Women's Day 2025 Clara Zetkin Is The Reason : வரும் மார்ச் 8ஆம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில், இதற்கு காரணமான ஒரு பெண்மணியை கொண்டாடியே ஆக வேண்டும் இல்லையா? அவர் யார் தெரியுமா?

Women's Day 2025 Clara Zetkin Is The Reason : மார்ச் 8ஆம் தேதி, உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. பிற தினங்களில் மகளிரை வஞ்சிக்கும் சில பேர் இந்த நாளில் மட்டும் “பெண்கள் நம் நாட்டின் கண்கள், இருப்பதிலேயே உயர்ந்த குலம் பெண் குலமே” என்றெல்லாம் ஸ்டேட்டஸ் வைக்க ஆரம்பித்து விடுவர். இன்னும் சிலர், “அதென்ன பெண்களை மட்டும் கொண்டாடும் ஒரு தினம்? ஏன் ஆண்களை இப்படி கொண்டாடுவதில்லை?” என்று இதற்கும் போட்டிக்கு வந்து விடுவர். இவர்களை எல்லாம், ஒரு பக்கம் ஓரங்கட்டி விட்டு, உண்மையாக மகளிர் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது என்பது குறித்தும், இதனை கொண்டாட யார் காரணமாக இருந்தார் என்பது குறித்தும் இங்கு பார்ப்போம்.
ஏன் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது?
பெண்களின் சாதனைகளை பறைசாற்றும் வகையிலும், பாலின சமத்துவம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், அவர்களின் உரிமைக்காக வாதிடவும் மார்ச் 8 ஆம் தேதி மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. 1910ஆம் ஆண்டு, இந்த நாளை மகளிர் தினமாக கொண்டாட வேண்டும் என க்ளாரா ஜெட்கின் கூறிய போது சம ஊதியம், வாக்களிக்கும் உரிமை மற்றும் சிறந்த வேலை நிலைமைகளை கோருவதற்கான நாளாக பார்க்கப்பட்டது. இன்று, பெண்களின் சமூக பங்களிப்புகளை அங்கீகரிப்பதற்கும், நடந்து வரும் போராட்டங்களை முன்னிலைப்படுத்துவதற்கும், எதிர்கால சந்ததியினரை ஊக்குவிப்பதற்கும் உலகளவில் இது அனுசரிக்கப்படுகிறது.
யார் அந்த பெண்?
அந்த பெண்ணின் பெயர் க்ளாரா ஜெட்கின் (Clara Zetkin). ஜெர்மன் நாட்டை சேர்ந்த இவர், சமூக சீர்திருத்தவாதி. 1910 ஆம் ஆண்டு டென்மார்க்கின் கோபன்ஹேகனில் இரண்டாவது சர்வதேச சோசலிச மகளிர் காங்கிரஸ் மாநாட்டின் போது மகளிர் தினத்தை கொண்டாட வேண்டும் என முன்மொழிந்தார்.
அந்த மாநாட்டில், மார்ச் 8ஆம் தேதிகளில் பெண்களின் உரிமைகளை நிலைநாட்டும் வகையிலும், சமத்துவத்தை மேம்படுத்தும் வகையிலும் மகளிர் தினத்தை கொண்டாட வேண்டும் என வலியுறுத்தினார். இதையடுத்து, உலகின் முதல் மகளிர் தினம் 1911ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் மாதம் கொண்டாடப்பட்டது.

பெண்களின் முன்னேற்றத்திற்காக போராடியவர்:
ஜெட்கின், மகளிர் தினத்தை கொண்டாட மட்டும் காரணமானவர் கிடையாது. பெண்களுக்கான வாக்குரிமை, மகளிர் வேலை திட்டங்கள், பாலின சமத்துவம் என பல்வேறு விஷயங்களுக்காக போராடியிருக்கிறார்.
இவர், பெண்களுக்கும் ஆண்களுக்கு நிகரான சம்பளம் வழங்க வேண்டும் என்றும், பிரசவகால விடுமுறை உள்ளிட்ட பல்வேறு உரிமைகளுக்காக குரல் கொடுத்ததாக வரலாறு கூறுகிறது. அது மட்டுமல்ல, முதலாம் உலக போருக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களுள் இவரும் ஒருவர். இதற்காக போராட்டங்கள் நடத்திய போது பல முறை கைது செய்யப்பட்டிருக்கிறார்.
ஜெர்மனியின் பல்வேறு அரசியல் தலைவர்களுடன் நெருங்கிய நட்பு பாராட்டிய பெண்களுள் இவரும் ஒருவர். அந்த நாட்டின் பெரிய தலைவர்களுள் ஒருவரான விளாடிமிர் லெனின் இவருக்கும் மிகவும் நெருங்கியவராம்.
1920ஆம் ஆண்டு, ஜெர்மனி பாராளுமன்றத்தில் இருந்த சில பெண் உறுப்பினர்களுள் இவருமொருவர். தனது இந்த பதவியின் மூலமாகத்தான் பெண்களுக்கான பல்வேறு உரிமைகளை பேசினார். பாசிசத்திற்கு எதிராகவும் இவரது குரல் ஓங்கி ஒலித்தது. ஹிட்லர், தலைவராக வளர்ந்து வந்த காலத்தில் அவரை எதிர்த்தவர்களுள் இவரும் ஒருவர். இதனால், 1933ல் நாடுகடத்தப்பட்ட இவர் தனது 75வது வயதில் இயற்கை எய்தினார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ