ரயில் பயணத்தின் போது பயணிகளுக்கு என்னென்ன வசதிகள் இலவசமாகவும் குறைந்த கட்டணத்திலும் கிடைக்கும் என்பதை இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

இந்தியாவில் போக்குவரத்தின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் இந்திய ரயில்வே, ஒவ்வொரு இந்தியரின் வாழ்க்கையிலும் ஒரு முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. தினமும், கோடிக்கணக்கான பயணிகள் ரயில்கள் மூலம் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு பயணிக்கின்றனர். நீண்ட தூரங்களுக்கு செல்லும் போது வசதியான பயணம், மலிவான கட்டணம் போன்ற காரணங்களால், இந்தியாவின் பெரும்பாலானோர் நீண்ட தூர பயணத்திற்கு ரயிலைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
ஆனால் ரயில் பயணிகள் தங்கள் பயணத்திற்காக வாங்கும் டிக்கெட் மூலம் பல நன்மைகளையும் வசதிகளையும் இலவசமாகப் பெறுகிறார்கள் என்பது பலருக்கு தெரியாமல் உள்ளது. ரயில் பயணத்தின் போது பயணிகளுக்கு என்னென்ன வசதிகள் இலவசமாகவும் குறைந்த கட்டணத்திலும் கிடைக்கும் என்பதை இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
பயணத்தின் போது தங்குவதற்கான வசதி
நீங்கள் பயணத்தின் போது தங்குவதற்கு ஹோட்டல் அல்லது ஹோம் ஸ்டே போன்றவற்றுக்கு அதிக பணம் செலவழித்து ஹோட்டலில் தங்க வேண்டியதில்லை. உங்களின் உறுதி செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டுடன் ஐஆர்சிடிசி தங்கும் விடுதியில் தங்குவதற்கு இந்திய ரயில்வே வசதியைக் கொடுக்கிறது. அதுவும் மிகக் குறைந்த கட்டணத்தில். 24 மணிநேரத்திற்கு 150 ரூபாய் மட்டுமே செலுத்த வேண்டும்.
காத்திருப்பு அறை வசதி
ரயில் வருவதற்கு தாமதம் ஏற்பட்டால், ஐஆர்சிடிசியின் காத்திருப்பு அறையில் வசதியாக ஓய்வெடுக்கலாம்.. இங்கு ஏசி மற்றும் ஏசி இல்லாத வெயிடிங் ரூம் எனப்படும் காத்திருப்பு அறைகள் உள்ளன. உங்களின் ரயில் டிக்கெட்டைக் காட்டி இந்த வசதியை இலவசமாக பயன்படுத்தலாம்.
லாக்கர் அறை மற்றும் கிளாக் அறை
பல நேரங்களில், ரயில் பயணத்தின் போது ரயில்கள் தாமதமானாலோ, அல்லது வேறு சில காரணங்களுக்காகவோ, வெளியே சென்று தங்க நேரிடலாம். அப்போது உங்கள் சாமான்களை பாதுகாப்பாக வைக்க ரயில்வேயின் லாக்கர் அறை மற்றும் கிளாக் அறையைப் பயன்படுத்தலாம். இந்த வசதி அனைத்து நிலையங்களிலும் உள்ளது. உங்கள் லக்கேஜ்களை மிக குறைந்த கட்டணத்தில் பாதுகாப்பாக வைக்கலாம். இந்த வசதியைப் பெற உங்களிடன் கன்பர்ம் ரயில் டிக்கெட் இருக்க வேண்டும்.
வைஃபை சேவை
நீங்கள் ரயில் நிலையத்தை நேரத்திற்கு முன்பே அடைந்து, பின்னர் ஏதோ காரணத்தால் ரயில் சில மணிநேரம் தாமதமாக வந்ததை அறிந்தால், அப்படிப்பட்ட சூழ்நிலையில் நீங்கள் ரயில்வே வைஃபையை இலவசமாகப் பயன்படுத்தலாம்.
இலவச சிகிச்சை
ரயிலில் பயணம் செய்யும் போது உங்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனால், ரயில்வே உதவி எண்ணான 139 என்ற எண்ணை அழைக்கலாம். அதன் பிறகு உங்களுக்கு ரயிலில் இலவச சிகிச்சை மற்றும் மருந்துகள் கிடைக்கும்.
ஏசி பெட்டியில் பெட்ஷீட், போர்வை மற்றும் தலையணை
நீங்கள் ஏசி, இரண்டாம் ஏசி மற்றும் மூன்றாம் ஏசியில் பயணம் செய்கிறீர்கள் என்றால், பயணத்தின் போது வீட்டிலிருந்து படுக்கையை கொண்டு வர வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் ரயிலில் போர்த்திக் கொள்ள ஒரு போர்வை மற்றும் உங்கள் தலைக்குக் கீழே வைக்க ஒரு தலையணையும் கிடைக்கும். அதைப் பயணத்திற்குப் பிறகு திருப்பித் தர வேண்டும். ஆனால், கரிப் ரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் இதற்கு ரூ.25 வசூலிக்கப்படுகிறது.
உணவு வசதி
நீங்கள் ரயிலில் பயணம் செய்து, வீட்டிலிருந்து உணவை எடுத்துச் செல்ல முடியாவிட்டால், உணவு உங்கள் இருக்கைக்கே டெலிவரி செய்யப்படும். இருப்பினும், இந்த வசதி ராஜ்தானி மற்றும் வந்தே பாரத் போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட ரயில்களில் மட்டுமே கிடைக்கிறது. இந்த வசதி இலவசம் அல்ல. அதன் கட்டணம் உங்கள் டிக்கெட்டில் சேர்க்கப்படும்.
விபத்துக்களுக்கு எதிரான பயணக் காப்பீடு
ரயிலில் பயணிக்கும் ஒவ்வொரு பயணியும் பாதுகாப்பாக தங்கள் இலக்கை அடைவதை உறுதி செய்வது ரயில்வேயின் பொறுப்பாகும். ரயில் பயணத்தின் போது ஏதேனும் விபத்து ஏற்பட்டால், இந்திய ரயில்வே ஒவ்வொரு பயணிக்கும் ரூ.10 லட்சம் வரை காப்பீட்டை வழங்குகிறது. இதற்கு 45 பைசா மட்டுமே வசூலிக்கப்படுகிறது. இது முன்பதிவு செய்யும் போது உங்கள் டிக்கெட் கட்டணத்தில் சேர்க்கப்படும். மாற்றுத்திறனாளிகள் மற்றும் வேகமாக நடக்க முடியாத முதியவர்களின் வசதிக்காக ரயில்வே சக்கர நாற்காலிகள், ஸ்ட்ரெச்சர்கள் போன்ற வசதிகளை வழங்குகிறது.
ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் புகாரை பதிவு செய்யும் வசதி
ரயிலில் பயணிக்கும்போது ஏதேனும் சிக்கல்களை எதிர்கொண்டால், உங்கள் புகாரை ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் பதிவு செய்யலாம். முன்பதிவு அலுவலகம் மற்றும் முன்பதிவு அலுவலகத்தில் உள்ள புகார் புத்தகத்தில் உங்கள் பிரச்சனையை எழுதி புகார் அளிக்கலாம். இது தவிர, pgportal.gov.in அல்லது ரயில்வே ஹெல்ப்லைன் 9717630982, 011-23386203 மற்றும் 139 ஆகியவற்றைத் தொடர்பு கொண்டு உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ