ரேஷன் கடை முக்கிய அப்டேட்.. இதை ஒருமுறை மட்டும் செய்தால் போதும்

Tamil Nadu Government Announcement: ரேஷன் கடைகளில் இனி கைவிரல் ரேகை ஒருமுறை பதிவு செய்தால் போதும், நீங்கள் உங்களின் ரேஷன் பொருட்களை பெறலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 23, 2025, 06:03 PM IST
  • அனைத்து பொருட்களும் குறைந்த நேரத்தில்
  • அந்தியோதயா அன்ன யோஜனா
  • மின்னணு விற்பனை எந்திரத்தில் (POS) மாற்றம்
ரேஷன் கடை முக்கிய அப்டேட்.. இதை ஒருமுறை மட்டும் செய்தால் போதும்

amil Nadu Government Announcement: ரேஷன் கார்டு மூலம் ஏழை எளிய மக்களுக்கு தற்போது மத்திய மாநில அரசு மலிவு விலையில் மளிகை பொருட்களை விநியோகித்து வருகிறது. குறிப்பாக தமிழகம் போன்ற மாநிலங்களில் பண்டிகைக் காலங்களில் தேவைப்படும் நேரங்களிலும் நிதிச் சுமையைக் குறைக்கும் வகையில் பொங்கல் தொகுப்புகள் மற்றும் நிவாரண நிதிகள் போன்ற சிறப்பு முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

Add Zee News as a Preferred Source

அத்தகைய சூழ்நிலையில் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு தமிழக அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி இனி ரேஷன் கடைகளில் ரேஷன் பொருட்களை பெற ஒருமுறை கைவிரல் ரேகை பதிவு செய்தால் போதும் என்று தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள ரேஷன் அட்டைகளில் பொருட்கள் வினியோகம் செய்யும்போது ஒன்றிய அரசு திட்ட அரிசிக்கு ஒரு முறையும், மாநில அரசு திட்ட பொருட்களுக்கு ஒரு முறையும் என மொத்தம் 2 முறை ரேஷன் அட்டைதாரர்கள் கைவிரல் ரேகை பதிவு செய்தி நிலையில் இனி வரும் காலங்களில் ஒருமுறை செய்தால் போதும் என்று கூறியுள்ளது. 

ரேஷன் கடைகளில் ரேஷன் பொருட்களை வாங்குவதற்கு ரேஷன் அட்டைதாரர்கள் அதிக நேரம் காத்திருப்பதை கருத்தில் கொண்டு தற்போது இந்த துயரத்தை குறைக்கும் வகையில் தமிழக அரசின் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதில் முக்கியமான ஒரு நடவடிக்கையாக முன்னுரிமை ரேஷன் அட்டைகள் (PHH) மற்றும் முன்னுரிமைக் ரேஷன் அட்டைகள் – அந்தியோதயா அன்ன யோஜனா (PHH.-AAY) ஆகிய ரேஷன் அட்டைகளுக்கு இனி பொருட்களை வழங்க ஒரே ஒரு முறையே கைவிரல் ரேகை அல்லது கண் கருவிழி பதிவு செய்தால் போதும் என்று தெரிவித்துள்ளது. இதற்காக தற்போது மின்னணு விற்பனை எந்திரத்தில் (POS) மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

இந்நிலையில் இதன் மூலம் இனி அனைத்து பொருட்களும் குறைந்த நேரத்தில் வழங்கப்படும், மேலும் ரேஷன் அட்டைதாரர்கள் காத்திருக்கும் நேரம் கணிசமாக குறையும் என்று தமிழக அரசின் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர். அதனுடன் இந்த முடிவால் தற்போது பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முன்னதாக முன்னுரிமை அட்டைதாரர்களுக்கு இரண்டு முறை கைவிரல் ரேகை பதிவு செய்து வந்த நிலையில் இனி வரும் மாதங்களில் ரேஷன் பொருட்களை பெற ஒரு முறை கைரேகை பதிவு செய்தால் போதும் என்பது குறிப்பிடத்தக்கது.

வீடு வீடாக ரேஷன் விநியோகம்:
இதனிடையே ரேஷன் கடைகளை அணுகுவதில் சிரமங்களை எதிர்கொள்ளும் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் (PWDs) நலனை இலக்காகக் கொண்டு, பொது விநியோக முறையின் (PDS) கீழ் அத்தியாவசியப் பொருட்களை வீடு வீடாக விநியோகிக்கும் சேவையை தமிழக அரசு அறிமுகப்படுத்த உள்ளது. இந்தத் திட்டம் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்திற்குள் தொடங்கப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க | வாக்காளர் அடையாள அட்டை வீடு தேடி வரும்... வீட்டில் இருந்த படியே எளிதாக விண்ணப்பிக்கலாம்

மேலும் படிக்க | ரயில்வே அறிவித்த மிகப்பெரிய அப்டேட்.. பயணிகளே உடனே நோட் பண்ணுங்க

மேலும் படிக்க |  தொடர்ந்த வயிறு வலி – சாதாரணமா? அல்லது எச்சரிக்கையா? மறைந்துள்ள ஆபத்துகள்..

மேலும் படிக்க | தசைகளுக்கு வலிமை தரும் உணவுப் பட்டியலில் வாழைக்காய் முதன்மை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News