ரயில் பயணிகளுக்கு ஷாக்! டிக்கெட் கேன்சல் செய்தால் பணமே வராது.. புதிய ரூல்ஸ்!

Indian Railway Refund Rules: இந்தியன் ரயில்வே  வந்தே பாரத் உள்ளிட்ட பிரீமியம் ரயில்களுக்கான ரீபண்ட் கட்டணத்தில் முக்கிய மாற்றத்தை செய்துள்ளது. இதனால்,  ரயில் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  

Written by - Umabarkavi K | Last Updated : Feb 4, 2026, 01:14 PM IST
  • ரயில் டிக்கெட் Refund விதியில் மாற்றம்
  • டிக்கெட் ரத்து செய்தால் ஒரு பைசா கூட வராது
  • பயணிகளுக்கு முக்கிய அலர்ட்
ரயில் பயணிகளுக்கு ஷாக்! டிக்கெட் கேன்சல் செய்தால் பணமே வராது.. புதிய ரூல்ஸ்!

Indian Railway Latest Refund Rules: இந்தியாவில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது இந்தியன் ரயில்வே. இந்தியாவில் தினமும் 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகிறது. தினமும் கோடிக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். கழிவறை வசதி, படுக்கை வசதி போன்றவை இருப்பதால் தொலைதூர பயணங்களுக்கு மக்கள் ரயில்களில் பயணித்து வருகின்றனர். 

Add Zee News as a Preferred Source

ரயில் கட்டணம் ரீபண்ட் விதிகளில் அதிரடி மாற்றம்

ரயில் பயணிகளின் வசதிக்காக இந்தியன் ரயில்வே பல்வேறு ரயில்களையும் அறிமுகப்படுத்தி வருகிறது. வந்தே பாரத் ரயில்கள், அம்ரித் பாரத் ரயில் போன்றவற்றை  பல்வேறு வழித்தடங்களுக்கு கொண்டு வருகிறது. ரயில்வே துறையை நவீனப்படுத்தும்  முயற்சியில்  மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதே நேரத்தில், இந்தியன் ரயில்வே ரயில் டிக்கெட் முன்பதிவில் கடுமையான விதிகளையும் கொண்டு வருகிறது.  

அதாவது, ஐஆர்சிடிசி கணக்கில் ஆதார் இணைத்த பயணிகளுக்கு மட்டும் டிக்கெட் முன்பதிவில் முன்னுரிமை கொடுத்து வருகிறது. டிக்கெட் மோசடிகளை தடுக்க இந்தியன் ரயில்வே இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த நிலையில், தற்போது டிக்கெட் ரீபண்ட் முறையில் புதிய விதிகளை கொண்டு வந்துள்ளது.   அதாவது, வந்தே பாரத் உள்ளிட்ட பிரீமியம் ரயில்களுக்கான ரீபண்ட் கட்டணத்தில் முக்கிய மாற்றத்தை செய்துள்ளது. 

புதிய விதிகள் என்ன?

புதிய விதிகளின்படி, வந்தே பாரத் மற்றும் அம்ரித் பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவைகளுக்கான டிக்கெட் ரத்து மற்றும் பணத்தை திரும்பப் பெறும் விதிகளை கடுமையாகியுள்ளது.  அதன்படி,  ரயில் புறப்படுவதற்கு  8 மணி நேரத்திற்குள் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுகளை ரத்து செய்யும் பயணிகளுக்கு எந்த பணத்தையும் திரும்பப் பெற முடியாது. 

ரயில் புறப்படுவதற்கு  72 மணி நேரத்திற்கும், 8 மணி நேரத்திற்கும் குறைவாக ரத்து செய்தால், 50 சதவீதம் கட்டணம் பிடித்தம் செய்யப்பட்டு, மீதமுள்ள தொகை அனுப்பப்படும். 72 மணி நேரத்திற்குள் ரத்து செய்தால் 25 சதவீதம் கட்டணம் பிடித்தம் செய்யப்படும்.  இந்த விதிகள் பிரீமியம் ரயில்களில் உள்ள அனைத்து வகுப்புகளுக்கு பொருந்தும். 

என்ன காரணம்?

இந்த புதிய விதிகள் கடைசி நேரம் டிக்கெட்டுகளை ரத்து செய்வதை குறைக்கவும்,  அனைத்து இருக்கைகளும் பயணிகள் பயன்படுத்துவதை உறுதி செய்யவும், ரயில்களில் வருவாயை பாதுகாக்கவும் இத்தகைய நடவடிக்கைகளை எடுக்கப்பட்டன. இந்த ரயில்களில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கு முன்பு பயணிகள் தங்கள் பயணத் திட்டங்களை இறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.  மேலும், ரயில் புறப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு டிக்கெட்டை ரத்து செய்தால் ஒரு ரூபாய் கூட உங்களால் திரும்ப பெற முடியாது என தெரிவிக்கப்பட்டது. 

வந்தே பாரத் மற்றும் அம்ரித் பாரத் ரயில்களில் ஆர்ஏசி,  காத்திருப்பு பட்டியல் என எதுவும் இல்லை. எனவே, கடைசி நேரத்தில் டிக்கெட்டுகளை ரத்து செய்தால், இருக்கைகளை நிரப்புவது கடினமாகுவதோடு, இது ரயில்வேக்கு நேரடியாக இழப்பை ஏற்படுத்துகிறது. இதனால், இந்தியன் ரயில்வே ரீபண்ட் கட்டண வதிகளில் கடுமையாகியது என்பது குறிப்பிடத்தக்கது.  

மேலும் படிக்க: சீனியர் சிட்டிசன்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு... IRCTC வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு

மேலும் படிக்க: பான் கார்டு வைத்திருப்பவர்களுக்கு அலர்ட்! ஈஸியா பெயர், முகவரியை மாற்றலாம்.. எப்படி தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News