பளபளப்பான சருமத்தை கொடுக்கும் வைட்டமின் சி டோனர்... வீட்டிலேயே செலவில்லாமல் தயாரிக்கலாம்...

வைட்டமின் சி உங்கள் சருமம் இளமையாக இருக்க தேவையான ஊட்டச்சத்துக்களில் மிக முக்கியமானது. எனவே தான் வைட்டமின் சி கொண்ட பல அழகு சாதனப் பொருட்கள் சந்தையில் பார்க்கலாம். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 19, 2025, 03:52 PM IST
  • சரும பராமரிப்பு விஷயத்தில் ஸ்கின் டோனர் பல பயன்பாடுகளைக் கொண்டுள்ளது.
  • வீட்டிலேயே வைட்டமின் சி டோனர் தயாரிப்பது எப்படி?
  • சருமம் இளமையாக இருக்க தேவையான ஊட்டச்சத்துக்களில் மிக முக்கியமானது.
பளபளப்பான சருமத்தை கொடுக்கும் வைட்டமின் சி டோனர்... வீட்டிலேயே செலவில்லாமல் தயாரிக்கலாம்...

வைட்டமின் சி உங்கள் சருமம் இளமையாக இருக்க தேவையான ஊட்டச்சத்துக்களில் மிக முக்கியமானது. எனவே தான் வைட்டமின் சி கொண்ட பல அழகு சாதனப் பொருட்கள் சந்தையில் பார்க்கலாம். இருப்பினும், இவை விலை அதிகம் என்பதோடு, இந்த தயாரிப்புகளில் உங்கள் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களும் உள்ளன. அத்தகைய சூழ்நிலையில், உங்கள் சருமத்திற்கு வைட்டமின் சி பயன்படுத்த விரும்பினால், புதிய ஆரஞ்சு தோலைப் பயன்படுத்தி ஒரு சிறப்பு டோனரை உருவாக்குவது சிறந்தது. 

வீட்டிலேயே முகத்திற்கு வைட்டமின் சி டோனரை எப்படி தயாரிப்பது என்பதை இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம். இதில் ஆண்டி ஏஜிங் பண்புகளுடன், சருமத்தின் நிறத்தை மேம்படுத்தும் நிறமியாகவும், கறைகளைப் போக்க உதவும் சிறந்த டோனராகவும் (Skin Care Tips) இருக்கும்.

வீட்டிலேயே வைட்டமின் சி டோனர் தயாரிப்பது எப்படி?

சருமத்திற்கு ஆரஞ்சு தோல் மிகவும் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. குறிப்பாக, சருமத்தில் இதைப் பயன்படுத்துவதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும். ஆரஞ்சு தோலைப் பயன்படுத்தி வீட்டிலேயே சந்தையில் கிடைப்பதை போன்ற வைட்டமின் சி டோனரைத் தயாரிக்கலாம். வைட்டமின் சி டோனர் தயாரிப்பது எப்படி என்பதை விரிவாக அறிந்து கொள்ளலாம்.

வைட்டமின் சி டோனர் தயாரிக்க, முதலில் ஆரஞ்சு தோல்களை ஒரு கிளாஸ் தண்ணீரில் சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் அதை வடிகட்டி குளிர்விக்க விடவும். அது குளிர்ந்த பிறகு, நீங்கள் 2 தேக்கரண்டி ரோஸ் வாட்டர் மற்றும் 1 வைட்டமின் ஈ காப்ஸ்யூலை எடுத்து அதிலிருக்கும் எண்ணெயை எடுத்து, அனைத்தையும் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். உங்கள் டோனர் தயாராக உள்ளது, அதை ஒரு நல்ல ஸ்ப்ரே பாட்டிலில் சேமிக்கவும். நீங்கள் அதை சுமார் 7 நாட்கள் குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்து பயன்படுத்தலாம்.

சரும பராமரிப்பு விஷயத்தில் ஸ்கின் டோனர் பல பயன்பாடுகளைக் கொண்டுள்ளது. இது சருமத்தை சுத்தப்படுத்திய பிறகு, அதிலுள்ள அசுத்தங்களை முழுமையாக அகற்ற உதவுகிறது. அதோடு, சருமத்தின் pH நிலையை சமப்படுத்துகிறது மற்றும் சருமத்தில் உள்ள ஈரப்பதத்தை காக்கிறது. டோனர்கள் சருமத்தைப் பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல் புத்துணர்ச்சியூட்டுகின்றன.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், அழகுக் கலை நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | தங்கம் போல் முகம் ஜொலிக்க கற்றாழை ஃபேஷயிலை இப்படி செய்யுங்கள்

மேலும் படிக்க | சுட்டெரிக்கும் வெயிலில் இந்த தவறுகளை செஞ்சிடாதீங்க.. முகம் அதிகம் சேதமடையும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News