புதிய ஆதார் ஆப்-ஐ எப்படி பயன்படுத்துவது? முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்

Aadhaar : மத்திய அரசு புதிய ஆதார் செயலியை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில் அதனை எப்படி பயன்படுத்துவது, அதில் இருக்கும் சிறப்பம்சங்கள் என்ன? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். 

Written by - Karthikeyan Sekar | Last Updated : Apr 11, 2025, 07:49 AM IST
  • ஆதார் செயலி அறிமுகம்
  • ஆதார் செயலி சிறப்பம்சங்கள்
  • மோசடிகள் இனி தடுக்கப்படும்
புதிய ஆதார் ஆப்-ஐ எப்படி பயன்படுத்துவது? முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்

Aadhaar App : டிஜிட்டல் இந்தியாவில் எல்லாவற்றையும் ஆன்லைனில் செய்யும் இந்த காலத்தில், ஆதார் அட்டையின் பாதுகாப்பு குறித்து பலருக்கு கவலை இருக்கிறது. வங்கி கணக்கு திறக்கவோ, ஹோட்டலில் அறை புக் செய்யவோ எல்லா இடங்களிலும் ஆதார் காட்ட வேண்டியுள்ளது. ஆனால் இதில் பலரின் ஆதார் விவரங்கள் தவறான கைகளில் சேர்ந்து, மோசடியாக பயன்படுத்தப்படுகின்றன. சில நேரங்களில் ஒரு சிலரின் வங்கி கணக்குகள் கூட காலி செய்யப்படுகின்றன.

Add Zee News as a Preferred Source

இந்த பிரச்சினைக்கு தீர்வாக, UIDAI ஒரு புதிய ஆதார் ஆப்-ஐ வெளியிட்டுள்ளது. இந்த ஆப் உங்கள் தனிப்பட்ட விவரங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும், எளிதாக உங்களின் அடையாளத்தை சரிபார்க்கவும் உதவும். இனி ஆதார் அட்டையின் அசல் அல்லது போட்டோ காபி எடுத்துச் செல்ல தேவையில்லை. உங்கள் தகவல்களை இந்தசெயலி மூலம் சீக்கிரம் சரிபார்த்துக் கொள்ளலாம். 

புதிய ஆதார் ஆப்-இன் முக்கிய வசதிகள்:

1. தேர்ந்தெடுத்த தகவல்களை மட்டும் பகிர்தல்

முன்பு, உங்களிடம் ஆதார் எண் அல்லது முகவரி மட்டும் கேட்கப்பட்டாலும், முழு ஆதார் அட்டையையே காட்ட வேண்டியிருந்தது. இப்போது இந்த ஆப்பில், நீங்கள் கேட்கப்பட்ட தகவலை மட்டும் தேர்ந்தெடுத்து பகிரலாம். உதாரணமாக ஹோட்டலில் தங்கும்போது உங்கள் முகவரி மட்டும் வேண்டுமென்றால், அதை மட்டும் share செய்யலாம்.

2. QR கோட் மூலம் உடனடி சரிபார்ப்பு

இந்த ஆப்பில் QR கோட் ஸ்கேன் செய்யும் வசதி உள்ளது. விரைவில் ஹோட்டல்கள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் போன்ற இடங்களில் இந்த QR கோட்கள் பொருத்தப்படும். நீங்கள் அங்கு QR கோடை ஸ்கேன் செய்தால், முகம் அங்கீகரிப்பு (Face Recognition) மூலம் உங்கள் அடையாளம் உடனடியாக சரிபார்க்கப்படும்.

3. காகிதமில்லா சரிபார்ப்பு

முன்பு பயணம் அல்லது ஹோட்டல் புக் செய்யும்போது ஆதாரின் போட்டோ காபி கேட்கப்பட்டது. இப்போது இந்த ஆப் மூலம் டிஜிட்டலாக தகவல்களை பகிரலாம், மேலும் எந்த தகவலை share செய்ய வேண்டுமோ அதை நீங்களே தேர்ந்தெடுக்கலாம்.

4. மோசடிகளை தடுக்க உதவும்

இந்த ஆப்பில் எந்த தகவலும் உங்கள் அனுமதி இல்லாமல் share ஆகாது. மேலும், ஆதார் கார்டை ஃபோட்டோஷாப் செய்து மோசடி செய்யும் வாய்ப்புகளும் தடுக்கப்படும்.

5. முகம் அங்கீகரிப்பு (Face Recognition)

டெக்னாலஜி புரியாதவர்களும் எளிதாக பயன்படுத்த, ஃபேஸ் ஸ்கேன் செய்யும் வசதி இந்த ஆப்பில் உள்ளது. QR கோட் ஸ்கேன் செய்து, எங்கிருந்தும் உங்கள் அடையாளத்தை சரிபார்க்கலாம்.

ஆதார் ஆப் எப்போது அனைவருக்கும் வெளியிடப்படும்?

தற்போது இந்த ஆப் Beta டெஸ்டிங் (ஆரம்ப சோதனை) நிலையில் உள்ளது. 'ஆதார் சம்வாத்' நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் மற்றும் சில தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுக்கு மட்டுமே இது தற்போது கிடைக்கிறது. பயனர் கருத்துகளின் அடிப்படையில் இதை மேம்படுத்தி, விரைவில் அனைவருக்கும் Google Play Store (Android) மற்றும் Apple App Store (iOS)-ல் வெளியிட உள்ளது.

மேலும் படிக்க | ஆதார் செயலி வந்தாச்சு... மத்திய அரசு கொடுத்த குட் நியூஸ்..! முழு விவரம்

மேலும் படிக்க | PVC ஆதார் அட்டை உங்கள் வீடு வந்து சேரும்... விண்ணப்பிக்கும் எளிய முறை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

...Read More

Trending News