கூகுள் பே, போன்பே மூலம் பணம் செலுத்துகிறீர்களா? முக்கிய செய்தி உங்களுக்கு தான்

UPI payments | யுபிஐ கட்டண செயலிகளை பணப்பரிவர்த்தனைக்கு பயன்படுத்துபவர்கள் இனி கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். இதுகுறித்து கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 4, 2025, 04:40 PM IST
  • யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம்
  • மத்திய அரசு நடவடிக்கையால் அதிருப்தி
  • ஒவ்வொரு பணப்பரிவர்த்தனைக்கும் கட்டணம்
கூகுள் பே, போன்பே மூலம் பணம் செலுத்துகிறீர்களா? முக்கிய செய்தி உங்களுக்கு தான்

UPI payments Fee | யுபிஐ பயன்படுத்துபவர்களுக்கு ஒரு வருத்தமான செய்தி வந்துள்ளது. இனி யுபிஐ பேமெண்ட் செயலிகள் மூலம் பணப்பரிவர்த்தனை செய்தால் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். ஏற்கனவே மத்திய அரசு UPI சேவையில் வணிகர்களுக்கு வழங்கப்படும் மானியத்தை வெகுவாகக் குறைத்துள்ளது. எனவே, யுபிஐ பேமெண்ட் செயலி நிறுவனங்கள் இப்போது அதை வாடிக்கையாளர்களிடமிருந்து வசூலிக்கத் தயாராகி வருகின்றன. அதனால், UPI செயலியைப் பயன்படுத்துவதற்கு இனி பணம் செலுத்த வேண்டியிருக்கும். 

Add Zee News as a Preferred Source

கூகிள் பே பல பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கத் தொடங்கியுள்ளது. கூகிள் பே டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டில் 0.5 சதவீதம் மற்றும் 1 சதவீதம் கட்டணங்களை விதித்துள்ளது. Paytm மற்றும் PhonePe ஆகியவை மொபைல் ரீசார்ஜுக்கு கட்டணங்களை வசூலிக்கத் தொடங்கியுள்ளன. இதுவரை மத்திய அரசு ரூ.2,000க்குக் குறைவான பரிவர்த்தனைகளுக்கு மானியம் வழங்கி வந்தது. இதனை நிறுத்தத் தொட்டங்கியுள்ளது.

இன்றைய காலகட்டத்தில், வங்கிச் சேவையை மிக மிக எளிதாக மாற்றியிருப்பது UPI பணப்பரிவர்த்தனை. சாதாரண மக்களும் இந்த சேவையை பயன்படுத்த தொடங்கிவிட்டன. யுபிஐ பேமெண்ட் செயலி பயன்படுத்தும் ஒவ்வொருவரும் சராசரியாக, ஒவ்வொரு நாளும் UPI மூலம் சுமார் 60 முதல் 80 சதவீத பரிவர்த்தனைகளைச் செய்வதா ஆய்வில் தெரிவயந்துள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கான UPI பரிவர்த்தனைகள் நடைபெறுவதற்கு இதுவே சாட்சி. இதன் மூலம் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள பரிவர்த்தனைகள் நாள்தோறும் நடைபெறுகின்றன. 

இதனை கருத்தில் கொண்டே மானியத்தை குறைத்திருக்கிறது மத்திய அரசு. இதனால், நாடு முழுவதும் பல நிறுவனங்கள் UPI மூலம் ஆன்லைன் கட்டணத்தை அறிமுகப்படுத்தியுள்ளன. கடைகளில் ஷாப்பிங் செய்வதற்கு மட்டுமல்லாமல், பல சேவைகளுக்கும் UPI பயன்படுத்தப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில், பெட்ரோல்-டீசல், மொபைல் ரீசார்ஜ், DTH ரீசார்ஜ், பல்வேறு வகையான பில் செலுத்துதல்கள், ரயில்வே-விமான டிக்கெட்டுகள், திரைப்பட டிக்கெட்டுகள், ஃபாஸ்டேக், எரிவாயு முன்பதிவு, பணப் பரிமாற்றம், மெட்ரோ கார்டு ரீசார்ஜ், காப்பீட்டு பிரீமியம் போன்ற எல்லாவற்றுக்கு மக்கள் UPI ஐப் பயன்படுத்துகின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில், UPI கட்டண செயலிகளைப் பயன்படுத்துவதற்கான கட்டணங்கள் அமல்படுத்தப்பட்டால் ஏராளமான மக்கள் பாதிக்கப்படுவார்கள். மத்திய அரசின் இந்த முடிவு மக்களுக்கு பெரும் வருத்தத்தையும் ஏற்படுத்தும்.

மேலும் படிக்க |7 மடங்குக்கு மேல் அதிகரிக்கவுள்ளதா மாத ஓய்வூதியம்? திக்குமுக்காட வைக்கும் அப்டேட்!!

மேலும் படிக்க | இந்தியர்கள் அனைவருக்கும் பென்ஷன்: ரெடியாகும் மத்திய அரசின் புதிய ஓய்வூதியத் திட்டம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News