180 கிலோவில் இருந்த பெண்... 90 கிலோவை குறைக்க உதவிய டயட் என்ன தெரியுமா?

Weight Loss Journey: 180 கிலோவில் இருந்த பெண் ஒருவர் டயட், வாழ்க்கைமுறை மாற்றம் உள்ளிட்ட பல வழிகளில் முயன்று 90 கிலோவை குறைத்த அவரது அனுபவத்தை இங்கு காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Feb 22, 2025, 07:55 AM IST
  • டோரி பிலிப்ஸ் சிறு வயதிலேயே உடல் பருமனுடன் இருந்துள்ளார்.
  • மோசமான உணவுப்பழக்கம் அதை மேலும் சிக்கலாக்கி உள்ளது.
  • அதன் பின் தொடர்ச்சியாக செயல்பட்டு உடல் எடையை குறைத்துள்ளார்.
180 கிலோவில் இருந்த பெண்... 90 கிலோவை குறைக்க உதவிய டயட் என்ன தெரியுமா?

Weight Loss Journey: உடல் எடை குறைப்பு என்பது மிகவும் எளிமையான விஷயம் என்றாலும் அதில் நீங்கள் எதிர்பார்க்கும் பலனை அடைய கடுமையான முயற்சிகளையும், பயிற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். அடிவயிறு கொழுப்பை குறைப்பது உள்ளிட்ட உடலின் அதீத கொழுப்பை குறைத்து உடலை ஆரோக்கியமாக வைக்க சில நடைமுறைகளை நீங்கள் பின்பற்றி ஆக வேண்டும்.

Add Zee News as a Preferred Source

Weight Loss Journey: டோரி பிலிப்ஸின் தன்னம்பிக்கை கதை

உடல் எடை குறைப்பை மேற்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும் என்பதை மறக்காதீர்கள். அது ஒருபுறம் இருக்க, பிறரின் உடல் எடை குறைப்பு அனுபவத்தை கேட்பதும் உங்களுக்கு பெரிய தன்னம்பிக்கையை கொடுக்கும். டோரி பிலிப்ஸ் என்பவரின் உடல் எடை குறைப்பு அனுபவத்தை நீங்கள் கேட்டால் நிச்சயம் உங்களுக்கும் தன்னம்பிக்கை பிறக்கும்

சிறுவயதில் இருந்தே அதிக எடை கொண்டவராக இருந்துள்ளார் டோரி பிலிப்ஸ். உணவுப் பழக்கம், வாழக்கைமுறை மாற்றம், உடல் பருமன் அறுவை சிகிச்சை ஆகியவை மூலம் இவர் உடல் எடையை குறைத்துள்ளார்.

Weight Loss Journey: 180 கிலோ டூ 90 கிலோ

XXXXL சைஸ் ஆடையை அணிந்து வந்த டோரி பிலிப்ஸ் 180 கிலோ உடல் எடையில் இருந்துள்ளார். அதில் இருந்து 90 கிலோவை குறைத்து, புற்றுநோய் ஏற்படும் அபாயத்தையும் குறைத்துள்ளார். அவர் இதற்கு முன் மேற்கொண்ட பல்வேறு உணவுப் பழக்கவழக்கமும் அவரது உடல் எடையை அதிகரிக்கவே செய்திருக்கிறது. பதின் பருவத்திலும் டோரி 158 கிலோ வரை இருந்துள்ளார். பெரியளவில் ஆண் நண்பர்களே அவருக்கு இல்லையாம். இது அவரது தன்னம்பிக்கையை அதிகம் பாதித்திருக்கிறது.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Tori (@finding_torikins)

Weight Loss Journey: உடல் எடையை குறைத்த டோரி

இந்த பிரச்னையால் அவர் தனக்கு பிடித்த உணவுகளாக பிட்சா, பரிட்டோ, ஐஸ்கிரீம் ஆகியவற்றை அதிகம் உட்கொண்டுள்ளார். இது அவரது உடல் எடையை மேலும் அதிகமாக்கி உள்ளது. அதன்பின்னர், டோரி தனது உடல் எடையை குறைக்க முடிவெடுத்துள்ளர். அப்போது,180 கிலோவில் இருந்த அவர் 90 கிலோ வரை குறைத்துள்ளதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ச்சியாக பதிவிட்டு வந்கார். உடல் எடையை குறைக்க அவருக்கு உதவிய உணவுப்பழக்கவழக்கம் குறித்து இங்கு காணலாம்.

Weight Loss Journey: டோரி பிலிப்ஸ் பின்பற்றிய டயட்

- காலை உணவு: புரோட்டீன் காபி மற்றும் முட்டையை சாப்பிடுவாராம். வீட்டில் தயார் செய்த புரோட்டீன் பிரெட் அவகாடோ டோஸ்டை சாப்பிடுவாராம். இல்லையெனில் இரண்டு முட்டை, அவகாடோ, சர்க்கரை வள்ளிக்கிழங்கை வறுத்தது, அவகாடோ ஆகியவற்றை சாப்பிடுவாராம். 

- மதிய உணவு: ஆலிவ் ஆயில் மற்றும் பூண்டு சேர்க்கப்பட்ட புரோட்டீன் பாஸ்தா. இத்தாலியின் சீசனிங், வெங்காயம், பர்மேஸ்சன் சீஸ் ஆகியவற்றை சாப்பிடுவாராம். 

- இரவு உணவு: சிக்கன் நக்கட்ஸ் உடன் சாலடை சாப்பிடுவாராம். 

- நொறுக்குத் தீனியாக புரோட்டீன் பார், பீனட் பட்டருடன் ஆப்பிள், நட்ஸ் ஆகியவற்றை சாப்பிடுவாராம். புரோட்டீன் காபி மற்றும் தண்ணியில் கலந்த சர்க்கரை இல்லாத பானங்களை குடிப்பாராம். 

மேலும் படிக்க | 25 கிலோவை 6 மாசத்தில் குறைத்த பெண்... ஜிம்மிற்கே போகாமல் உடல் எடையை கரைத்தது எப்படி?

மேலும் படிக்க | 46 வயதிலும் சிக்குனு இருக்கும் ஜோதிகா..அதற்கு தினமும் என்ன செய்யுறாங்க தெரியுமா!

மேலும் படிக்க | 7 மாதங்களில் 32 கிலோ குறைத்த இன்ஸ்டா பிரபலம்! அவரே கொடுத்த 10 டிப்ஸ்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News