14 நாட்கள் சம்மர் டூர்: பட்ஜெட் விலையில் மணாலி, சிம்லா, ஆக்ரா, குஜராத் செல்ல சூப்பர் சான்ஸ்!

Indian Railway Summer Tour Latest: இந்தியன் ரயில்வே கோடைக்காலத்திற்கு 14 நாட்கள் சுற்றுலா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கெங்கு, எப்படி டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் என்று பார்ப்போம்.   

Written by - Umabarkavi K | Last Updated : Mar 6, 2026, 05:14 PM IST
  • ஐஆர்சிடிசி கோடைக்கால டூர் பேக்கேஜ்
  • 14 நாட்கள் சுற்றுலா திட்டம்
  • வட மாநிலங்களில் சூப்பரான டூர்
14 நாட்கள் சம்மர் டூர்:  பட்ஜெட் விலையில் மணாலி, சிம்லா, ஆக்ரா, குஜராத் செல்ல சூப்பர் சான்ஸ்!

Indian Railway Summer Tour Latest: இந்தியாவில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது  ரயில் சேவை. ரயில்களில் தினமும் கோடிக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர்.  ரயில் பயணிகளுக்காக இந்தியன் ரயில்வே பல்வேறு திட்டங்கள், சலுகைகளை அறிமுகப்படுத்தி வருகிறது. பயணிகளுக்காக பல்வேறு நாடுகள், மாநிலங்களுக்கு சுற்றுலா திட்டத்தை அறிமுகப்படுத்தி வருகிறது. 

Add Zee News as a Preferred Source

அந்த வகையில், தற்போது இந்தியன் ரயில்வே  கோடைக்காலத்திற்கு ஏற்ற சுற்றுலா திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. அதாவது, கோடைக்காலத்தில்  அடிக்கும் வெயிலுக்கு குளுகுளு சுற்றுலா செல்வது வழக்கம். பலரும் குளிர்ச்சியான பகுதிகளுக்கு கோடைக்காலத்தில் செல்வார்கள். அதுவும் மாணவர்களுக்கு விடுமுறை இருப்பதால், மே மாதத்தில் பல்வேறு இடங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும்.  இந்த  நிலையில் தான், இந்தியன் ரயில்வே பயணிகளுக்காக சுற்றுலா திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. 

IRCTC Summer Tour: 14 நாட்கள் சம்மர் டூர் பேக்கேஜ்

கோடைக்காலத்தை சரியான முறையில் கழிக்க இந்தியன் ரயில்வே சுற்றுலா திட்டத்தை கொண்டு வந்துள்ளது. சிம்லா, குலு, மணாலிக்கு 14 நாட்கள் சுற்றுலா திட்டத்தை இந்தியன் ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. சிம்லா, குலு, மணாலிக்கு 14 நாட்கள் சுற்றுலா திட்டத்தில் 33 சதவீதம் தள்ளுபடியை இந்தியன் ரயில்வே வழங்குகிறது. 

இந்த காடை சிறப்பு சுற்றுலா சேவை பாரத் கௌரவ் ரயில் திட்டத்தின் கீழ் சவுத் ஸ்டாரி ரயில் மூலம் சுற்றுலா அழைத்து செல்கிறது. மணாலி, குலு, சிம்லா சுற்றுலா ஏப்ரல் 10ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கான முன்பதிவுகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. இந்த சுற்றுலா தொகுப்பில் ஆக்ரா, டெல்லி மற்றும் அமிர்தசரஸ் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கும் செல்லலாம். 

இந்த ரயில் ஆந்திரா மற்றும் தெலங்கானவில் இருந்து பயணிகளை ஏற்றி செல்லும். பெனுகொண்டா, தர்மவரம், அனந்தபூர், கூட்டி, தோன், கர்னூல், கட்வால், அஹாபுப்நகர் மற்றும் செகந்திராபாத் ஆகிய இடங்களில் நிறுத்தப்படும்.  14 நாட்கள் பயண திட்டத்தில்  டெல்லி முழுவதும் முக்கிய இடங்களுக்கு அழைத்து செல்வார்கள். 

IRCTC Summer Tour: கட்டணம் எவ்வளவு?

மணாலி, சிம்லா, குலு சுற்றுலா தொகுப்பிற்கு  ஸ்லீப்பர் வகுப்பிற்கு ரூ.38,500, மூன்றாம் ஏசி வகுப்பிற்கு ரூ.43,300, இரண்டாம் ஏசி வகுப்பிற்கு ரூ.49,100, முதல் ஏசி வகுப்பிற்கு ரூ.58,400 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றுலா தொகுப்பில் உணவு, தங்குமிடம் ஆகியவை இடம்பெற்றிருக்கும். மேலும், சுற்றுலா இடங்களுக்கான நுழைவுக் கட்டணம், தனிப்பட்ட செலவுகளை நீங்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும்.  இதற்கான டிக்கெட்டுகளை ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது செயலி வாயிலாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டும். 

IRCTC Summer Tour:  பாரத் கௌரவ் ரயிலில் பயணம்

பாரத் கௌரவ் சுற்றுலா ரயில் என்பது இந்தியன் ரயில்வே ஒரு சிறப்பு முயற்சியாகும். இது பிரத்யேகமாக சுற்றுலா சேவை வழங்குகிறது. இந்த ரயில் 2021ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்திய பாராம்பரியம், கோவில்கள், முக்கிய சுற்றுலா தளங்களுக்கு அழைத்து செல்கிறது. ஏசி, ஏசி அல்லாத பெட்டிகள், கேளிக்கை விடுதி, உணவு ஆகியவை வழங்கப்படும்.  இந்த பயணத்தில் ரயில் கட்டணம், தங்குமிடம், உணவு, பேருந்து வசதி, சுற்றுலா வழிகாட்டீடு போன்ற  அனைத்து பேக்கேஜாக கிடைக்கும். 

கோடைக்கால விடுமுறையை சூப்பராக கழிக்க இந்த சுற்றுலா திட்டத்தின் மூலம் 14 நாட்கள் வட மாநிலங்களுக்கு சுற்றுலா செல்லலாம். ஆனால், இதற்காக தமிழகத்தில் இருந்து ஆந்திரா அல்லது தெலங்கானாவுக்கு நீங்கள் செல்ல வேண்டி இருக்கும். அங்கிருந்து தான், பாரத் கௌரவ் ரயிலில் நீங்கள் பயணிக்க முடியும். ஏனென்றால் சுற்றுலா தொகுப்பு ஆந்திராவில் இருந்து தொடங்கப்படும் நிலையில், நீங்கள் அங்கிருந்து தான் ஏற வேண்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: 5 நாட்கள் ஊட்டி, குன்னூர் டூர்! கம்மி விலையில் செல்ல சூப்பர் சான்ஸ்.. IRCTC பேக்கேஜ் இதோ

மேலும் படிக்க: கம்மி விலையில் வெளிநாடு செல்லலாம்.. IRCTC சுற்றலா.. 13 நாட்களில் 7 நாடுகள்.. முழு விவரம்!

மேலும் படிக்க: கிரகணத்தில் மகுடம் சூடும் அதிசயம், இந்த கோவில்களின் நடை சாத்தப்படாது: ஏன் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

About the Author

Trending News