இந்தியர்கள் இந்த 7 நாடுகளுக்கு பயணம் செய்வதைத் தவிர்க்கவும்... இந்திய தூதரகம் விடுத்துள்ள அறிவுறுத்தல்

Travel Advisory: போர் கால சூழ்நிலை, வேலைவாய்ப்பு மோசடிகள் உள்நாட்டு மோதல் அல்லது வெளிநாட்டினரை குறிவைத்து வைத்து நடத்தப்படும் வன்முறை ஆகியவற்றில் இந்திய குடிமக்கள் பாதிக்கப்படும் சம்பவங்களைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் பயண ஆலோசனையை வெளியிட்டுள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 30, 2025, 02:57 PM IST
  • பல இந்திய குடிமக்கள் துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டலுக்கு ஆளாகியுள்ளனர்.
  • இரு நாடுகளின் எல்லையோரப் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தல்.
  • இந்திய தூதரகத்துடன் தொடர்பில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியர்கள் இந்த 7 நாடுகளுக்கு பயணம் செய்வதைத் தவிர்க்கவும்... இந்திய தூதரகம் விடுத்துள்ள அறிவுறுத்தல்

போர் கால சூழ்நிலை, வேலைவாய்ப்பு மோசடிகள் உள்நாட்டு மோதல் அல்லது வெளிநாட்டினரை குறிவைத்து வைத்து நடத்தப்படும் வன்முறை ஆகியவற்றில் இந்திய குடிமக்கள் பாதிக்கப்படும் சம்பவங்களைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் பயண ஆலோசனையை வெளியிட்டுள்ளது. இந்தியர்கள் எந்த 7 இடங்களுக்கு செய்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது, அந்த ஏழு நாடுகள் எவை என்பதை அறிந்து கொள்ளலாம். 

Add Zee News as a Preferred Source

தாய்லாந்து- கம்போடியா எல்லையில் பதற்றம் ஏற்பட்ட பிறகு, உலகின் பல நாடுகள் தங்கள் குடிமக்கள் அங்கு செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளன. இந்திய தூதரகமும் தனது குடிமக்களை இந்த இரு நாடுகளின் எல்லையோரப் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இந்திய தூதரகம், இதற்கு முன்னதாகவும் போர் அல்லது உள்நாட்டு மோதலில் சிக்கியுள்ள ஈரான், இஸ்ரேல்  உள்ளிட்ட 7 நாடுகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு வெளியுறவு அமைச்சகம் முன்னர் இந்தியர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. 

கம்போடியா

சமீப காலங்களில், வேலை வாய்ப்பு வழங்குவதாக, கூறப்படும் பொய் வாக்குறுதியினால், ஈர்க்கப்பட்டு பல இந்திய குடிமக்கள் துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டலுக்கு ஆளாகியுள்ளனர். இந்த சம்பவங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய குடிமக்கள் கம்போடியாவுக்குச் (Campodia) செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஆலோசனையில், பயணிகள் வேலை வாய்ப்புகளை முழுமையாக ஆராய்ந்து இந்திய தூதரகத்துடன் தொடர்பில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மியான்மர்

தேவைப்பட்டால் மட்டுமே இந்திய குடிமக்கள் மியான்மருக்குச் செல்லுமாறு வெளியுறவு அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. உள்நாட்டு மோதல்கள் காரணமாக அடிக்கடி முற்றுகைகள் மற்றும் தகவல் தொடர்பு இடையூறு காரணமாக இங்கு நிலைமை சாதகமாக இல்லை. நாட்டில் ஏற்கனவே இருக்கும் குடிமக்களும் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து விலகி இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். 

ஈராக்

ஈராக் நீண்ட காலமாக வன்முறை மற்றும் பயங்கரவாதத்தை எதிர்கொண்டு வருகிறது. பாதுகாப்பு நிலைமையைக் கருத்தில் கொண்டு இங்கு பயணம் செய்வதற்கு எதிராக கடுமையான ஆலோசனை உள்ளது. நிலைமை மேம்படும் வரை இந்திய குடிமக்கள் தங்கள் திட்டமிட்ட பயணத்தை ரத்து செய்யவோ அல்லது ஒத்திவைக்கவோ அறிவுறுத்தப்படுகிறார்கள். 

சிரியா

பொதுமக்கள் பாதுகாப்பாக நடமாட முடியாத நாடாக சிரியா உள்ளது எனலக் கூறி, இந்த நாட்டிற்கு பயணம் செய்ய வேண்டாம் என்று இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. ஏற்கனவே நாட்டில் இருப்பவர்கள் வணிக விமானங்கள் கிடைக்கும்போது மட்டுமே பயணிக்க அறிவுறுத்தப்படுவதாகவும், மிகவும் தேவைப்பட்டால் மட்டுமே பயணிக்க அறிவுறுத்தப்படுவதாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது. 

லிபியா

உள்நாட்டு அமைதியின்மை, பயங்கரவாத நடவடிக்கைகள் மற்றும் வன்முறை காரணமாக லிபியாவில் நிலைமை ஆபத்தானதாகவே உள்ளது. இங்கு பயணம் செய்வது மிகவும் ஆபத்தானது. இந்திய குடிமக்கள் நாட்டிற்கு பயணம் செய்வதைத் தவிர்க்கவும், பாதுகாப்புத் தகவல்கள் குறித்து புதுப்பித்த நிலையில் இருக்கவும் வலியுறுத்தப்படுகிறார்கள். 

லெபனான்

நீண்ட காலமாக வன்முறை மற்றும் மோதல்கள் காரணமாக லெபனான் மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே, இந்திய குடிமக்கள் லெபனானுக்கு பயணம் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். தவிர்க்க முடியாமல் செல்ல நேரிட்டால், லெபனானுக்கு பயணம் செய்யும் போது நெரிசலான இடங்களைத் தவிர்த்து, தூதரகத்துடன் தொடர்பில் இருங்கள். 

பங்களாதேஷ்

வங்க தேசம் அல்லது பங்ககாதேஷ் நாட்டில் அதிகரித்து வரும் அரசியல் பதட்டங்கள் மற்றும் பரவலான அமைதியின்மை சம்பவங்கள் காரணமாக இந்திய குடிமக்கள் பங்களாதேஷ் பயணம் செய்வதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். தவிர்க்க முடியாமல் செல்லும் பயணிகள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் படிக்க | இந்தியாவில் உள்ள இந்த சுற்றுலா இடங்களுக்கு செல்ல... யாரானாலும் பர்மிட் தேவை

மேலும் படிக்க | Travel Tips: வெளிநாடு டூர் போக பிளானா... சிக்கல்களை தவிர்க்க... இந்த 5 ஆவணங்கள் அவசியம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News