)
உலகில் இந்தியாவுடன் ஆழமான வரலாற்று மற்றும் கலாச்சார உறவுகள் ஆழமாகக் கொண்ட சில நாடுகளைப் பற்றி இந்தப் பதிவில் அறிந்து கொள்ளலாம். இந்தியாவின் கலாச்சார செல்வாக்கு, பல நூற்றாண்டு கால வர்த்தகம், ஆன்மீக பரிமாற்றம் ஆகியவற்றை கொண்டுள்ள சில நாடுகள் பற்றிய தகவல்கள் உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தலாம்.
ஆழமான இந்திய தொடர்புகளைக் கொண்ட ஐந்து நாடுகள்
மெக்சிகோ
மெக்ஸிகோ விற்கும் இந்தியாவிற்கும் பொதுவாக உள்ள விஷயங்களில் காரமான மசாலா பொருட்கள் உள்ளது பலரும் அறிந்ததே. காலனித்துவ காலத்தில் இருந்து, மெக்சிகன் மிளகாய், வெண்ணிலா மற்றும் சாக்லேட் ஆகியவை, போர்ச்சுகீசிய வணிகர்கள் வழியாக இந்தியாவிற்கு வந்தனர். அதற்கு பதிலாக மிளகு, ஏலக்காய் போன்ற இந்திய மசாலா பொருட்கள், லத்தீன் அமெரிக்காவிற்கு சென்றன. அது மட்டுமல்ல இரண்டு நாடுகளின் கலாச்சாரமும், ஆன்மீகம் மற்றும் குடும்ப வாழ்க்கைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன. இந்தியாவில் ஆயுர்வேதத்திற்கு முக்கியத்துவம் உள்ளதை போல, மெக்சிகோவில், பாரம்பரிய சிகிச்சை முறையான குராண்டரிஸ்மோ என்று சிகிச்சை முறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. மெக்ஸிகோவில் உள்ள மாநிலமான ஒக்ஸாகாவில், இந்திய சுதந்திர தினமும், யோகா தினமும் கொண்டாடப்படுகிறது.
ஜப்பான்
இந்தியா ஜப்பானுக்கு இடையிலான உறவு மிகவும் பழமையானது. கிபி 6ம் நூற்றாண்டில், புத்த மதம் முதன் முதலில் சீனா மற்றும் கொரியா வழியாக ஜப்பானுக்கு சென்றது. ஆனால் இந்தியாவில் தோன்றியது புத்த மதம். ஜப்பானிய துறவிகள், புத்த மதத்தின் பிறப்பிடமான இந்தியாவில் உள்ள போத்கயா என்ற இடத்தை, தங்கள் ஆன்மீக யாத்திரைக்கான முக்கிய இடமாக கருதுகின்றனர். அது மட்டுமல்ல1900 ஆண்டுகளில் சுதந்திரப் போராட்ட வீரர் ராஷ் பிஹாரி போஸ், இந்தியாவில் பிரிட்டிஷ் அதிகாரிகளால் வேட்டையாடப்பட்ட பின்னர் ஜப்பானில் தான் தஞ்சம் புகுந்தார். அவர் ஜப்பானிய மணந்து இந்திய தேசிய ராணுவத்தை கட்டமைக்க முயன்றார். அவருக்கான நினைவுச் சின்னம் உள்ளது.
கிரீஸ் என்னும் கிரேக்க நாடுகள்
கிரேக்க நாடுகள் மற்றும் இந்தியாவிற்கு இடையிலான தொடர்பு மிகவும் பழமையானது கிமு 326 வது ஆண்டில், அலெக்சாண்டர் வட மேற்கு இந்தியாவின் சில பகுதிகளின் மீது படையெடுத்த காலத்தில் இருந்து, இந்திய கிரேக்க கலாச்சாரங்கள் இடையில் பரிமாற்றங்கள் ஏற்பட்டன. கிரேக்க மற்றும் சமஸ்கிருத கல்வெட்டுக்களுடன் கூடிய நாணயங்கள் இந்தியா மற்றும் கிரேக்க நாடுகளுக்கு இடையிலான பிணைப்பை உறுதிப்படுத்துகிறது. இந்தியாவில் தோன்றி மத்திய ஆசியாவில் பரவலாக காணப்படும் பௌத்த கலை வடிவமான காந்தார கலை மூலமாகவும் இந்திய கிரேக்க உறவுகள் இடையிலான பிணைப்பை அறிந்து கொள்ளலாம்.
சுரினாம்
தென் அமெரிக்காவின் வடகிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள சிறிய நாடான சுரினாம் இன்னும் நாட்டில் இந்திய வம்சாவளியினர் பலரை காணலாம். 1873 மற்றும் 1916 ஆம் ஆண்டுக்கு இடையில் டச்சுக்காரர்கள், இந்தியர்கள் பலரை ஒப்பந்த தொழிலாளர்களாக சுதினா கொண்டு சென்றனர். அவர்கள் சந்ததியினர் அங்கு தொடர்ந்து இருந்து வருவதன் காரணமாக, அந்த நாட்டின் மக்கள் தொகையில் 27 % பேர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் போஜ்புரி பேசும் இந்திய நாட்டவர்கள் பெரும்பாலானவர்கள். பள்ளிகளில் ஹிந்தி மொழி கற்பிக்கப்படுகிறது. தீபாவளி போன்ற இந்திய பண்டிகைகள் அங்கு தேசிய விடுமுறை நாட்கள். சுரினாம் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பிரசாத் சந்தோகி இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் சமஸ்கிருதத்தில் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார்.
உஸ்பெகிஸ்தான்
இந்தியாவும், உஸ்பெகிஸ்தானும் மரபு ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும், நெருங்கிய தொடர்பு கொண்டது. பட்டுப்பாதை வழியாக இந்தியாவிற்கும் உஸ்பெகிஸ்தானுக்கும் இடையில் வர்த்தகங்கள் நடைபெற்றன. இந்திய வணிகர்கள், சமர்கண்டு மற்றும் புகாரா வழியாக வர்த்தக பாதைகளை அமைத்தனர். பின்னாளில், டெல்லிக்கும் தாஸ் கண்டிருக்கும் இடையே நேரடி விமான சேவைகள் கூட தொடங்கின.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ