Reasons Why You Should Not Store Tomatoes In Fridge : இந்திய இல்லங்களை பொறுத்தவரை, பெரும்பாலும் நாம் சமைக்க உபயோகிக்கும் காய்கறியாக இருக்கிறது, தக்காளி. இதனை சாம்பார், தக்காளி தொக்கு, சட்னி செய்ய என அனைத்திற்கு தக்காளியை உபயோகிக்கிறோம். அனைவரது இல்லங்களிலும் இப்போது ஃப்ரிட்ஜ் வந்து விட்டதை தொடர்ந்து, அதில் காய்கறிகளை ஸ்டோர் செய்யவும் ஆரம்பித்து விட்டோம். ஆனால், தக்காளியை அதிக நாட்கள் ஃப்ரிட்ஜில் வைத்திருந்தால் என்ன ஆகும் தெரியுமா?
எத்தனை நாட்கள் ஃப்ரிட்ஜில் வைத்திருக்க வேண்டும்?
நன்கு பழுத்த தக்காளியை, 5 முதல் 7 நாட்கள் வரை ஃப்ரிட்ஜில் வைத்திருக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும், தக்காளி வாங்குகையில் அதனை உடனடியாக அடுத்தடுத்த நாட்களில் உபயோகப்படுத்துவதும் நல்லது என கூறப்படுகிறது. ஏனென்றால், இவற்றை குளிரான இடத்தில் வைத்திருக்கும் போது, அதன் சுவையை கெடுத்து விடும் என கூறப்படுகிறது.
பழுக்காத தக்காளி:
பழுக்காத தக்காளிகள், வெளியில் பார்ப்பதற்கு பச்சையாக இருக்கும். இவற்றை ஃப்ரிட்ஜில் வைக்க கூடாதாம். காற்றோட்டமான பகுதியில் கொஞ்சம் மிதமான சூடு இருக்கும் அறையில் இதனை வைக்க வேண்டுமாம். அப்போதுதான் சீக்கிரமாக பழுக்குமாம். சில நாட்களிலேயே இவை சுவை மிக்க பழுத்தவையாக மாறி விடும். இப்படி பழுக்காத தக்காளியை குளிர்சாதன பெட்டியில் வைத்தால், அதன் சுவை மிகவும் டல் அடிக்குமாம்.
எங்கு வைக்க வேண்டும்?
பழுத்த தக்காளியை ஃப்ரிஜ்ஜில் வைக்கும் போது அதனை அதற்குறிய இடத்தில் வைக்க வேண்டும். அதை 2-3 நாட்களுக்கு நீங்கள் சாப்பிடப்போவது இல்லை என்றால், காய்கறிக்கென்று தனியாக இருக்கும் கம்பார்ட்மெண்டில் வைக்க வேண்டும்.
அதிக நாட்கள் வைத்தால் என்ன ஆகும்?
தக்காளி எப்போதும், ஜில்லென்று இருக்கும் ஒரு காய்கறியாகும். இதனை 7 நாட்களுக்கும் மேல் ஃப்ரிட்ஜ்ஜில் வைத்திருந்தால், அழுகிப்போக வாய்ப்புள்ளது. அதே போல, இதிலிருக்கும் வைட்டமின் சி, லைகோபைன் மற்றும் ஆண்டி ஆக்சிடன்ட்ஸ் ஆகியவை சாப்பிடுகையில் பலனளிக்காமல் போகவும் வாய்ப்புள்ளது.
ஒரு வாரத்தை தாண்டி தக்காளியை குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்தால், அவை உள்ளிருந்து அழுக வாய்ப்புள்ளது. ஆனால், இவை வெளியில் பார்க்க நன்றாக இருக்கும்.
ஃப்ரிட்ஜ்ஜில் இருக்கும் ஈரப்பதம், அதன் மீது பாசி வளர்ச்சியை அதிகரிக்கும். இந்த தக்காளியை சாப்பிடுகையில் குமட்டல், வயிற்றுப்போக்கு உள்ளிட்டவை ஏற்படலாம். அது மட்டுமல்ல, செரிமான பிரச்சனை உள்ளவர்கள் அல்லது நோயெதிர்ப்பு சக்தி இல்லாதவர்களுக்கு இது இன்னும் பெரிய ஆபத்தையும் விளைவிக்கலாம்.
நாம் சமைத்து சாப்பிடுவதே, அது சுவையாக இருக்க வேண்டும் என்கிற காரணத்தால்தான். ஆனால், இப்படி நாம் பல நாட்கள் தக்காளியை குளிர்சாதன பெட்டியில் வைத்து, பின்பு அதனை எடுத்து சமைத்து சாப்பிடும் போது, அதன் சுவை குறைந்து விடும். போதாக்குறைக்கு, தேவையற்ற உடல் நல பாதிப்புகளும் வரும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | ஹேர் கலரிங் செய்ய ஹென்னா பவுடர் யூஸ் பண்றீங்களா... இந்த செய்தி உங்களுக்குத்தான்
மேலும் படிக்க | வெயிட் ஏறாமல் இருக்க பூஜா ஹெக்டே செய்வது..கை நிறைய ‘இதை’ சாப்பிடுவாராம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









