How To Win In Competitive World : மனிதர்களுக்கு மனிதர்களே என்றும் போட்டி என்கிற நிலை இப்போது இல்லை. AI தொழில்நுட்பமும் மனிதர்களின் வேலைகளுக்கு உலை வைக்க வந்துவிட்டது. இதனால் நாம் மாற்றத்திற்கான விளிம்பில் இருக்கிறோம். இதற்கு ஏற்றவாறு நமது திறன்களின் மாற்றிக் கொள்ளவில்லை என்றால், பல இடங்களில் மறக்கவும் மறுக்கவும் படுவோம் என்பதே நிதர்சனம். இந்த நிலையில், இந்த போட்டி நிறைந்த உலகில், எப்படி வெற்றி பெறுவது என்பதை இங்கு பார்ப்போம்.
உங்கள் திறன்களை அறிதல்:
உங்களுக்கு இயற்கையாக வரும் திறன்கள் என்னென்ன என்பதை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். உங்களை தினமும் எழுந்து கொள்ள தூண்டுவது எது? உங்களை தூங்கவிடாமல் செய்யும் கனவு எது? என்பதே கண்டு கொள்ளுங்கள். பிறரை விட உங்களால் இதில் முன்னிலையில் இருக்க முடியும் என்பதை வைத்துதான் உங்களது தகுதியையும் உங்களால் அறிந்து கொள்ள முடியும்.
நீண்ட கால திட்டம்:
உங்களின் கனவு, நெடுங்காலத்திற்கு உரியதாக இருக்க வேண்டும். ஒரு துறையை தேர்ந்தெடுத்து அதற்குறிய நீண்ட கால திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். அதை கற்றுக்கொள்ள உங்கள் நேரத்தையும் வருடங்களையும் செலவிட வேண்டும். உங்கள் வேலைக்கான மரியாதையை வளர்த்துக்கொள்ளுங்கள். ட்ரெண்டிங்கில் என்ன இருக்கிறதோ, அதை பின் தொடராமல், நீண்ட காலத்திற்கான உங்கள் திட்டத்தை வகுத்துக்கொள்ளுங்கள்.
பயன்படுபவராக இருங்கள்:
பிறரது வாழ்க்கையை ஏதேனும் ஒரு வகையில் உயர்த்துபவராகவும் நீங்கள் இருக்க வேண்டும். ஏனென்றால், மனிதர்கள் தனக்கு ஏதோ ஒரு காலத்தில் உதவியாக இருந்தவர்களையும், தனது வாழ்க்கையை மேம்படுத்தியவர்களையும் மறக்க மாட்டார்கள். எனவே, உங்கள் வேலை, கற்பனை அல்லது கனிவாக இருப்பதன் மூலமாக எப்படி ஒருவரின் வாழ்க்கை தரத்தை உயர்த்த முடியும் என்று பாருங்கள்.
தொடர்ந்து கற்றல்:
உலகம் வேகமாக மாறிக்கொண்டே இருக்கும், மனிதர்களும் அதற்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொண்டே இருப்பார்கள். எனவே, 3 வருடங்களுக்கு முன்பு உங்களுக்கு உபயோகப்பட்ட ஒரு திறமை இப்போது உபயோகப்படாமல் போகலாம். எனவே, எப்போதும் ஏதோ ஒரு விஷயத்தை கற்றுக்கொள்பவராக இருங்கள். வாசிப்பு பழக்கத்தை வளர்த்து, நிறைய கேள்வி கேளுங்கள். சூழலுக்கு தகுந்தவாறு உங்களை மாற்றிக்கொள்ளுங்கள். நிதி, உறவுகள், டெக் என எல்லையற்று கற்றுக்கொண்டே இருங்கள்.
தொடர்பை வளர்த்துக்கொள்ளுங்கள்:
நீங்கள் எந்த துறையில் சாதிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அந்த துறையில் தொடர்புகளை (நெட்வர்கிங்) வளர்த்துக்கொள்ளுங்கள். உங்களை தூக்கிவிடும் நல்வார்த்தை பேசுபவர்களை அருகில் வைத்துக்கொள்ளுங்கள். நீங்களும் பிறருக்கு உதவி செய்யுங்கள், பிறரையும் உங்களுக்கு உதவி செய்ய வையுங்கள்.
வெற்றி என்பது என்ன என்பதை முடிவு செய்யுங்கள்:
வெற்றிக்கு ஒவ்வொருவர் தனித்தனியாக அர்த்தம் கொண்டிருப்பர். ஒரு சிலருக்கு அதிகம் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பது வெற்றியாக இருக்கும், ஒரு சிலருக்கு தனக்கு சுதந்திரம் கிடைப்பது சுதந்திரமாக இருக்கும். சிலருக்கு மன அமைதி, சிலருக்கு தன்னை பிறர் அறிந்து கொள்வது. இப்படி வெற்றி என்பது உங்கள் ஆராதியில் என்ன என்பதை தெரிந்து வைத்து அதற்கு ஏற்றவாறு உழைப்பை போடுங்கள்.
மேலும் படிக்க | பளிச் சருமம் வேண்டுமா? அப்போ கற்றாழையால் முகத்தைக் கழுவவும்
மேலும் படிக்க | கஷ்டமே இல்லாமல் கற்றுக்கொள்ளக்கூடிய 7 உலக மொழிகள்! என்னென்ன தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ