Prevent Bananas From Turning Brown : உலகளவில் மக்கள் பலருக்கு பிடித்த பழங்களுள் ஒன்று, வாழைப்பழம் ஆகும். இதன் இயற்கையான இனிப்பு சக்தியும், வயிற்றை முழுதாக வைத்துக்கொள்ளும் சக்தியும் பலருக்கும் பிடிக்கும். இவை, உடலுக்கு தேவையான புரத சத்தை தருவதோடு, செரிமானத்தை சரிசெய்யவும், இதயம் தன் வேலையை சீராக பார்க்கவும் உதவுகிறது. அதே போல, உடல் எடையை சரியாக பாலன்ஸ் செய்யவும் இது உதவுகிறது.
வாழைப்பழத்திடம் பலருக்கும் பிடிக்காத ஒரே விஷயம், இவை எளிதில் கெட்டுப்போவது அல்லது பிரவுன் நிறத்தில் மாறிவிடுவது. இதனால் பலர் இதை சாப்பிட விரும்புவதில்லை. இதை தவிர்க்க, இதன் ஆயுளை கொஞ்சம் நீட்டிக்க சில வழிகள் இருக்கிறதாம். அவை என்ன தெரியுமா?
தண்டை மூடி வைக்கலாம்:
வாழைப்பழத்தின் தண்டை மூடி வைப்பது மிகவும் எளிமையான மற்றும் பயனுள்ள விஷயமாகும். இதனால் நாம் எத்திலீன் வாயு வெளியீட்டை தவிர்க்கிறோம். இது, வாழைப்பழத்தை புதிது போல வைத்திருக்க உதவுகிறது. வாழைப்பழம், மஞ்சள் நிறத்திலேயே இருக்கவும் இது உதவுகிறது. பழுப்பு நிறத்தில் அவ்வளவு எளிதில் மாற விடாமலும் தடுக்கிறது.
வாழைப்பழத்தை தொங்க விடுதல்:
வாழைப்பழத்தை, எங்கும் கீழே வைக்காமல் அதனை ஏதேனும் கொடியில் தொங்க விடுவது அவை எளிதில் அழுக விடாமல் தடுக்கும் நற்செயலாகும். இது, வாழைப்பழங்கள் எளிதில் ரொம்ப பழமாகாமல் இருப்பதை தடுக்கிறது. இதற்கு காரணம், இவற்றை தொங்க விடுவதால், காற்று பழத்தை சுற்றி அனுமதிக்கப்படுகிறது. இதனால்தான் வாழைப்பழங்களை தொங்க விட்டால் அவை வழக்கத்தை விட அதிகமாக கெடாமல் இருக்குமாம்.
குளிர்சாதன பெட்டியில் வைக்கலாம்:
வாழைப்பழத்தின் புத்துணர்ச்சியை நீடிக்க குளிர்சாதன பெட்டியில் வைப்பது மற்றொரு பயனுள்ள முறையாகும். குளிர்சாதன பெட்டியில் அவற்றை சேமித்து வைப்பதன் மூலம், குளிர்ந்த வெப்பநிலை, வாழைப்பழம் பழுக்க வைப்பதை கணிசமாகக் குறைக்கிறது. இதனால் இவை பழுப்பு நிறமாவது தாமதம் ஆகிறது.
மற்ற பழங்களிலிருந்து அவற்றை விலக்கி வைக்கவும்:
வாழைப்பழத்தை வாங்கினால் அவற்றை தனியாக வைக்கவும். ஆப்பிள், அவகேடோ போன்ற பழங்களிலிருந்து வாழைப்பழங்களைப் பிரிப்பது அவை பழுப்பு நிறத்தில் மாறுவதை மெதுவாக்கும். இந்தப் பழங்களால் வெளிப்படும் எத்திலீன் வாயுவின் வெளிப்பாட்டைக் குறைப்பதன் மூலம், வாழைப்பழங்களின் புத்துணர்ச்சியை பராமரிக்க முடியும்.
மொத்தமாக வைக்க வேண்டாம்:
வாழைப்பழங்களை சீக்கிரமாக காலி செய்து விடுவீர்கள் என்றால், அவற்றை ஒரே கொத்தாக வைக்கலாம். ஆனால், அதே சமயத்தில் அதில் ஏதேனும் ஒன்று பழுப்பு நிறத்தில் மாறினாலும், சுற்றி இருக்கும் பிற பழங்களும் பழுப்பு நிறத்தில் மாறக்கூடும். வாழைப்பழங்களில் அதிக அளவு எத்திலீன் வாயு வெளியேறுவதால், அவற்றை பிரித்து வைப்பது அந்த வாயு செறிவையும் குறைக்கிறது. இதனால், இப்படி வாழைப்பழங்களை பிரித்து வைத்தால், கண்டிப்பாக அவை சீக்கிரம் பழுப்பு நிறத்தில் மாறுவதில் இருந்து தவிர்க்க முடியும்.
மேலும் படிக்க | வாழைப்பழத்துடன் கூட்டணி சேராத சில உணவுகள்.. ‘இவற்றை’ தவிர்க்கவும்!
மேலும் படிக்க | குழந்தைகள் கண்ணாடி போடுவதை தவிர்க்க..இன்றே ‘இந்த’ பழங்களை சாப்பிட வையுங்கள்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









