)
Ration Card Important Announcement: நாட்டிலுள்ள ஏழை எளிய மக்களுக்கு உதவுவதற்காக அரசு தரப்பிலிருந்து ரேஷன் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசு மட்டுமல்லால், மாநில அரசுகளும் ரேஷன் கார்டு பயனாளிகளுக்கு பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது. இதில் உணவு தானியங்கள் மட்டுமல்லாமல், நிதியுதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தமிழ்நாடு சிறுபான்மை பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம், தற்போது ஆதார் மற்றும் ரேஷன் கார்டு வைத்துள்ள பெண்களுக்கு ரூ.30 லட்சம் வரை கடன் வழங்கும் திட்டம் குறித்து அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த நிதியுதவி சிறுபான்மையின பெண்கள் மற்றும் உயர்கல்வி பயிலும் மாணவியர்களுக்கு வழங்கப்படும் திட்டமாகும். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு இந்த திட்டம் பயன்படும். இந்தத் திட்டம் மூலம் தொழில் தொடங்க விரும்பும் பெண்கள், கல்விச் செலவுகளை எதிர்கொள்ளும் பெண்கள், கைவினை கலை செய்யும் பெண்கள் ஆகியோர் இந்த திட்டத்திற்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
இந்த திட்டங்கள் இரு வரம்புகளுக்காக பிரிக்கப்பட்டுள்ளது. திட்டம் ஒன்றில் வருடம் ரூ.3 லட்சத்திற்கு கீழ் வருமானம் உடைய குடும்பங்கள் கடன் பெறலாம். இதற்கான வட்டி 6 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டு அதிகபட்சமாக ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கப்படும். அதேபோல் திட்டம் இரண்டில் வருடம் ரூ.8 லட்சம் வருவோர் பொருந்துவர். இங்கு பெண்கள் 6 சதவீத, ஆண்கள் 8 சதவீத வட்டி விகிதத்தில் ரூ.30 லட்சம் வரை தனிநபருக்கு கடனாக வழங்கப்படும்.
கைவினை கலைஞர்களுக்கான விராசாத் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு 4 சதவீதம், ஆண்களுக்கு 5 சதவீதம் வட்டித்தொகையில் அதிகபட்சம் ரூ.10 லட்சம் கடன் வழங்கப்படும். கல்விக் கடன் திட்டத்தில், உயர்கல்வி பயிலும் மாணவ மாணவிகளுக்கு மூன்றடிகூட்டி ரூ.20 லட்சம் வரை, ரூ.30 லட்சம் வரை கல்வி செலவுகளை கடனாகப் பெற முடியும்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களும் அந்தந்த மாவட்டங்களில் விண்ணப்பிக்கலாம். தனிநபர் கடன் திட்டம், சுயஉதவி குழுக் கடன், கைவினை கலைஞர் கடன் திட்டம் உள்ளிட்ட கடன்களுக்கு கடன் விண்ணப்பங்களுடன் இணைத்து சமர்ப்பிக்கப்பட வேண்டிய போதிய ஆவணங்கள் "சிறுபான்மையினர் மதச்சான்றிதழ், சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிட சான்றிதழ், ஆதார் அட்டை, திட்ட அறிக்கை, வங்கிகள் கோரும் தேவையான ஆவணங்கள். கல்விக்கடனுக்கு "சிறுபான்மையினர் மதச்சான்றிதழ் / சாதிச் சான்றிதழ் வருமான சான்றிதழ் நகல் /இருப்பிட சான்றிதழ் நகல், குடும்ப அட்டை / வாழ்விட சான்று, ஆதார் நகல், பள்ளி மாற்று சான்றிதழ் நகல், உண்மைச் சான்றிதழ் அசல், கல்விக் கட்டணங்கள் செலுத்திய இரசீது- அசல், மதிப்பெண் சான்றிதழ் நகல், வங்கி கோரும் இதர ஆவணங்கள் - உள்ளிட்டவற்றை சமர்பிக்க வேண்டும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ