)
IRCTC Kerala Tour Package: எனும இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகக்கு சுற்றுலா அழைத்து செல்கிறது. குறைந்த செலவில் பல்வேறு மாநிலங்களுக்கு சுற்றுலு அழைத்து செல்கிறது. அந்த வகையில், தற்போது முக்கியமான அறிவிப்பை ஐஆர்சிடிசி வெளியிட்டுள்ளது. அதாவது, ஐஆர்சிடிசி அண்டை மாநிலமான கேரளாவுக்கு கம்மி செலவில் சுற்றுலா அழைத்து செல்கிறது. இதுகுறித்து விரிவாக இந்த தொகுப்பில் பார்ப்போம்.
ஐஆர்சிடிசி அகமதாபாத்தில் இருந்து கேரளாவுக்கு சுற்றுலா அழைத்து செல்கிறது. செப்டம்பர் 13 முதல் செப்டம்பர் 18ஆம் தேதி வரை சுற்றுலா அழைத்து செல்கிறது. ஐஆர்சிடிசியின் கேரளாவுக்கு 5 இரவுகள், 6 நாட்களை உள்ளடக்கியது. ஐஆர்சிடிசி சுற்றுலா பேக்கேஜ் திட்டத்தில் கொச்சி, மூணார், தேக்கடி, குமரக்கோணம், திருவனந்தபுரத்திற்கு சுற்றுலு அழைத்து செல்கிறது.
முதல் நாள் கொச்சி விமான நிலையத்தில் இருந்து உங்கள் பயணம் தொடங்கும். கொச்சி விமான நிலையத்தில் இருந்து ஹோட்டலுக்கு செல்வீர்கள். அங்கு ஹோட்டலில் ஓய்வு எடுத்துவிட்டு, மாலலையில் சொச்சியில் உள்ள சுற்றுலா இடங்களை பார்வையிடுவீர்கள்.
இரண்டாவது நாள் கொச்சியில் இருந்து மூணாறுக்கு புறப்படுவீர்கள். அன்றைய தினம் மாலை ஹோட்டலில் செக் இன் செய்துவிட்டு, அங்கு இரவு தங்குவீர்கள். மறுநாள் காலை உணவிற்குப் பிறகு, மூணாரில் நாள் முழுவதும் சுற்றிப் பார்க்கப் புறப்படுங்கள். மூணாறில் உள்ள நீர்வீழ்ச்சி, இயற்கைசூழல் நிறைந்த இடங்களை பார்வையிடுவீர்கள்.
அடுத்த நாள் மூணாறில் இருநது தேக்கடிக்கு செல்வீர்கள். தேங்கடியில் உள்ள பெரியார் வனவிலங்கு சரணாலயம், தோட்டங்கள், படகு சவாரி போன்றவற்றுக்கு செல்வீர்கள். ஐந்தாவது நாள் தேக்கடியில் இருந்து குமரகோம் செல்வீர்கள். குமரகோமில் படகு இல்லத்தில் இரவு தங்குவீர்கள். அங்கு சுற்றி பார்த்துவிட்டு, ஆறாவது குமரகோமில் இருந்து திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு சென்றடைவீர்கள். அவ்வளவு தான் 6 நாட்கள் கேரளா சுற்றுலா இத்துடன் நிறைவடைகிறது.
அகமதாபாத்தில் இருந்து கேரளாவுக்கு ஐஆர்சிடிசி சுற்றுலா கட்டணம் ஒரு நபருக்கு ரூ.65,200 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரண்டு பேருக்கு ரூ.49,700, மூன்று பேருக்கு ரூ.48,100 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், 5 முதல் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு படுக்கையுடன் ரூ.43,900, படுக்கை இல்லாமல் ரூ.29,700 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த சுற்றுலா கட்டணத்தில் அகமதாபாத்தில் இருந்து கேரளாவுக்கு விமான டிக்கெட் கட்டணம், கொச்சியில் 1 இரவுகள், மூணாறில் 2 இரவுகள், தேக்கடியில் 1 இரவு, குமரகோமில் 1 இரவு என தங்குமிடம் வழங்கப்படும். கேரளா சுற்றுலாவின் 6 நாட்கள் காலை மற்றும் இரவு உணவு வழங்கப்படும். பயணக் காப்பீடு ஆகியவை சுற்றுலா கட்டணத்தில் உள்ளடக்கியது.
மேலும், உங்கள் தனிப்பட்ட செலவுகள், சுற்றுலா இடங்களுக்கான நுழைவுக் கட்டணம், மதியம் உணவு போன்றவற்றை நீங்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளா சுற்றுலு செல்ல விருப்பப்படுபவர்கள் ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது செயலி வாயிலாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.