நிதியாண்டின் கடைசி மாதமான மார்ச் மாதத்தில் பல முக்கிய வேலைகளுக்கான காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரி செலுத்துவோர் தங்கள் வரியைச் சேமிக்க மார்ச் 31, 2025 வரை முதலீடு செய்ய வேண்டும். இது தவிர, வரி செலுத்துவோர் மற்றும் முதலாளிகள் கையாள வேண்டிய பல பணிகள் உள்ளன. EPF உறுப்பினர்கள் காப்பீட்டுப் பலன்களைப் பெற 2025 மார்ச் 15ம் தேதிக்குள் UAN எண்ணை ஆக்டிவேட் செய்ய வேண்டும். மியூச்சுவல் ஃபண்டுகள் மற்றும் டீமேட் கணக்குகளில் நாமினிகளை உருவாக்குவதற்கான விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
1. வரி சேமிப்பு முதலீட்டுக்கான கடைசி தேதி - 31 மார்ச் 2025
வரி செலுத்துவோர் 2025 மார்ச் 31ம் தேதி வரை வரியைச் சேமிக்க முதலீடு செய்வதற்கான கடைசி வாய்ப்பு கிடைக்கும். பழைய வரி முறையைப் பின்பற்றுபவர்கள் சில சிறப்பு விலக்குகளைப் பெர இதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.
பிரிவு 80C: PPF, ELSS, NSC மற்றும் ஆயுள் காப்பீட்டு பிரீமியத்தில் முதலீடு செய்வதன் மூலம் ரூ. 1.5 லட்சம் வரை விலக்கு பெறலாம்.
பிரிவு 80D: சுகாதார காப்பீட்டு பிரீமியத்தில் வரி விலக்கு பெறலாம்.
பிரிவு 24(b): வீட்டுக் கடனுக்கு செலுத்தப்பட்ட வட்டியின் விலக்கு பெறலாம்.
பிரிவு 80CCD(1B): தேசிய ஓய்வூதிய அமைப்பில் (NPS) முதலீடு செய்வதன் மூலம் ரூ.50,000 வரை கூடுதல் விலக்கு பெறலாம்.
குறிப்பிட்ட காலக்கெடுவிற்கு முன்னர் வரி செலுத்துவோர் முதலீடு செய்யவில்லை என்றால், அவர்கள் அதிக வரி செலுத்த வேண்டியிருக்கும்.
2. EPFO உறுப்பினர்களுக்கான UAN ஆக்வேட் செய்தல் - கடைசி தேதி 15 மார்ச் 2025
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) கீழ் வரும் ஊழியர்கள் மார்ச் 15, 2025க்குள் தங்கள் யூனிவர்ஸல் கணக்கு எண்ணை (UAN) ஆக்டிவேட் வேண்டும். UAN செயல்பாட்டில் இல்லாத பட்சத்தில், ஊழியர்களின் டெபாசிட் இணைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டத்தின் (EDLI) காப்பீட்டுப் பலனை ஊழியர்கள் பெற முடியாமல் போகும். இந்த திட்டம் EPF உறுப்பினர்களுக்கு ரூ.7 லட்சம் வரை காப்பீடு வழங்குகிறது. ஒரு ஊழியர் தனது UAN எண்னை ஆக்டிவேட் செய்யவில்லை என்றால், அவர் இந்த திட்டத்தின் பலன்களைப் பெற முடியாது.
மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு: UPS அடிப்படையில் அதிரடி ஓய்வூதிய உயர்வு, கணக்கீடு இதோ
3. மியூச்சுவல் ஃபண்டுகள் மற்றும் டீமேட் கணக்குகளுக்கான புதிய நியமன விதிகள் - மார்ச் 1, 2025 முதல் பொருந்தும்
பரஸ்பர நிதிகள் மற்றும் டிமேட் கணக்குகளில் நியமனம் தொடர்பான புதிய விதிகளை செபி வெளியிட்டுள்ளது. இந்த விதிகளின்படி, முதலீட்டாளர்கள் 10 பேர் வரை நாமினிகளை சேர்க்க முடியும். சொத்துக்கள் தொடர்பான எந்தப் பிரச்சனை வரக்கூடாது என்பதற்காக, தனி நபர் கணக்குகளுக்கு நியமனம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நாமினி பான் எண், ஆதாரின் கடைசி நான்கு இலக்கங்கள் அல்லது ஓட்டுநர் உரிம எண் ஆகியவற்றை வழங்க வேண்டும். முதலீட்டாளர்கள் நாமினியுடனான உறவு மற்றும் நாமினி மைனராக இருந்தால், பிறந்த தேதியை வழங்க வேண்டும். கூட்டுக் கணக்கின் போது, ஒரு கணக்கு வைத்திருப்பவர் இறந்துவிட்டால், சொத்துக்கள் தானாகவே மற்ற கணக்கு வைத்திருப்பவருக்கு மாற்றப்படும்.
4. இன்சூரன்ஸ் பிரீமியம் செலுத்துவதற்கான UPI விதிகளில் மாற்றங்கள் மார்ச் 1, 2025 முதல் அமல்
UPI மூலம் காப்பீட்டு பிரீமியத்தை செலுத்துவதற்கான விதிகள் மாறி வருகின்றன. மார்ச் 1, 2025 முதல், காப்பீட்டு பிரீமியத்தை BIMA-ASBA சேவையின் கீழ் செலுத்தலாம்.
மேலும் படிக்க | வேலை இழந்ததால் 10 வருட தொடர் சர்வீஸ் இல்லையா... EPFO பென்ஷன் விதிகள் கூறுவது என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









