)
IRCTC இணைய தளத்தில், ரயில்களில் டிக்கெட்டுகள் முன்பதிவு சாளரம் திறந்த சில நிமிடங்களிலேயே, டிக்கெட் அனைத்தும் புக் ஆகி, டிக்கெட் கிடைக்காமல் போகும் நிலை பலருக்கு ஏற்பட்டிருக்கும். அதிலும் தட்கல் டிக்கெட் புக் செய்யும் போது , பலருக்கு இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கும். தட்கல் டிக்கெட் வாங்குவது மிகவும் சவாலான பணியாகவே உள்ளது. இந்த செயற்கை நெருக்கடியை உருவாக்குவதற்குப் பின்னால் இருப்பவர்களை IRCTC கண்டறிந்துள்ளது.
கடந்த ஐந்து மாதங்களில் மட்டுமே, பொது மற்றும் தட்கல் டிக்கெட்டுகளுக்கான முன்பதிவு தொடங்கிய ஐந்து நிமிடங்களுக்குள் செய்யப்பட்ட டிக்கெட் முன்பதிவுகளை பகுப்பாய்வு செய்யும் போது 2.9 லட்சம் சந்தேகத்திற்கிடமான PNR எண்களைக் ரயில்வே கண்டறிந்துள்ளது. ஜனவரி மற்றும் மே மாதம் இடையே, டிக்கெட் முன்பதிவு செய்ய பயன்படுத்தப்பட்ட 2.5 கோடி சந்தேகத்திற்கிடமான IRCTC பயனர் ஐடிகளை செயலிழக்கச் செய்துள்ளதாகவும், சிறப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக 20 லட்சம் பயனர் ஐடிகளை மறுமதிப்பீட்டின் கீழ் கொண்டு வந்துள்ளதாகவும் உயர் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
IRCTC மேற்கொள்ளும் சோதனை நடவடிக்களைத் தவிர்ப்பதற்காக, மோசடி நபர்கள், தற்காலிக இணைய முகவரிகள் எனப் பயன்படுத்தி, பல போலி கணக்குகளை உருவாக்கினர். இதுபோன்ற மொத்தம் 6,800 டொமைன்கள் பிளாக் செய்யப்பட்டுள்ளன, மேலும் 134 புகார்கள் தேசிய சைபர் கிரைம் போர்ட்டலில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஆனால் முறைகேடு நடந்ததாக சந்தேகிக்கும் வழக்கமான பயணிகளுக்கு நிம்மதியையும் அளித்துள்ளது.
IRCTC எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பாக பேசிய ரயில்வே அதிகாரி ஒருவர் "தேசிய சைபர் குற்ற போர்ட்டலில் மொத்தம் 134 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் 6,800 க்கும் மேற்பட்ட மின்னஞ்சல் டொமைன்கள் பிளாக் செய்யப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை மேலும் தீவிரப்படுத்தப்படும்," என்று கூறினார்.
டிக்கெட் முன்பதிவு செய்து, அதனை டிக்கெட் கள்ளச் சந்தை மூலம் பயணிகளுக்கு அதிக விலையில், விற்கப்பட்டதாக கூறப்படுகிறது. அவசர பயணத் தேவைகள் உள்ளவர்களுக்கு தட்கல் ஒரு உயிர்நாடியாக அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கு பதிலாக, முன்பதிவு மாஃபியாக்களால், சாமானியர்கள் டிக்கெட் எடுக்க முடியாத நிலை உண்டாகியுள்ளது. "நெக்ஸஸ்" மற்றும் "சூப்பர் தட்கல்" போன்ற சட்டவிரோத மென்பொருள்கள் இந்த மோசடியின் மையமாக இருப்பதாக பரவலாக நம்பப்படுகிறது. அவை மனிதர்களை விட வேகமாக உள்நுழைந்து, படிவங்களை நிரப்பி, பணம் செலுத்தும் திறன் கொண்டவை. இதன் மூலம் டிக்கெட் நொடியில் புக் செய்யலாம்.
டிக்கெட்டுகள் விரைவாக முன்பதிவு செய்யப்படுவதில் உள்ள சிக்கல், சில வழித்தடங்கள் மற்றும் ரயில்களில் மிக அதிகம் இருப்பதாக வட்டாரங்கள் தெரிவித்தன. "எனவே, சாமானியர்கள் பாதிக்கும் வகையில், டிக்கெட் புக்கிங் அமைப்பை பாதிக்கும் பயனர்களைக் களையெடுப்பதில் கவனம் செலுத்தப்படுகிறது. மேலும், உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுகளுக்கு உண்மையான பற்றாக்குறை உள்ள வழித்தடங்களில், ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும், குறிப்பாக பீக் சீசன் எனப்படும் டிக்கெட் டிமாண்ட் அதிகம் பயணக் காலங்களில் அதிக ரயில்களை இயக்குவதற்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது," என்று ஒரு அதிகாரி கூறினார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ