Instagram Influencer Tips For Weight Loss : வயிற்று தொப்பை என்பது அவ்வளவு எளிதில் கரைக்கக்கூடிய விஷயம் அல்ல. இதனை குறைக்க வேண்டும் என்றால் டயட் மற்றும் வொர்க் அவுட் செய்ய வேண்டியது அவசியம். இப்படியே வயிறு பெரிதாக இருப்பதால் பல சமயங்களில் நம்மால் பிடித்த உடையை அணிய முடியாமல் தவிப்போம். ஆனால் இதனை குறைக்க நமக்கு ஏற்றவாறு சில பழக்க வழக்கங்களை மாற்றிக் கொண்டுமேயானால் நம்மால் தொப்பையை குறைக்க முடியும். அதற்கு ஏற்ற சில உடற்பயிற்சிகளையும் டயட் ட்ரிக்ஸ் செய்யும் ஒரு instagram பிரபலம் கூறுகிறார்.
தூக்கம் அவசியம்:
விடாப்பிடியாக இருக்கும் அடி வயிற்று தொப்பையை கரைக்க டயட் மற்றும் வர்க் அவுட்கள் தேவை என்றாலும், தினசரி 7-8 மணி நேர உறக்கமும் அவசியம். இது உங்களின் ஹார்மோன் அளவை சமநிலைப்படுத்தி வெயிட் லாஸ் செய்ய உதவுமாம். அதேபோல இதனுடன் சேர்த்து உடலில் இருக்கும் டாக்ஸின் வெளியேற நன்கு தண்ணீர் குடிப்பதும் அவசியம் என்கிறார் அந்த இன்ஸ்டா பிரபலம்.
சுத்தமான டயட்:
Calorie Deficit எனப்படும் சுத்தமான டயட்டில் இருக்க வேண்டியது அவசியம். புரதம் அதிகம் இருக்கும் உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். சர்க்கரை, இனிப்பு சேர்த்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், இரவில் தாமதமாக சாப்பிடுவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
வொர்க் அவுட்:
கார்டியோ உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். இதற்கு ஜம்பிங் ஜாக்ஸ், மௌண்டைன் க்ளைம்பர்ஸ், ஹை நீஸ் (முட்டிக்கான உடற்பயிற்சி) உள்ளிட்டவற்றை செய்ய வேண்டும்.
தொப்பையை குறைக்க..
தொப்பையை குறைக்க சில சிம்பிளான உடற்பயிற்சிகள் இருக்கின்றன.
ரிவர்ஸ் கிரின்சஸ், லெக் ரைசஸ், in and out, plank, கிக்ஸ் உள்ளிட்ட உடற்பயிற்சிகளை வீட்டிலேயே செய்யலாம். இதை தொப்பையை குறைக்க உதவும் core உடற்பயிற்சிகள் ஆகும். இவற்றால் அடிவயிற்றில் இருக்கும் கொழுப்பு குறைந்து, வயிற்று தசை குறையும்.
வாழ்க்கை முறை..
மேற்கூறியது போல தினமும் 7-9 மணி நேரம் உறங்க வேண்டும். மனநலனில் அக்கறை கொள்ள வேண்டும், நன்றாக தண்ணீர் குடிக்க வேண்டும். உடலை ஆக்டிவாக வைத்துக்கொள்வது, எப்போதும் அமர்ந்து கொள்ளாமல் இருப்பது போன்றவை காரணமாக வெயிட் லாஸ் ஆகும். இதனை, தொடர்ந்து செய்து கொண்டிருந்தால் மட்டும்தான், தொப்பையும் குறையும்.
வயிற்றில் விடாப்பிடியாக இருக்கும் தொப்பையை கரைப்பது என்பது பொறுமையாக நடைபெறும் காரியமாகும். எனவே வொர்க் அவுட் ஆரம்பித்த இரண்டு நாட்களில் பலன்களை எதிர்பார்ப்பது தவறு. எது மாறவில்லை என்றாலும் உங்கள் டயட் மற்றும் உடற்பயிற்சிகளை எப்போதும் கை விட வேண்டாம்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | 22 கிலோவை குறைத்த 2 குழந்தைகளின் தாய்... உடல் எடையை குறைத்தது எப்படி?
மேலும் படிக்க | 34 கிலோவை குறைத்த 26 வயது இளைஞன்! கொழுப்பை குறைக்க உதவிய டயட் என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ