Curd Facial: முகத்தின் அழகு எப்போதுமே ஜொலிக்க இரவில் இதை தடவவும்

Curd Facial In Tamil: தயிர் மற்றும் தேன் உங்கள் முகத்தின் அழகை அதிகரிக்க இயற்கையான மற்றும் பயனுள்ள வழியாகும். இரவில் தயிர் மற்றும் தேன் ஃபேஸ் மாஸ்க்கைப் பயன்படுத்துவது சருமத்திற்கு பல நன்மைகளை அளிக்கும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 17, 2025, 01:27 PM IST
  • சரும நிறத்தை மேம்படுத்த உதவுகிறது
  • சருமத்தை மென்மையாக்க உதவுகிறது
  • தயிர் மற்றும் தேன் ஃபேஸ் மாஸ்க்
Curd Facial: முகத்தின் அழகு எப்போதுமே ஜொலிக்க இரவில் இதை தடவவும்

Curd Face For Glowing skin In Tamil: தயிர் மற்றும் தேன் ஆகியவை இயற்கையான மற்றும் பயனுள்ள தீர்வுகள் ஆகும், இதன் உதவியுடன் உங்கள் முகத்தின் அழகை எளிமையாக அதிகரிக்கலாம். குறிப்பாக இரவில் தயிர் மற்றும் தேன் ஃபேஸ் மாஸ்க்கைப் பயன்படுத்துவது சருமத்தை ஆழமாக ஊட்டமளிப்பதோடு பல பிரச்சனைகளையும் குறைக்க உதவுகிறது. இந்நிலையில் தயிர் மற்றும் தேன் பயன்படுத்துவதன் நன்மைகளையும் அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதையும் இந்த கட்டுரையின் மூலம் தெரிந்துக்கொள்வோம். வதற்கான சரியான வழியையும் அறிந்து கொள்வோம்.

தயிர் மற்றும் தேனின் நன்மைகள் என்னென்ன | Benefits of curd and honey:

சருமத்தை ஹைட்ரேட் செய்ய உதவுகிறது (Hydrates the skin): தயிர் மற்றும் தேன் ஒன்றாக சருமத்தில் பயன்படுத்தி வந்தால் சருமத்தில் ஆழமாக ஈரப்பதமாக்க உதவும், இதனுடன் இவை சருமத்தை புத்துணர்ச்சியுடனும், ஈரப்பதத்துடனும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது. 

சருமப் பிரச்சினைகளைக் குறைக்க உதவுகிறது (Reduces skin problems): தயிர் மற்றும் தேன் இந்த இரண்டு கலவைகளும் சருமக் கறைகள், முகப்பரு மற்றும் சுருக்கங்களைக் குறைத்து, சருமத்தை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும்.

சருமத்தை மென்மையாக்க உதவுகிறது (Softens the skin): தயிர் மற்றும் தேன் (Honey) சரும செல்களை ஊட்டமளிக்கிறது, சருமத்தை மென்மையாகவும், மிருதுவாகவும், நெகிழ்வாகவும் வைத்திருக்க உதவுகிறது.

ஆக்ஸிஜனேற்ற பண்புகள் (Antioxidant properties): தேனில் இயற்கையான ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன, அவை சருமத்தை வெளிப்புற மாசுபாடு மற்றும் தீங்கு விளைவிக்கும் கூறுகளிலிருந்து பாதுகாக்க உதவுகின்றன மற்றும் வயதான செயல்முறையை மெதுவாக்கவும் உதவுகின்றன.

சரும சுத்திகரிப்பு (Skin Cleansing): தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் சருமத்தில் ஆழமாக ஊடுருவி முகப்பரு (Pimples) மற்றும் கரும்புள்ளிகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது மற்றும் இறந்த செல்களை அகற்றுவதன் மூலம் சருமத்தை சுத்தப்படுத்தவும் உதவுகிறது.

சரும நிறத்தை மேம்படுத்த உதவுகிறது (Improves Skin Tone): வழக்கமான பயன்பாட்டின் மூலம், தயிர் (Curd) மற்றும் தேன் சரும நிறத்தை பிரகாசமாக்க கிறது மற்றும் சீரற்ற சரும தொனியை சமன் செய்யவும் உதவுகிறது.

தயிர் மற்றும் தேன் ஃபேஸ் மாஸ்க் தயார் செய்வது எப்படி | How to prepare curd and honey face mask

- இரண்டு டேபிள் ஸ்பூன் தயிர் எடுத்து அதனுடன் ஒரு டீஸ்பூன் தேன் சேர்க்கவும்.
-இரண்டு பொருட்களையும் நன்றாக கலந்து பேஸ்ட் செய்துக் கொள்ளவும்.
-இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி 15-20 நிமிடங்கள் அப்படியே வைத்திருங்கள்.
-வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவி சருமத்தை உலர வைக்கவும்.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | பருப்புகளை நொதிக்க செய்வதால்... இரட்டிப்பாகும் ஊட்டச்சத்துக்கள்... ஆய்வில் வெளியான ஆச்சரிய தகவல்

மேலும் படிக்க |  கல்லீரலில் சேரும் நச்சுக்களை நீக்க... ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் சூப்பர் உணவுகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News