Weight Loss Journey: உடல் எடையை குறைக்க வேண்டுமானால் எளிமையான விஷயங்களை தொடர்ச்சியாக செய்வதன் மூலம் நீங்கள் அடையலாம். ஆனால், இது எளிதான செயல்பாடு அல்ல, தொடர்ச்சியான மற்றும் ஒழுக்கமான செயல்முறை இல்லாவிட்டால் உடல் எடையை குறைப்பது சாத்தியமில்லை. மேலும், நீங்கள் குறுக்குவழியை பின்பற்றினாலும் கூட அது நீண்ட நாள்களுக்கு கைக்கொடுக்காது.
Weight Loss Journey: திருப்புமுனை சம்பவம்
அந்த வகையில், ஆரோக்கியமான வாழ்க்கைமுறைக்கு மாறினால் மட்டுமே உடல் எடை குறைப்பு சாத்தியமாகும். ஆனால் அவ்வளவு எளிதாகவும் உங்களால் ஆரோக்கியமான சூழலுக்கு 'டக்கென' மாறிவிட இயலாது. வாழ்வில் ஒரு திருப்புமுனை சம்பவம் நிகழ்ந்தால் ஒழிய, உங்களுக்கு அந்த எண்ணம் வரவே வராது.
அப்படியிருக்க, இன்ஸ்டாகிராமில் பிரபலமாக அறியப்படும் சிம்ரன் பூனியா என்ற பெண்ணுக்கு கடந்த 2020ஆம் ஆண்டு இந்தோனேஷியாவின் பாலிக்கு சுற்றுலா சென்றபோது அந்த திருப்புமுனை சம்பவம் நிகழ்ந்துள்ளது.ஆம், அவரால் அங்கு படிகட்டுகளை கூட ஏற முடியாமல் சிரமத்திற்கு ஆளாகி உள்ளார். அப்போதுதான் அவருக்கு ஆரோக்கியமான சூழலுக்கு மாறியாக வேண்டும் என யோசனை வந்துள்ளது.
Weight Loss Journey: சிரமப்பட்ட சிம்ரன்
சிறுவயதில் இருந்தே சிம்ரன் அவரது அதிக உடல் எடையால் பலராலும் கேலிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். இதனால் தன்னம்பிக்கையின்றி இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் 130 கிலோவில் இருந்துள்ளார். மேலும் சரும தொற்று பிரச்னையும் இருந்துள்ளது. நிக்கோட்டினுக்கும் இவர் அடிமையாகி உள்ளார். மற்றவர்களின் பார்வைக்கு பயந்தே பள்ளியை அதிக நாள்கள் புறக்கணித்திருக்கிறார், மற்றவர்களுடன் பழகுவதை குறைத்திருக்கிறார். அடிக்கடி உடல்நிலை சரியில்லை என பொய் சொல்லி வீட்டிலேயே இருந்திருக்கிறாராம். இதையெல்லாம் பல வருஷங்களாக மறைத்தும் வைத்திருக்கிறார்.
Weight Loss Journey: பாலி பயணத்திற்கு பின்...
நீண்ட சோகத்தில் இருந்த அவருக்கு 2020 பாலி பயணமே ஒரு திருப்புமுனையாக இருந்துள்ளது. படிக்கட்டு கூட ஏற முடியாமல் சிரமப்பட்டதை அடுத்து அவர் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு மாறியிருக்கிறார். இனிப்பு சாப்பிடுவதை தவிர்த்தது, புகைப்பிடிப்பதை தவிர்த்தது என சில அடிப்படை விஷயங்களை மாற்றியுள்ளார். அவரது தாத்தா உடன் நடைப்பயிற்சி செய்வதை தொடர்ச்சியாக செய்துவந்துள்ளார்.
உடல் எடை குறைப்பு பயணத்தை மெதுவாகவும், தெளிவாகவும் தொடங்கியிருக்கிறார். நீண்ட கால செயல்பாடே சிம்ரன் பூனியாவின் உடல் எடை குறைப்புக்கு உதவியிருக்கிறார். இவர் எவ்வித குறுக்கு வழியையோ, அதிக கட்டுப்பாடான டயட்டையோ பின்பற்றாமல் உடல் எடையை குறைத்திருக்கிறார்.
Weight Loss Journey: சிம்ரனின் ரகசியம் என்ன?
130 கிலோவில் இருந்த அவர் சிறிது சிறிதாக முயன்று உடல் எடையை குறைத்துள்ளார். முதல் நாளில் 700 மீட்டர் கூட நடக்க முடியாமல் சிரமப்பபட்டிருக்கிறார். ஆனால் அடுத்த நாளே அவர் ஒரு கிலோமீட்டரை நம்பிக்கையுடன் நடந்திருக்கிறார். கார்டியோ உடற்பயிற்சிதான் அவரின் உடல் எடை குறைப்பின் ரகசியமாக இருந்துள்து. ஓட்டப்பயிற்சி போன்ற அதீத செயல்பாடுகளை தொடங்காமல் நடைப்பயிற்சியையே பொறுமையாக நீண்ட காலத்திற்கு தொடர்ந்துள்ளார். இப்போது இவர் 60 கிலோ உடல் எடையை குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் சிம்ரன் பூனியாவின் தனிப்பட்ட உடல் எடை குறைப்பு அனுபவமாகும். இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை)
மேலும் படிக்க | 10 வயதில் 200 கிலோ... போராடி இப்போ 77 கிலோவுக்கு உடல் எடையை குறைத்தது எப்படி?
மேலும் படிக்க | 83 கிலோவில் இருந்த 'மிஸ் இந்தியா' மாடல்... 30 கிலோவை குறைக்க அவர் செய்தது என்ன?
மேலும் படிக்க | 7 மாதங்களில் 40 கிலோ எடை குறைந்தது எப்படி? சீக்ரட் பகிரும் பெண்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









