ரயில்வே விதிகள்: பயணிகளே கவனம்.. டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தால் எவ்வளவு அபராதம்

Indian Railways Important Ticket Rules: ரயிலில் பயணம் செய்வதற்கு சில விதிகள் உள்ளன. பயணம் செய்யும் பயணிகள் இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இல்லையெனில், ரயில்வேயின் அபராதம் மற்றும் தண்டனைக்கு ஆளாகலாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 3, 2025, 01:00 PM IST
  • ரயில்வேயின் அபராதம் மற்றும் தண்டனைக்கு ஆளாகலாம்.
  • ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வது குற்றம்.
  • TTE பயணியை போலீசிடம் ஒப்படைக்க முடியுமா?
ரயில்வே விதிகள்: பயணிகளே கவனம்.. டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தால் எவ்வளவு அபராதம்

Indian Railways Important Ticket Rules: இந்திய ரயில்வேயில் தினமும் கோடிக்கணக்கான மக்கள் பயணன் செய்து வருகின்றனர். மேலும் இந்திய ரயில்வே நாட்டில் உள்ள உள்ள ஏழை எளியோருக்கு உதவும் வகையில் பல்வேறு இடங்களுக்கு பயணிக்க மலிவான விலையில் டிக்கெட்களை வழங்குகிறது. அதுமட்டுமின்றி சமீப காலமாக இந்தியன் ரயில்வே பயணிகளின் வசதிக்கு ஏற்ப சில முக்கியமான மாற்றங்களைச் செய்து வருகிறது. அதேபோல் இந்தியாவின் மிகப்பெரிய நெடிவர்க்கான இந்தியன் ரயில்வேவில் பயணம் செய்வதற்கு சில விதிகள் உள்ளன. பயணம் செய்யும் பயணிகள் இந்த விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இல்லையெனில், ரயில்வேயின் அபராதம் மற்றும் தண்டனைக்கு ஆளாகலாம். 

Add Zee News as a Preferred Source

அத்தகைய சூழ்நிலையில் ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தால், நீங்கள் பெரிய சிக்கலில் மாட்டிக் கொள்ள நேரிடலாம். ஆம், ரயிலில் டிக்கெட் சோதனையின் போது TTE இடம் நீங்கள் பிடிப்பட்டால், நீங்கள் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். இந்நிலையில் ரயிலில் டிக்கெட் இல்லாமல் பிடிபட்டால் எவ்வளவு அபராதம் மற்றும் தண்டனை எத்தனை காலம் விதிக்கபடும் என்கிற முழுமையான தகவலை இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.

ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வது குற்றம்:
இந்திய ரயில்வே சட்டம் 1989 இன் படி, ரயில் டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணம் செய்வது சட்டப்பூர்வ குற்றமாகும். பயணியின் டிக்கெட்டை சரிபார்த்து, விதிகளின்படி நடவடிக்கை எடுக்க TTE க்கு முழு உரிமை உண்டு.

TTE பயணியை போலீசிடம் ஒப்படைக்க முடியுமா?
குற்றம் செய்த பயணி அபராதம் செலுத்த மறுத்தாலோ அல்லது தவறாக நடந்து கொண்டாலோ, TTE ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) அல்லது GRP (Government Railway Police)-ஐ அழைத்து பயணியை ஒப்படைக்கலாம்.

அபராதத்தை எவ்வாறு வசூலிக்கப்படும்?
TTE வழக்கமாக தட்கல் டிக்கெட் கட்டணங்களுடன் அபராதத் தொகையையும் வசூலிப்பார். பயண தூரம் மற்றும் வகுப்பைப் பொறுத்து அபராதத் தொகை தீர்மானிக்கப்படுகிறது. இதற்காக TTE ஒரு ரசீதை (Receipt) வழங்குவார்.

அபராதம் எவ்வளவு?
ரயில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தால், அந்தப் பயணத்திற்கான வழக்கமான கட்டணத்துடன் சேர்த்து, குறைந்தபட்சம் ரூபாய் 250 அபராதம் விதிக்கப்படும். பயணி நீண்ட தூரம் பயணித்தால், இந்தத் தொகை அதிகரிக்கக்கூடும்.

அபராதம் செலுத்தாவிட்டால் என்ன நடக்கும்?
பயணி அபராதம் செலுத்த மறுத்தால், TTE அவரை ரயில்வே காவல்துறையிடம் ஒப்படைக்கலாம், மேலும் வழக்குப் பதிவு செய்யப்படலாம். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் குற்றம் சாட்டப்பட்டவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தலாம்.

குழந்தைகள், முதியவர்கள் அல்லது மாணவர்கள் - விதிகள் மாறுமா?
மாணவர், மூத்த குடிமக்கள் அல்லது சலுகைப் பிரிவைச் சேர்ந்த எந்தவொரு பயணியிடமும் செல்லுபடியாகும் அடையாள அட்டை இல்லையென்றால், அவர்கள் டிக்கெட் இல்லாமல் பயணிப்பதாகக் கருதப்பட்டு அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.\

புதிய ரூல்
இதனிடையே கடந்தமாய் 1 முதல் புதிய விதி ஒன்றை ரயில்வே வெளியிட்டுள்ளது. அதன்படி உங்களிடம் வெயிட்டிங் டிக்கெட் இருந்து நீங்கள் ஏசி அல்லது ஸ்லீப்பர் பெட்டியில் பயணம் செய்வது கண்டறியப்பட்டால், அபராதம் விதிக்கப்படலாம். நீங்கள் வெயிட்டிங் டிக்கெட்டில் பயணம் செய்து முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் நுழைந்தால், கட்டாயம் நீங்கள் அபராதம் செலுத்த வேண்டி இருக்கும். ஏசி கோச்சில் வெயிட்டிங் டிக்கெட்டில் பயணம் செய்தால், ரூ.440 அபராதம் செலுத்தி அடுத்த நிலையம் வரை கட்டணம் செலுத்த வேண்டும். இருப்பினும், நீங்கள் ஸ்லீப்பர் கோச்சில் வெயிட்டிங் டிக்கெட்டில் பயணம் செய்தால், அடுத்த நிலையம் வரை கட்டணத்துடன் ரூ.250 அபராதம் செலுத்த வேண்டி இருக்கும்.

மேலும் படிக்க | Personal Loan : ரூ.20,000 சம்பளத்துக்கு தனிநபர் கடன் எவ்வளவு கிடைக்கும்?

மேலும் படிக்க | ஆதார், பான் கார்டு, ரேஷன் கார்டு இந்திய குடியுரிமை ஆவணம் இல்லை, இந்த 2 ஆவணங்கள் இருக்க வேண்டும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Vijaya Lakshmi

விஜயலட்சுமி, ஜீ தமிழ் நியூஸ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறேன். கடந்த 2016ஆம் ஆண்டு ஜீ தமிழ் நியூஸில் பணியைத் தொடங்கி உள்ளேன். தற்போது சினிமா, பொருளாதாரம், வாழ்க்கை முறை, ஜோதிடம் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். பொதுமக்களின் பணம் மற்றும் பட்ஜெட் சார்ந்த விஷயங்களை எழுதுவதில் ஆர்வம் அதிகம். சினிமா, சேமிப்பு, முதலீடு, தமிழ அரசின் முக்கிய அறிவிப்புகள் போன்ற செய்திகளை எழுதுவதிலும் ஆர்வம் அதிகம்.

...Read More

Trending News