Indian Railways Ticket Booking New Rules : இந்திய ரயில்வே பெண்களுக்காக செய்திருக்கும் மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நாடாளுமன்றத்தில் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில், பெண்கள் டிக்கெட் புக்கிங் செய்யும்போது விருப்ப சீட்டாக லோயர் பெர்த் தேர்வு செய்யாமலேயே அவர்களுக்கு கீழ் சீட் கொடுக்கும் வகையில் ஆட்டோமேடிங் சிஸ்டம் செட்டிங் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். எல்லா வயது பெண்களுக்கும் அப்படி கிடைக்குமா? அல்லது குறிப்பிட்ட வயதினருக்கு மட்டும் அப்படி லோயர் பெர்த் கிடைக்குமா? என்பதையும் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கியுள்ளார்.
அதாவது, 45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், மூத்த குடிமக்கள் மற்றும் திவ்யாங் பயணிகளுக்கு ரயில்களில் கீழ் பெர்த்கள் (Lower Berths) ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. ஸ்லீப்பர், AC-3 மற்றும் AC-2 வகுப்புகளில் இவர்களுக்கான இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. கர்ப்பிணி பெண்களும் இந்த வசதிக்கு தகுதியுடையவர்கள். இடங்கள் காலியாக இருந்தால், இந்த பயணிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது என அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
அவர் பேசும்போது, பல்வேறு வகுப்பு பயணிகளுக்கு அதிகபட்ச வசதிகளை வழங்க ரயில்வே முயற்சி செய்கிறது. பயணத்தின்போது ரயில்களில் கீழ் பெர்த்கள் காலியாக இருந்தால், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது என தெரிவித்தார். இது ரயில்வேயின் தானியங்கி முறையாகும். இதற்காக, வெவ்வேறு பெட்டிகளில் கீழ் பெர்த் ஒதுக்கீடு செய்யும் விதிமுறை உள்ளது. ஸ்லீப்பர் வகுப்பு ஒவ்வொரு பெட்டியிலும் 6 முதல் 7 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதேபோல், AC-3 வகுப்பில் 4 முதல் 5 இடங்கள் மற்றும் AC-2 வகுப்பில் 3 முதல் 4 கீழ் பெர்த்கள் சிறப்பு தேவை இருக்கும் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன என கூறினார்.
மேலும் அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பேசும்போது, "இந்த வசதி ரயிலில் உள்ள பெட்டிகளின் எண்ணிக்கையைப் பொறுத்து அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கும். அதிகபட்ச பயணிகள் பலன் பெற ரயில்வே முயற்சிக்கிறது. மெயில்-எக்ஸ்பிரஸ், ராஜதானி மற்றும் ஷதாப்தி ரயில்களில் திவ்யாங் ரயில் பயணிகளுக்கும் இந்த ஒதுக்கீடு முறையே பின்பற்றப்படுகிறது." என கூறியுள்ளார்.
அதனால் ரயில் பயணத்தின்போது மூத்த குடிமக்கள் மற்றும் பெண்கள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கர்ப்பிணி பெண்கள் இதுகுறித்து ரயில்வே துறையிடம் தெரிவித்தால் அவர்களுக்கு லோயர் பெர்த் சீட் கட்டாயம் ஒதுக்கி கொடுக்கப்படும். டிக்கெட் புக்கிங் செய்யும்போதே கர்ப்பிணிகள் என்பதை எப்படி குறிப்பது என்பதையும் அல்லது டிக்கெட் பரிசோதகரிடம் கூறி சிறப்பு இட ஒதுக்கீட்டை பெறுவது குறித்தும் ரயில் பயணிகள் தெரிந்து வைத்துக் கொள்வது அவசியம். ரயில் பயணிகளின்போது இந்த தகவல் உங்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ