100 நாள்களில் 24 கிலோவை குறைத்த பெண்... கொழுப்பை கரைத்த காலை உணவு என்ன தெரியுமா?

Weight Loss Journey: இன்ஸ்டாகிராம் பிரபலமாக அறியப்படும் பெண் ஒருவர், புரதம் நிறைந்த இந்த காலை உணவை சாப்பிட்டே 100 நாள்களில் 24 கிலோ உடல் எடையை குறைத்துள்ளாராம். இதுகுறித்து அவர் கூறியதை விரிவாக இங்கு காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Feb 1, 2025, 10:47 PM IST
  • உடல் எடை குறைப்பு அனுபவத்தை கேட்பது நம்பிக்கை அளிக்கும்.
  • உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைப்பதும் அவசியம்.
  • உணவுப் பழக்கவழக்கம் மிகவும் முக்கியமானது.
100 நாள்களில் 24 கிலோவை குறைத்த பெண்... கொழுப்பை கரைத்த காலை உணவு என்ன தெரியுமா?

Weight Loss Journey: ஒரு நாளுக்கு மூன்று வேளையும் சாப்பிட வேண்டும். அதுவும் சரியான சமமான ஊட்டச்சத்து கொண்ட உணவுகளை, சரியான நேரத்தில் சரியான அளவில் சாப்பிட வேண்டும். இதில் சரியானது என்றால் என்ன என்பதை நீங்கள் ஊட்டச்சத்து நிபுணரிடம் ஆலோசனை மேற்கொண்டு உங்களுக்கு ஏற்றவாறு எடுத்துக்கொள்ள வேண்டும். சரியான உணவுப்பழக்கத்தை வைத்திருந்தால் உடல் நலனுக்கு எந்த பிரச்னையும் இருக்காது. 

Add Zee News as a Preferred Source

உணவுப் பழக்கவழக்கம் மோசமாக இருந்தால் பல்வேறு உடல்நலப் பிரச்னைகள் வரும். அதில் முக்கியமான ஒன்று, உடல் பருமன். சரியான உணவுப் பழக்கவழக்கத்தை மேற்கொள்ளாவிட்டால் வளர்சிதை மாற்றம் குறைவாகும். நீங்கள் எடுத்துக்கொள்ளும் கலோரிகள் குறையாமல் கொழுப்பாக உங்கள் உடலில் தேங்கும். இதுவே உங்களின் உடல் பருமனுக்கு முக்கிய காரணமாக அமையும். எனவே, உடல் பருமனை குறைக்க நினைத்தால் காலை உணவும் முக்கியமாகும். 

Weight Loss Journey: 100 நாள்களில் 24 கிலோ குறைவு

புரதம் உங்களது உடல் எடையை குறைப்பதில் மட்டுமின்றி உடலுக்கு தேவையான ஆற்றலையும் வழங்கும். தசை வளர்ச்சிக்கும் புரதமே முக்கியமானதாகும். அப்படியிருக்க, ஆன்லைன் உடற்பயிற்சி பயிற்றுநர் அனுஷா அகர்வால் 100 நாள்களில் உடல் எடையில் 24 கிலோவை குறைத்துள்ளார். இன்ஸ்டாகிராமில் பிரபலமான இவர், தான் எப்படி உடல் எடையை குறைத்தேன் என்பதையும், தனது உடல் கொழுப்பை கரைக்க உதவிய காலை உணவு என்ன என்பதையும் வீடியோக்களாக பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். அவர் தெரிவித்த டிப்ஸ்கள் குறித்து இங்கு காணலாம்

மேலும் படிக்க | ஒரே வருஷத்தில் 60+ கிலோவை குறைத்த பெண் - அவரின் டயட் பிளான் என்ன தெரியுமா?

Weight Loss Journey: காலை உணவு ஏன் முக்கியம்?

காலை உணவு குறித்த அவரது வீடியோ ஒன்றில் அவர் பேசியதாவது,"உங்கள் காலை உணவில் புரதம் மற்றும் நல்ல கொழுப்புச்சத்து ஆகியவை அதிகமாக இருக்க வேண்டும். ஏனெனில் நீங்கள் வெறும் வயிற்றில் இருக்கும்போது இன்சுலின் அளவு குறைவாக இருக்கும். பின்னர் முதல் உணவாக கார்போஹைட்ரேட் நிறைந்தவற்றை உட்கொள்ளும்போது, ​​இன்சுலின் அளவு அதிகரிக்கும்.

இது இன்சுலின் தொடர்ந்து ஏற்றஇறக்கமாக இருப்பது வழிவகுக்கிறது. இது கட்டுப்படுத்த முடியாமல் உங்களுக்கு பசி ஏற்படும். வயிறு நிரம்பாத உணர்வு ஏற்படும். எனவே, அதிக உண்பதால் கொழுப்பு தேங்கும், உடல் எடை அதிகரிக்கும். மனநிலையும் எப்போதும் எரிச்சலாக இருக்கும்" என்றார். 

Weight Loss Journey: அனுஷாவின் காலை உணவு என்ன?

மேலும் எப்போதும் அவர் கிரீக் யோகர்ட் உடன் பன்னீர், ப்ளூபெரீஸ், விதைகள் ஆகியவை சேர்த்த உணவையே காலையில் சாப்பிட்டு வந்துள்ளார் என்றும் தெரிவித்தார். அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள், நன்மைகளை தொடர்ந்து காணலாம். 

பன்னீரில் அதிக புரதம் இருக்கிறது. அதுமட்டுமின்றி பாஸ்பரஸ், கால்சியம் ஆகியவையும் உள்ளன. இதனால் வயிறு நிறையும். கிரீக் யோகர்டிலும் புரதச்சத்து உள்ளது. மேலும் ஆரோக்கியமான கார்ப்போஹைட்ரேட் உள்ளது. இது வளர்ச்சிதை மாற்றத்தை தூண்டி, உடல் எடையை குறைக்கும். இதில் இருக்கும் விதைகளில் ஆரோக்கியமான கொழுப்புகள், புரதம், நார்ச்சத்து, ஒமேகா-3 ஃபேட்டி அமிலங்கள் ஆகிய ஊட்டச்சத்துகள் உள்ளன. ப்ளூபெரீஸில் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் அதிகம் இருக்கின்றன. 

Weight Loss Journey: தொடர்ச்சியாக செயல்படுங்கள்

இந்த உணவு அனுஷா அகர்வாலுக்கு கைக்கொடுத்துள்ளது, அவர் 24 கிலோவை 100 நாள்களில் குறைக்க உதவி உள்ளது. அவர் இதுமட்டுமின்றி உடற்பயிற்சியையும் செய்கிறார் என்பதாலும், தொடர்ச்சியான செயல்முறையாலும் அவர் நினைத்த பலனை அடைந்துள்ளார். எனவே, நீங்களும் தொடர்ச்சியாக செயல்பட்டால் மட்டுமே இதனை சாத்தியப்படுத்த முடியும். 

(பொறுப்பு துறப்பு: இவை அனுஷா அகர்வாலின் பரிந்துரைதான். நீங்கள் உங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து என்னவென்று அறிய, ஊட்டச்சத்து நிபுணரை சந்தித்து ஆலோசனை பெற்று, அதற்கேற்ப உணவுப் பழக்கவழக்கத்தை அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதை மறக்காதீர்கள்)

மேலும் படிக்க | 3 மாதத்தில் 16 கிலோ எடை குறைந்த ஆலியா பட்! வெறும் வயிற்றில் ‘இதை’ குடிப்பாராம்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News