சென்னை டூ பத்ரி கேதார் செல்ல நல்ல வாய்ப்பு... IRCTC சார்தாம் யாத்திரை பேக்கேஜ் விபரம்

யமுனோத்ரி, கங்கோத்ரி, பத்ரிநாத், கேதார்நாத் ஆகிய பிரசித்திப் பெற்ற நான்கு இடங்களுக்கான ஆன்மீக சுற்றுலாவான சார் தாம் யாத்திரை ஒவ்வொரு வருடமும் ஏப்ரல்-மே மாதங்களில் தொடங்கி அக்டோபர் - நவம்பர் மாதம் வரை நீடிக்கும்.  

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 11, 2025, 06:54 PM IST
  • யமுனோத்ரி, கங்கோத்ரி, பத்ரிநாத், கேதார்நாத் ஆகிய பிரசித்திப் பெற்ற நான்கு இடங்களுக்கான ஆன்மீக சுற்றுலா.
  • சார் தாம் யாத்திரை பதிவு விவரங்கள்.
  • சார் தாம் யாத்திரை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல்-மே மாதங்களில் தொடங்கி அக்டோபர் - நவம்பர் வரை நீடிக்கும்.
சென்னை டூ பத்ரி கேதார் செல்ல நல்ல வாய்ப்பு... IRCTC சார்தாம் யாத்திரை பேக்கேஜ் விபரம்

IRCTC Char Dham Yatra Package:  ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த, அதே நேரத்தில் இயற்கை அழகு நிறைந்த இடத்திற்கான பயணத்தை மேற்கொள்ள விருப்பம் உள்ளவர்களுக்கு  சார் தாம் யாத்திரை சிறந்த தேர்வாக இருக்கும். யமுனோத்ரி, கங்கோத்ரி, பத்ரிநாத், கேதார்நாத் ஆகிய பிரசித்திப் பெற்ற நான்கு இடங்களுக்கான ஆன்மீக சுற்றுலாவான சார் தாம் யாத்திரை ஒவ்வொரு வருடமும் ஏப்ரல்-மே மாதங்களில் தொடங்கி அக்டோபர் - நவம்பர் மாதம் வரை நீடிக்கும்.

சென்னையில் இருந்து, பயணத்தைத் திட்டமிட விரும்பினால், ஐஆர்சிடிசியின் இந்த சிறப்புத் பேக்கேஜ் மூலம் குறைந்த கட்டணத்தில் பயணம் செய்ய இப்போதே முன்பதிவு செய்யலாம்.  ஐஆர்சிடிசி வழங்கும்13 பகல் மற்றும் 12 இரவுகள் காலத்திற்கான  சார் தாம் யாத்திரையில் தெய்வீக தரிசனம் கிடைக்கும் வாய்ப்பு கிடைக்கும். டெல்லி வரை விமானத்தில் செல்லலாம். அதன் பின் இந்த பயணம் டெல்லியில் இருந்து தொடங்கி சாலை வழியாக மேற்கொள்ளப்படும். 

சார் தாம் யாத்திர பேக்கேஜ் -CHARDHAM YATRA BY FLIGHT EX CHENNAI (SMA18)

இந்திய இரயில்வே சுற்றுலாவிற்கான சிறந்த பேக்கேஜ்களை வழங்குகிறது. சார் தாம் பயணம்  பேக்கேஜின் பெயர் ஐஆர்சிடிசி சார்தாம் CHARDHAM YATRA BY FLIGHT EX CHENNAI, பேக்கேஜிற்கான குறியீடு NDH24.

சார் தாம் யாத்ரா பதிவு விவரங்கள்

சார் தாம் யாத்திரை சென்னையிலிருந்து விமானம் மூலம் டெல்லி பின், அங்கிருந்து ஹரித்வார், யமுனோத்ரி, வடக்கு காசி, கங்கோத்ரி, குப்ட்காஷி, சீதாபூர், கேதார்நாத், கௌரிகுண்ட், பத்ரிநாத், ருத்ரபிரயாகை போன்ற ஆன்மீக மற்றும் அழகான இடங்களுக்குச் செல்ல வாய்ப்பு கிடைக்கும். IRCTC இணையதளத்தைப் பார்வையிடுவதன் மூலம் 13 பகல் மற்றும் 12 இரவுகள் கொண்ட இந்த பேக்கேஜை எளிதாக பதிவு செய்யலாம்.

பேகேஜில் கிடைக்கும் வசதிகள்

சார் தாம் பேகேஜில், சென்னையிலிருந்து டெல்லிக்கான விமான கட்டணம், நீங்கள் 13 பகல்கள் மற்றும் 12 இரவுகள் மிகவும் நல்ல இடங்களில் தங்குவதற்கான வசதியைப் பெறுவீர்கள். இதனுடன், எல்லா இடங்களையும் சுற்றி பார்ப்பதற்கான சிறந்த பஸ் வசதியையும் பெறுவீர்கள். பேக்கேஜில் நீங்கள் காலை மற்றும் இரவு உணவைப் பெறுவீர்கள். நீங்கள் மதிய உணவை ஏற்பாடு செய்து கொடுக்கப்படும். ஆனால் அதற்கு நீங்கள் பணம் செலுத்த வேண்டும். இது தவிர, மீதி ஏதேனும் செலவு இருந்தால், அதை நீங்கள் செலுத்த வேண்டும்.

சார் தாம் யாத்திரை கட்டண விவரங்கள்

ஐஆர்சிடிசியின் சிறப்பு சார் தாம் யாத்திரை செல்ல, ஒருவராக மும் பதிவு செய்ய  ரூ.72500. அதேசமயம் இருவராக செல்ல ரூ.62100, மூன்று பேராக செல்ல என்றால் ரூ.60,200. மேலும் விபரங்களை ஐஆர்சிடிசி தளத்தில் பெறலாம்.

மேலும் படிக்க | குறைந்த செலவில் சிங்கப்பூர் - மலேஷியா டூர் போகலாம்... அசத்தலான IRCTC பேக்கேஜ்!

மேலும் படிக்க | கோடை விடுமுறையில்... கேரளா டூர் செல்ல IRCTC வழங்கும் சிறந்த பேக்கேஜ் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News