான நல்ல மதிப்பையும் ஏற்படுத்துகிறது.

திட்டம்:

பொதுவெளியில் பேசப்போகிறீர்கள் என்றால், என்ன பேசப்போகிறீர்கள், எப்படி பேசப்போகிறீர்கள் என்பதை முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்வது சிறந்தது. உதாரணத்திற்கு உங்கள் அலுவலக மீட்டிங்கில் பேசப்போகிறீர்கள் என்றால், உங்கள் திட்டத்தை முன்கூட்டிய உங்களின் டீமிடம் ஷேர் செய்து, செயல் விளக்கத்தை மட்டும் நீங்கள் தெரிவிக்கலாம். மேலும், இந்த திட்டமிடல் உங்களது தைரியத்தை இன்னும் அதிகரிக்கும்.

இடையில் பேச்சை நிறுத்துவது:

நீங்கள் மீட்டிங்கில் பேசும் போது அல்லது மேடையில் பேசும் போது கண்டிப்பாக இடையூறுகள் வரலாம். அதை நார்மலாக கடந்து செல்ல வேண்டும். அதே போல, நீங்கள் இடை விடாமல் பேச வேண்டும் என்கிற அவசியமும் கிடையாது. இடையில் நிறுத்தி, கொஞ்சம் மூச்சு விட்டு மீண்டும் பேச தொடங்கலாம்.

மூச்சுப்பயிற்சி:

மேடையில் பேசப்பாேகிறீர்கள் என்றால், அதற்கு முன்னர் மூச்சுப்பயிற்சி செய்வது முக்கியம். 4 விநாடிகள் மூச்சை இழுத்து வைத்துக்கொண்டு, 4 விநாடிகளுக்கு அதனை வெளியேற்ற வேண்டும். இதற்கு, பாக்ஸ் பிரீத்திங் என்று அர்த்தம். இதை செய்தால், படபடவென இருக்கும் உங்கள் மனம் கொஞ்சம் நிதானமாகும், உடல் ரிலாக்ஸ் ஆகும்.

மனப்பாடம் செய்ய வேண்டாம்:

நீங்கள் மேடையேறி எதையும் ஒப்பிக்கப்போவதில்லை, அங்கிருக்கும் ஆடியன்ஸிடம் பேசத்தான் போகிறீர்கள். எனவே, கண்டிப்பாக எந்த விஷயத்தையும் மனப்பாடம் செய்யாதீர்கள். அப்படி செய்தால், உங்களுக்கு மேடையேறியவுடன் அனைத்துமே மறந்துதான் போகும். ஆனால், எந்த பகுதிக்கு பின்பு எந்த பகுதியை சொல்லப்போகிறீர்கள் என்பதையும், சில குறிப்பிட்ட வார்த்தைகளை சொல்ல வேண்டும் என்றால் அதையும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

நினைத்து பார்ப்பது:

நீங்கள், மேடை ஏறுவதற்கு முன்னரே, உங்கள் பேச்சை ரிகர்சல் பார்க்கும் பாேது, அங்கிருக்கும் ஆடியன்ஸ் உங்களது பேச்சை புன்முருவலுடன் கேட்பது போலவும் நினைத்து பார்த்துக்கொள்ளுங்கள். இதனால், நீங்கள் கண்டிப்பாக பேசப்பாேவதை சரியாகத்தான் பேசுவீர்கள் என்கிற நம்பிக்கை உண்டாகும். இது, மேடை ஏறிய பிறகு தைரியத்தை வரவழைக்கவும் உதவும்.

மேலும் படிக்க | கோடையில் உங்கள் செல்லப்பிராணிகளுக்கு இந்த உணவுகளை கொடுக்காதீர்கள்!

மேலும் படிக்க | பப்பாளி சாப்பிட்டவுடன் மாதவிடாய் வருவது ஏன்? சூடு மட்டும் காரணம் அல்ல!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News