தலைமுடி கருகருவென வளர இந்த வீட்டு வைத்தியங்களை முயற்சிக்கவும்

How To Increase Hair Growth At Home: எலி வால் போன்ற மெல்லிய பின்னலால் நீங்கள் சங்கடம் அடைகிறீர்கள் என்றால், இந்த மலிவான வீட்டு வைத்தியத்தை முயற்சிக்கவும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 21, 2025, 07:19 PM IST
  • கிடுகிடுவென முடி வளர வீட்டு வைத்தியம்
  • ரோல் ஆன் செய்வதில் பயன்படுத்தப்படும் பொருட்கள்?
தலைமுடி கருகருவென வளர இந்த வீட்டு வைத்தியங்களை முயற்சிக்கவும்

Hair Growth With Home Remedies: நீண்ட, கருமையான மற்றும் அடர்த்தியான கூந்தல் யாருக்கு தான் பிடிக்காது? இதற்கு நாம் பல கெமிக்கல் நிறைந்த பொருட்களை பயன்படுத்துகிறோம். ஆனால் இதனால் பல பக்க விளைவுகள் ஏற்படக் கூடும். எனினும் வீட்டு வைத்தியத்தை பற்றி யோசிக்கையில் எதை எப்படி பயன்படுத்த வேண்டும். இந்த வீட்டு வைத்தியம் நினைத்த தீர்வை தருமா போன்ற பல கேள்விகள் மனதில் எழும். உன்களுக்கும் இதே போன்ற பிரச்சனைகள் இருந்தால் இந்தக் கட்டுரையைக் கட்டாயம் படிக்கவும்.

நீண்ட மற்றும் அடர்த்தியான முடியின் ரகசியத்தை இன்ஸ்டாகிராமில் @thee_soni என்ற பிரபலமான கணக்கின் வீடியோ ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவில், ஒரு பெண்ணின் தலைமுடி முழங்கால்களை விட நீளமாகவும், கருப்பாகவும், அடர்த்தியாகவும் இருப்பதை காணலாம். தான் செய்த ரோல்-ஆனைப் பயன்படுத்துவதன் மூலம், அந்தப் பெண்ணின் தலைமுடி கிடுகிடுவென முடி வளர்கிறது என்று அவர் வீடியோவில் தெரிவித்துள்ளார்.

எனவே அந்த ரோல் ஆன் என்னவென்று இந்த பதிவில் காணலாம். 

ரோல் ஆன் செய்வதில் பயன்படுத்தப்படும் பொருட்கள்?
இந்த ரோல் ஆன் செய்ய, உங்களுக்கு மிகவும் மலிவான மற்றும் அடிப்படையான விஷயங்கள் மட்டுமே தேவைப்படும். இதற்கான தேவையான பொருட்கள் என்ன என்பதை பார்ப்போம். 

கறிவேப்பிலை
செம்பருத்தி இலைகள்
புதினா இலைகள்
வெந்தயம்
அரை கப் தண்ணீர்

ரோல் ஆன் செய்யும் முறை
இதை வீட்டிலேயே தயார் செய்ய, நீங்கள் செம்பருத்தி இலைகள், புதினா இலைகள் மற்றும் கறிவேப்பிலைகளை நன்கு கழுவி மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். இந்த பேஸ்டில் வெந்தயம் மற்றும் அரை கப் தண்ணீர் சேர்த்து நல்ல பேஸ்ட் தயாரிக்க வேண்டும்.

நீங்கள் விரும்பினால், நேரத்தை மிச்சப்படுத்த இவை அனைத்தையும் ஒன்றாக அரைத்துக் கொள்ளலாம். இப்போது நீங்கள் இந்த தண்ணீரை வடிகட்டி கேஸில் சமைக்க வேண்டும். இந்த தண்ணீரை பாதியாகக் குறையும் வரை கேஸில் அப்படியே வைத்திருக்க வேண்டும்.

எப்படி பயன்படுத்துவது?
இந்த ரோலை நீங்கள் தினமும் பயன்படுத்த வேண்டும். பகல் அல்லது இரவில் உங்கள் வசதிக்கேற்ப எந்த நேரத்திலும் இந்த ரோலைப் பயன்படுத்தலாம். குறிப்பாக இந்த ரோலை முடியின் வேர்களில் சரியாகப் பயன்படுத்த வேண்டும்.

முடி வளர்ச்சியை எவ்வாறு அதிகரிப்பது?

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by The soni (@thee_soni)

ரோலைப் பயன்படுத்துவதன் நன்மைகள்
இந்த ரோலை தயாரிப்பதில் பயன்படுத்தப்படும் நாட்டுப்புற மூலிகைகள் காரணமாக, உங்கள் உச்சந்தலையில் கடுமையான வெப்பத்திலும் குளிர்ச்சியாக இருக்கும். இது தவிர, சரும உற்பத்தி அதிகரிக்கிறது மற்றும் முடி உதிர்தல் போன்ற பல பெரிய பிரச்சனைகளைத் தவிர்க்க இது உதவும். இதனால் எந்த பக்க விளைவுகளும் ஏற்படும் அபாயம் இல்லை. 

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | பருப்புகளை நொதிக்க செய்வதால்... இரட்டிப்பாகும் ஊட்டச்சத்துக்கள்... ஆய்வில் வெளியான ஆச்சரிய தகவல்

மேலும் படிக்க |  கல்லீரலில் சேரும் நச்சுக்களை நீக்க... ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் சூப்பர் உணவுகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News