ரயில் பயணிகளுக்கு டிக்கெட் உடன் கிடைக்கும் முக்கிய வசதிகள்..!!
ரயில் பயணிகள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய செய்தி ஒன்று உள்ளது. ரயில் டிக்கெட்டுடன், வேறு பல வசதிகளும் கிடைக்கும் என்பதை மிகச் சிலரே அறிவார்கள்.
Indian Railways: ரயில் பயணிகள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய செய்தி ஒன்று உள்ளது. ரயில் டிக்கெட்டுடன், வேறு பல வசதிகளும் கிடைக்கும் என்பதை மிகச் சிலரே அறிவார்கள். இந்த சிறப்பு அம்சங்களைப் பற்றி அறிந்து கொள்வது உங்கள் உரிமை, என்பதோடு உங்களுக்கு எந்த நேரத்திலும் அவை தேவைப்படலாம். எனவே ரயில் டிக்கெட்டுகள் மூலம் நீங்கள் என்ன வசதிகளைப் பெற முடியும் என்பதை விரிவாக பார்க்கலாம்.
காப்பீடு
நீங்கள் ஐஆர்சிடிசி (IRCTC) இணையதளம் அல்லது மொபைல் ஆப் மூலம் டிக்கெட் புக் செய்யும் போது, உங்களிடம் காப்பீடு குறித்து கேட்கப்படும். இந்த காப்பீட்டை நீங்கள் எடுத்துக் கொண்டால் பல வகையான வசதிகள் கிடைக்கும். காப்பீட்டின் கீழ், ரயில் விபத்தில் மரணம் அல்லது தற்காலிக உடல் ஊனம் ஏற்பட்டால் ரூ. 10 லட்சம் இழப்பீடு கிடைக்கும், நிரந்தர ஊனம் ஏற்பட்டால் 7.5 லட்சம் காப்பீடு தொகை கிடைக்கும்.
ALSO READ | Indian Railways: இலவச WiFi மூலம் ‘அந்த’ வலைத்தளங்களை பார்த்தால் இனி கடுமையான நடவடிக்கை!!
மேலும் இதில், மருத்துவமனை சிகிச்சைக்காக இரண்டு லட்சம் ரூபாய் வரை அளிக்கப்படுகிறது. இது தவிர, திருட்டு, கொள்ளை ஆகியவற்றில் உடைமைகளை பறி கொடுத்தல் ஆகியவற்றின் கீழ் காப்பீட்டுத் திட்டமும் கிடைக்கிறது. இதில், முக்கிய அம்சம் என்னவென்றால், இந்த காப்பீட்டைப் பெற நீங்கள் 49 பைசா மட்டுமே செலவிட வேண்டும்.
முதலுதவி பெட்டி
ரயிலில் பயணம் செய்யும் போது உங்கள் உடல்நிலை மோசமடைந்து உங்களுக்கு மருந்து தேவைப்பட்டால், நீங்கள் ரயிலில் உள்ள TTE இருந்து முதலுதவி பெட்டியை தரும்படி கேட்கலாம். ரயிலில் பயணம் செய்யும் ஒவ்வொரு பயணிக்கும் இந்த வசதி ரயில்வேயால் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த வசதி பற்றி வெகு சிலருக்கு மட்டுமே தெரியும்.
வைஃபை (WiFi)
இந்திய ரயில்வே, தனது பயணிகளுக்கு பல வசதிகளை அளித்து வருகிறது. வைஃபை வசதியும் ரயில்வேயால் நிலையங்களில் வழங்கப்படுகிறது, அதுவும் இலவசமாக. நீங்கள் ஸ்டேஷனில் ரயிலுக்காக காத்திருக்கும் போது, ரயில்வேயின் இந்த சிறப்பு வசதியை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இருப்பினும், இந்த வசதி இப்போது எல்லா நிலையத்திலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
காத்திருப்பு அறை
பயணத்தின் போது உங்கள் ரயில் தாமதமாக வந்தால், டிக்கெட்டின் வகுப்பைப் பொறுத்து, நீங்கள் காத்தற்கான வெயிட்டிங் ரூமிற்கு சென்று ஓய்வெடுக்கலாம். இந்த வசதி ஒவ்வொரு பயணிகளுக்கும் ரயில்வேயால் வழங்கப்படுகிறது.
க்ளாக் அறை
சாமான்களை பத்திரமகா வைக்க க்ளாக் அறை வசதியும் ரயில்வே மூலம் பயணிகளுக்கு வழங்கப்படுகிறது. உங்களிடம் செல்லுபடியாகும் ரயில் டிக்கெட் இருந்தால், நீங்கள் ஸ்டேஷனில் உள்ள ஆடை அறையைப் பயன்படுத்தி உங்கள் சாமான்களை டெபாசிட் செய்யலாம். பல இடங்களுக்கு பயணம் செய்யும் போது, அனைத்தையும் எடுத்து செல்ல வேண்டிய தேவை இல்லாத போது, தங்கள் உடமைகளை இங்கு வைத்து விட்டு வசதியாக பயணம் செய்யலாம்.
ALSO READ | Indian Railways: இப்போது ‘வேறு ஒருவரும்’ உங்கள் டிக்கெட்டில் பயணம் செய்யலாம்..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR