கிரெடிட் கார்டை குளோஸ் செய்வதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்..!!

உங்கள் கிரெடிட் கார்டை முழுமையாக குளோஸ் செய்வதற்கு முன், அதன் நன்மை, தீமைகளை தெரிந்து கொள்ளுங்கள்

Written by - Karthikeyan Sekar | Last Updated : Apr 26, 2025, 05:43 PM IST
  • கிரெடிட் கார்டு நன்மை, தீமைகள்
  • கார்டு வைத்துக் கொள்ளலாமா?
  • கிரெடிட் கார்டு நன்மைகள் என்ன?
கிரெடிட் கார்டை குளோஸ் செய்வதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்..!!

Credit Card News: கிரெடிட் கார்டு என்பது ஒரு தற்காலிக கடன் வசதி, இது உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட செலவு வரம்பை (Credit Limit) வழங்குகிறது. மாத இறுதியில் வெளியிடப்படும் ஸ்டேட்மென்டின் படி, 20-25 நாட்களுக்குள் நீங்கள் செலவழித்த தொகையை திருப்பிச் செலுத்த வேண்டும். சரியான நேரத்தில் பணம் செலுத்தத் தவறினால், அதிக வட்டி மற்றும் அபராதம் விதிக்கப்படும்.

Add Zee News as a Preferred Source

கிரெடிட் கார்டை வைத்திருப்பதன் நன்மைகள்

கிரெடிட் ஸ்கோர் மேம்படும் - கிரெடிட் கார்டை தவறாமல் பயன்படுத்தி, சரியான நேரத்தில் பில் செலுத்தினால், உங்கள் கிரெடிட் ஸ்கோர் (CIBIL) அதிகரிக்கும். இது எதிர்காலத்தில் குறைந்த வட்டியில் லோன் பெற உதவும்.

ரிவார்ட்ஸ் மற்றும் கேஷ்பேக் - பல கிரெடிட் கார்டுகள் ஷாப்பிங், பெட்ரோல், பயணம் போன்றவற்றுக்கு கூடுதல் வெகுமதிகள் அளிக்கின்றன. உதாரணமாக, நீங்கள் அடிக்கடி பயணம் செய்தால், டிராவல் கிரெடிட் கார்டு வழியாக இலவச மைல்கள் அல்லது தள்ளுபடிகள் பெறலாம்.

அவசர நிதி தேவைக்கு உதவும் - எதிர்பாராத செலவுகளுக்கு கிரெடிட் கார்டு ஒரு அவசர நிதி ஆதாரமாக செயல்படும். உதாரணமாக, ₹50,000 கிரெடிட் லிமிட் இருந்தால், அவசரத்தில் அந்தத் தொகையைப் பயன்படுத்தலாம்.

கிரெடிட் கார்டை மூடுவதன் நன்மைகள்

கடன் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம் - கிரெடிட் கார்டை கட்டுப்பாடில்லாமல் பயன்படுத்துபவர்கள் கடன் சிக்கலில் சிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் கிரெடிட் ஸ்கோர் குறையும். இதுபோன்ற நபர்கள் கார்டை மூடுவது நல்லது.

பல கார்டுகளை மேனேஜ் செய்வது கடினம் - ஒரே நேரத்தில் பல கிரெடிட் கார்டுகள் இருந்தால், பில் செலுத்துவதை மறந்துவிடலாம். இதனால், அபராதம் மற்றும் வட்டி ஏற்படும். எனவே, தேவையற்ற கார்டுகளை மூடுவது நல்லது.

ஆண்டு கட்டணத்தை சேமிக்கலாம் - பெரும்பாலான கிரெடிட் கார்டுகளுக்கு ஆண்டு கட்டணம் உள்ளது. கார்டைப் பயன்படுத்தாமல் இருந்தால், இந்தக் கட்டணத்தைச் செலுத்தாமல் கார்டை மூடிவிடலாம்.

கிரெடிட் கார்டை மூடுவதா வேண்டாமா?

நீங்கள் கடனை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் அல்லது பல கார்டுகள் இருந்தால், கார்டை குளோஸ் செய்வது நல்லது. நீங்கள் கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்த விரும்பினால் அல்லது ரிவார்ட்ஸ் மற்றும் அவசர நிதி தேவைக்கு விரும்பினால் வைத்துக் கொள்ளலாம்.

மேலும் படிக்க | SIP Mutual fund: மாதம் ரூ.5,000 போதும்... ஓய்வு பெறும் போது கையில் ரூ.1 கோடி இருக்கும்

மேலும் படிக்க | Retirement Planning: ஆயிரங்களை கோடிகளாக்க... உங்களுக்கான முக்கிய முதலீட்டு டிப்ஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

...Read More

Trending News