Traffic Challan: மெட்ரோ ரயில், பேருந்து, புறநகர் ரயில்கள் ஆகியவை இந்தியாவில் முக்கிய பொது போக்குவரத்து சேவைகளாக உள்ளன. மக்கள் கிராமங்களில் இருந்து நகர் பகுதிகளுக்கு பயணிக்க, இரு நகரங்களுக்கு இடையே பயணிக்க, பெருநகரங்களை இணைக்க இந்த பொது போக்குவரத்துகளே உதவுகின்றன.
Traffic Challan: அதிகரிக்கும் விபத்துகள்
இருப்பினும், தற்போது தனிநபர்களும் பைக், கார்கள் உள்ளிட்ட வாகனங்களை அதிகம் வாங்கி குவித்து வருகின்றனர். நகரங்களுக்குள் பயணம் செய்ய இருச்சக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் உதவுகின்றன என்பதால் பல்வேறு தரப்பினரும் அவற்றை வாங்குகிறார்கள். வாகனங்கள் அதிகரித்திருப்பதை போலவே வாகனங்களால் ஏற்படும் விபத்துகளும் அதிகரித்திருக்கின்றன.
சாலைகளில் நீங்கள் ஒழுக்கம் இன்றியும், கவனம் இன்றியும் வாகனங்களை இயக்கினால் விபத்துகளை சந்திக்க நேரிடும். அதேநேரத்தில், சாலை விதிகளையும் முறையாக பின்பற்ற வேண்டும். சாலை விதிகளை மீறினாலும் பிரச்னைதான். வாகனங்கள் அதிகரித்ததால், விபத்துகளும் அதிகரித்தன, விபத்துகளால் அதிக உயிரிழப்புகளும் ஆண்டுதோறும் பதிவாகின்றன.
Traffic Challan: அதிக அபராதம் விதிக்கப்படலாம்
இந்த சூழலில்தான், மக்கள் சாலை விதிகளை முறையாக பின்பற்றவும், சாலையில் ஒழுக்கமாக வாகனங்களை இயக்கவும் போக்குவரத்து காவலர்கள் கடும் கண்காணிப்பில் ஈடுபடுகிறார்கள். நீங்கள் சாலை விதிகளை மீறும்பட்சத்தில் உங்களுக்கு ரூ.2 லட்சம் வரை கூட அபராதம் விதிக்கப்படலாம் என்பதையும் மறக்காதீர்கள். நீங்கள் கவனக்குறைவாக வாகனம் இயக்கினாலும் சரி, ஆவணங்களை முறையாக வைத்திருக்காவிட்டாலும் சரி உங்களுக்கு பெரியளவில் அபராதம் விதிக்கப்படலாம்.
பெட்ரோல், டீசல் மட்டுமின்றி சிஎன்ஜி, எலெக்ட்ரிக் வாகனங்களின் போக்குவரத்தும் தற்போது சாலைகளில் அதிகரித்துவிட்டன. தற்போது சாலை விதிகளை மீறுபவர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் குறித்த விதிகளிலும் மாற்றம் வந்துள்ளது. மோட்டார் வாகனச் சட்டம் 2019இல் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
Traffic Challan: ரூ.2 லட்சம் அபராதம்
இதன்கீழ், சமீபத்தில் தேசிய தலைநகர் டெல்லியில் ராம் கிஷன் என்ற வாகன ஓட்டிக்கு ரூ.2 லட்சத்து 500 அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இவர் அதிகமாக சாலை விதிகளை பலமுறை மீறியதாலும், காரில் ஓவர்லோட் உடன் இயக்கியதாலும், காரின் காப்பீடு மற்றும் தகுதிச்சான்றிதழ் ஆகியவற்றையும் அவர் முறையாக வைத்திருக்காததால் அவருக்கு பெரிய தொகை அபராதமாக விதிக்கப்பட்டு, கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காரில் ஓவர்லோட் செய்தால் குறைந்தபட்சம் ரூ.20 ஆயிரம் அபராதமாக விதிக்கப்படும். அனுமதிக்கப்ட்ட எடையை விட அதிக எடை உடன் நான்கு சக்கர வாகனங்கள், கனரக வாகனங்களை இயக்கினால் ஒரு டன்னுக்கு ரூ.2 ஆயிரமும் கூடுதலாக அபராதம் விதிக்கப்படும். எனவே, விதிமுறையை மீறினால் பெரியளவில் அபராதம் விதிக்கப்படுகிறது என்பதால் கவனமுடன் இருக்க வேண்டும்.
மேலும் படிக்க | வருது புதிய ரூல்ஸ்... இனி இந்த வண்டிகளுக்கு பெட்ரோல் போட மாட்டார்கள்...!
மேலும் படிக்க | Rules Change | இந்திய ரயில்வே முக்கிய அப்டேட்! தட்கல் முறையில் அதிரடி மாற்றம்!
மேலும் படிக்க | ஆண்கள் பற்றியும் யோசிங்க... மனைவியின் டார்ச்சரால் கணவன் தற்கொலை - ஷாக்கிங் வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









