ஆண்கள் பெண்களை விட உயரமாக இருப்பது ஏன்? காரணம் இதுதான்..

Reasons Why Most Men Are Taller Than Women : பெரும்பாலான ஆண்கள், பெண்களை விட பார்ப்பதற்கு உயரமாக இருப்பர். இதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன தெரியுமா?  

Written by - Yuvashree | Last Updated : Mar 12, 2025, 05:43 PM IST
  • பெரும்பாலான ஆண்கள் உயரமாக இருப்பார்கள்..
  • இவர்கள் பெண்களை விட உயரமாக இருப்பது ஏன்?
  • காரணம் இதுதான்
ஆண்கள் பெண்களை விட உயரமாக இருப்பது ஏன்? காரணம் இதுதான்.. title=

Reasons Why Most Men Are Taller Than Women : மனிதர்களை எடுத்துக்கொண்டால், இவர்கள் பார்ப்பதற்கு ஒவ்வொருவர் ஒவ்வொரு சைஸிலும் வெயிட்டிலும் இருப்பர். இதில், பெரும்பாலான ஆண்களை எடுத்துக்கொண்டால், அனைவரும் கிட்டத்தட்ட ஒரு பெண்ணின் சராசரி உயரத்தை விட அதிகமான உயரத்தை கொண்டவர்களாகவே இருப்பர். இப்படி, ஆண்கள், பெண்களை விட உயரமாக இருக்க சில காரணங்கள் இருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா?

மரபியல் மாற்றங்கள்:

ஒருவரின் உயரம் என்பது பெரும்பாலும் ஒருவரின் மரபியலை வைத்தே இருக்கிறது. உதாராணத்திற்கு, ஒரு தலைமுறையில் ஆண்கள் அனைவரும் உயரமாகவே இருக்கின்றனர் என்றால் அவர்களுக்கு பிறக்கும் பிள்ளை குள்ளமாக இருந்தாலும், பேரப்பிள்ளை உயரமாக இருப்பான். எனவே, இந்த உயரத்திற்கான காரணங்கள் தலைமுறையால் கூட வரலாம்.

ஹார்மோன் வேறுபாடுகள்:

டெஸ்டோஸ்டிரோன் என்ற ஹார்மோன், பெண்களை விட ஆண்களுக்கு அதிகமாகவே இருக்கும். இதனால் அவர்களுக்கு பெண்களை விட அதிகமான எலும்பு சத்து இருக்கும். இதனால் பருவமடையும் காலத்தில் பெண்களுக்கு இந்த டெஸ்டோஸ்டிரோன் குறைந்து எஸ்டோர்ஜென் அதிகமாகும். இதனால் ஆர்களால் ஆண்களுக்கு இணையான உயரத்தை அடைய முடிவதில்லை.

வளர்ச்சி காலம்:

வளர்ச்சி காலம் என்பது பெண்களை காட்டிலும் ஆண்களுக்கு அதிகமாக இருக்குமாம். பெண்களின் பருவமடையும் வயதாக 10-12 இருக்குமாம். ஆனால் ஆண்கள், 12-14 வயதில்தான் பருவமடைவதாக கூறப்படுகிறது. இவர்கள் அந்த வயதை கடந்தும் கூட வளர்ச்சி பெருவார்கள்.

அதிக வளர்ச்சி வேகம்:

பெண்களை காட்டிலும் ஆண்களுக்கு அவர்களின் வளர்ச்சியி வேகம் அதிகமாக இருக்குமாம். பருவமடையும் சமயத்தில்தான் அவர்கள் உயரம் அதிகரிக்கும் விஷயமும் நடக்கிறது. சிறுவர்களின் அதிகபட்ச வளர்ச்சி என்பது, பெண் குழந்தைகளுடன் ஒப்பிடும் போது அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.

சூழல்:

பெண்களும் ஆண்களும் வெவ்வேறு விதமான வேலைகளை செய்கின்றனர். உதாரணத்திற்கு, பெண்களுடன் ஒப்பிடுகையில் ஆண்கள் அதிக எடை தூக்கும் வேலைகளை செய்கின்றனர். அதே போல இருவரின் உணவு பழக்க வழக்கங்களும் மாறுபடும். ஆண்கள், பெண்களோடு ஒப்பிடும் போது அதிக கலோரிகளை உட்கொள்கின்றனர். அதே போல உடல் உழைப்பும் அவர்களிடம் அதிகமாக உள்ளது. இதனால் ஆண்கள் அதிகமாக வளர்ச்சி அடைந்துள்ளனர்.

எலும்பின் அமைப்பு:

ஆண்களின் எலும்புகள் நீளமானதாகவும் அடர்த்தியானதாகவும் இருக்குமாம். குறிப்பாக கால் பகுதியில் இருக்கும் எலும்புகள் அவர்களின் ஒட்டுமொத்த உயர வளர்ச்சிக்கு பங்கு வகிப்பதாக கூறப்படுகிறது. இவர்களின் அகன்ற தோள்களும் நீண்ட கால் எலும்புகளும் இவர்களை இன்னமும் உயரமாக காட்டுகிறது.

வளர்ச்சிக்கான ஹார்மோன்:

ஆண்களுக்கு வளர்ச்சி ஹார்மோன்களும், இன்சுலின் போன்ற வளர்ச்சி ஃபேக்டர் (Growth Factor 1) அதிகமாக சுரக்கும் என கூறப்படுகிறது. இதனால், அவர்களின் உயரம் அதிகரிப்பதோடு, எலும்பு வளர்ச்சியும் ஏற்படுமாம்.

பொறுப்பு துறப்பு: இங்கு எழுதப்பட்டு இருக்கும் தகவல்கள் பொதுவான தகவல்களை வைத்து எழுதப்பட்டவை ஆகும். இதற்கு ZEE MEDIA எந்த பொறுப்பும் ஏற்காது.

மேலும் படிக்க | ஆண்களுக்கு வீட்டு வேலை செய்ய பிடிக்காதது ஏன்? சைக்கலாஜிக்கல் காரணம் இதுதான்..

மேலும் படிக்க | 61 வயதிலும் அம்சமாக இருக்கும் நீடா அம்பானி! தினமும் 1 மணி நேரம் ‘இதை’ செய்வாராம்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News