IRCTC Updates Tatkal Booking Time : இந்திய ரயில்வே பயணிகளின் வசதிக்காக பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. குறிப்பாக டிக்கெட் புக்கிங் செய்வதில் பல சூப்பரான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு இருகிறது. டிக்கெட் புக்கிங் பொறுத்துவரை அடிக்கடி பல அப்டேட்டுகள் செய்யப்படுகின்றன. அந்தவகையில் அவசர தேவைக்காக பயணம் செய்பவர்களுக்காகவே தட்கல் டிக்கெட் சேவையை இந்திய ரயில்வே நடைமுறைப்படுத்தியுள்ளது. இந்த டிக்கெட் வேண்டும் என்பவர்கள் பயணம் செய்யும் ஒருநாளுக்கு முன்பாக காலை நேரத்தில் டிக்கெட் புக் செய்துகொள்ளலாம். ஆனால் இந்த நேரம் மாற்றப்படுவதாக அண்மையில் தகவல் பரவியது. இதற்கு ஐஆர்சிடிசி விளக்கம் கொடுத்துள்ளது.
சமீபத்தில் சமூக ஊடகங்களில் பரவிய தவறான தகவல்களுக்கு பதிலளித்துள்ள RCTC ஒரு முக்கிய தெளிவுபடுத்தலை வெளியிட்டுள்ளது. தட்கல் மற்றும் பிரீமியம் தட்கல் டிக்கெட் புக் செய்யும் நேரங்களில் எந்த மாற்றமும் இல்லை என்பதை IRCTC உறுதிப்படுத்தியுள்ளது. தவறான செய்தி என்னவென்றால், ஏப்ரல் 15, 2025 முதல், ஏசி வகுப்பு டிக்கெட் புக் செய்யும் நேரம் 11:00 AM மற்றும் ஸ்லீப்பர் வகுப்புக்கு 12:00 PM ஆக மாற்றப்படும் என்று சிலர் பகிர்ந்தனர். இது முற்றிலும் தவறானது என IRCTC மறுத்துள்ளது.
IRCTC-வின் அதிகாரப்பூர்வ அறிக்கை:
"தட்கல் மற்றும் பிரீமியம் தட்கல் டிக்கெட் புக் செய்யும் நேரத்தில் (ஏசி அல்லது நான்-ஏசி வகுப்புகளுக்கு) எந்த மாற்றமும் கருதப்படவில்லை" என ஏப்ரல் 11, 2025 அன்று IRCTC தெளிவுபடுத்தியது. ஏஜெண்டுகளுக்கான புக் செய்யும் நேரங்களிலும் மாற்றம் இல்லை.
தற்போதைய தட்கல் டிக்கெட் புக் செய்யும் நேரம்:
வகுப்பு டிக்கெட் புக் செய்யும் நேரம்
ஏசி வகுப்புகள் (2A, 3A, CC) - காலை 10:00 AM (பயண தேதிக்கு ஒரு நாள் முன்)
ஸ்லீப்பர் வகுப்பு (SL) - காலை 11:00 AM (பயண தேதிக்கு ஒரு நாள் முன்)
பிரீமியம் தட்கல் (அனைத்து வகுப்புகள்) - காலை 10:00 AM
உதாரணம்:
ஏப்ரல் 17-ல் புறப்படும் ரயிலுக்கு, ஏசி வகுப்பு டிக்கெட்டுகள் ஏப்ரல் 16 காலை 10:00 AM முதலும், ஸ்லீப்பர் டிக்கெட்டுகள் 11:00 AM முதலும் புக் செய்யலாம்.
தட்கல் டிக்கெட் குறிப்புகள்:
இரண்டாம் வகுப்பு (SL): அடிப்படை கட்டணத்தில் 10% அதிகம்.
பிற வகுப்புகள் (2A, 3A, CC): அடிப்படை கட்டணத்தில் 30% அதிகம்.
பிரீமியம் தட்கல்: டைனமிக் பிரைசிங் (Demand அதிகரிக்கும் போது விலை உயரும்).
விதிகள்:
ஒரு PNR-க்கு அதிகபட்சம் 4 டிக்கெட்டுகள் மட்டுமே புக் செய்யலாம்.
கான்பர்ம் செய்யப்பட்ட தட்கல் டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டால் பண திரும்பப்பெற முடியாது (சில விதிவிலக்குகள் உண்டு).
மேலும் படிக்க | ட்ரிப்ஸ் போலாமா...ஜோடியாக ட்ரிப்ஸ் சென்றால் இத்தனை சலுகைகள் கிடைக்குமாம்!
மேலும் படிக்க | சூரிய கிரகணம் 2025.. இந்தியாவில் எப்போது எந்த இடத்தில் எந்த தேதியில் பார்க்கலாம்?
ஏன் இந்த குழப்பம்?
சமூக ஊடகங்களில் தவறான செய்திகள் வேகமாக பரவியதால் IRCTC கொடுத்துள்ள விளக்கத்தில், இதுபோன்ற தகவல்களின் உண்மைதன்மையை அதிகாரப்பூர்வ வலைத்தளம் (irctc.co.in) அல்லது ஆப் மூலமே தகவல்களை சரிபார்க்குமாறு பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









