)
இந்தியாவின் ரயில்வே, உலகின் மிகப்பெரிய வெட்வொர்க்குகளில் ஒன்றாக உள்ளது. சில நிலையங்கள் பிரிட்டிஷ் காலத்தில் இருந்து, ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக செயல்பட்டு வருவதோடு இன்றும், வசீகரம் குறையாமல் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய இடங்களில் ஒன்றாக இருக்கும் சில ரயில் நிலையங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ், மும்பை
இந்த ரயில் நிலையம் விக்டோரியன் கோதிக் கலை மற்றும் பாரம்பரிய இந்திய கட்டிடக்கலையின் அற்புத கலவையாக உள்ளது. யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக பட்டியலிடப்பட்டுள்ள இந்த நிலையம் F.W. ஸ்டீவன்ஸால் வடிவமைக்கப்பட்டு 1887ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. இந்திய கைவினைஞர்களால் உருவாக்கப்பட்ட கூர்மையான வளைவுகள், ரிப்பட் கல் குவிமாடம், வண்ண கண்ணாடிகள் ஜன்னல்கள் மும்பை நிலையத்திற்கு ஒரு தனித்துவமான அடையாளத்தை வழங்குகிறது. இந்த நிலையம் வாழ்க்கையின் வேகத்தை உங்களுக்கு உணர்த்தும். மேலும் சூரிய அஸ்தமனத்தின் போது நிலையம் தங்கமாக ஜொலிக்கும்.
நீலகிரி மலை ரயில்
இந்த அழகான குறுகிய ரயில் பாதை 1908 முதல் வேகமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. மேட்டுப்பாளையத்தை கெல்லார், குன்னூர், வெலிங்டன் மற்றும் லவ்டேல் போன்ற இடங்கள் வழியாக ஊட்டியின் மூடுபனி மலைகளுடன் இணைக்கும் இந்த பயணம், இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளை நமக்கு விருந்தாக்கும். 2005 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக முடிசூட்டப்பட்ட இந்த ரயில், மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் தேயிலையால் சூழப்பட்ட மலைகளின் அற்புதமான காட்சிகளை வழங்குகிறது. இதில் நீங்கள் 16 சுரங்கப்பாதைகள் வழியாகச் செல்வீர்கள், 250 பாலங்களைக் கடப்பீர்கள், 208 வளைவுகளைச் சுற்றி ஊசலாடுவீர்கள் .
டார்ஜிலிங் இமயமலை ரயில்வே
இந்த ரயில் பாதை 1879–1881 வரை கட்டப்பட்ட இந்தியாவின் முதல் மலை ரயில் பாதையாகும். இந்த ரயில் ஜல்பைகுரியிலிருந்து டார்ஜிலிங் வரை பயணிக்கிறது. டார்ஜிலிங் நிலையம் காலனித்துவ உறைவிடப் பள்ளிகள் மற்றும் தேயிலைத் தோட்டங்களால் சூழப்பட்டுள்ளது. மேலும் மவுண்ட் காஞ்சன்ஜங்கா நிலையத்தின் அழகை அதிகரிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. இந்தியாவின் மிக உயரமான ரயில் நிலையமான கம் நிலையம், 7,407 அடி உயரத்தில் உள்ளது. மேலும் இங்கு DHR அருங்காட்சியகமும் உள்ளது. இது பழைய புகைப்படங்கள், மாதிரிகள் மற்றும் பழமையான DHR இன்ஜின், 'பேபி சிவோக்' உள்ளிட்ட ரயில்வேயின் வரலாற்றைக் காட்சிப்படுத்துகிறது.
கல்கா சிம்லா ரயில்வே
இந்த நிலையம், சிவாலிக் மலைகள் வழியாகச் செல்லும் கல்கா-சிம்லா ரயில் பாதையால் சூழப்பட்டுள்ளது. சிம்லா நிலையம் ஆரம்பத்தில் 1903ஆம் அமைக்கப்பட்டது, அதில் மரச் சுவர்கள் மற்றும் கால்வனேற்றப்பட்ட இரும்பு கூரை இருந்தது. பின்னர் அது 1921-ல் மீண்டும் கட்டப்பட்டு இரண்டு மாடி செங்கல் கட்டிடமாக மாற்றப்பட்டது. இந்த நிலையம் தெற்கு இமயமலைக்கு அருகில் அமைந்துள்ள மரச்சட்டத்தால் ஆன காலனித்துவ தோற்றத்தைக் கொண்டுள்ளது. இந்த நடைமேடையில், பழைய செமாஃபோர் சிக்னல்கள் மற்றும் பழங்கால இமயமலை ராணி அல்லது சிவாலிக் டீலக்ஸ் பெட்டிகளைக் காணலாம். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இந்தியாவின் கோடைகால தலைநகராக இருந்த சிம்லாவின் இந்த ரயில் பாதை யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாகும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ