Indian Railway Update: தினம் தோறும் பல கோடி மக்கள் ரயிலில் பயணித்து வருகின்றனர். இதன் சேவை மற்றும் எளிமை அணுகுமுறை நாட்டும் முக்கிய நாடித் துடிப்பாக செயல் பட்டு வருகிறது. இளைஞர்கள் முதல் மூத்த குடிமக்கள் வரை ரயில் சேவைகளை பயன்படுத்தி, நீண்ட தூர பயணங்களை எளிதாக மேற்கொள்கின்றனர். இந்திய ரயில்வே பயணிகளின் வசதிக்காக அவ்வப்போது பல மாற்றங்களை செய்கிறது. ரயில் பயணிகளுக்கு உயர் பாதுகாப்பு மற்றும் வசதிகளை வழங்க பல வித புதுப்பிப்புகளை இந்திய ரயில்வே வழங்குகிறது.
இந்த நிலையில் ரயிலில் குழந்தைகளின் பயணம் தொடர்பாக இந்திய ரயில்வே பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ரயில் பயணத்தை எளிதாகவும் வசதியாகவும் மாற்றி, முன்பை விட பாதுகாப்பானதாக மாறியுள்ளது. நீங்களும் உங்கள் குழந்தைகளுடன் ரயிலில் பயணம் செய்யப் போகிறீர்கள் என்றால், இந்த முக்கிய அறிவிப்பு என்னவென்று தெரிந்துக்கொள்வோம்.
5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இலவசமாக பயணம் செய்யலாம்:
1 வயது முதல் 4 வயது வரையிலான குழந்தைகள் ரயில்வேயில் பயணம் செய்தால், முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் முன்பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணம் செய்யலாம். இருப்பினும், மக்களின் கோரிக்கையின் பேரில், கடந்த ஆகஸ்ட் 2022 ஆம் ஆண்டில் ரயில்வே விதிகளில் சில மாற்றங்களைச் செய்துள்ளது. அதன்படி 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இலவசமாகப் பயணம் செய்யலாம் ஆனால் அவர்களுக்கு முன்பதிவு இருக்கை கிடைக்காது. அதே நேரத்தில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு தனி இருக்கையை முன்பதிவு செய்ய விருப்பம் இருந்தால். இதற்கு அவர்கள் முழு கட்டணத்தையும் செலுத்த வேண்டும்.
12 வயது குழந்தைகளுக்கான விதிகள் இவை:
அதே நேரத்தில், 5 வயது முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு தனியாக ஒதுக்கப்பட்ட இருக்கை எடுக்கவில்லை என்றால், அந்தக் குழந்தைக்கு டிக்கெட் கட்டணத்தில் பாதியை நீங்கள் செலுத்த வேண்டும். குழந்தை தனது பெற்றோர் அல்லது உடன் வருபவர் இருக்கையில் பயணம் செய்யலாம். ஆனால், 5 வயது முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கான தனி இருக்கை அல்லது படுக்கையை முன்பதிவு செய்தால், முழு டிக்கெட் கட்டணத்தையும் செலுத்த வேண்டும். 5 வயது முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு முன்பதிவு பெட்டியில் தனி பெர்த் அல்லது இருக்கை தேவைப்பட்டால் அவர்களுக்கு முழு கட்டணம் வசூலிக்கப்படும் என்று கடந்த மார்ச் 31, 2016 அன்று ரயில்வே துறை அறிவித்தது. இந்த விதி 21 ஏப்ரல் 2016 முதல் அமல்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | உயர்கிறது ரயில் டிக்கெட் விலை... எவ்வளவு தெரியுமா? ஜூலை 1 முதல் அமல்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









