கம்மி செலவில் குடும்பத்துடன் கொடைக்கானல் டூர்! IRCTC சூப்பர் திட்டம்.. முழு விவரம்!

IRCTC Kodaikanal Tour Package: குறைந்த செலவில் கொடைக்கானல் செல்ல ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ்களை அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்து முழுமையாக இங்கு பார்ப்போம்

Written by - Umabarkavi K | Last Updated : Dec 13, 2025, 05:40 PM IST
  • குறைந்த செலவில் கொடைக்கானல் டூர்
  • குடும்பத்துடன் பயணிக்க செம்ம சான்ஸ்
  • ஐஆர்சிடிசி சூப்பர் திட்டம்
 கம்மி செலவில் குடும்பத்துடன் கொடைக்கானல் டூர்! IRCTC சூப்பர் திட்டம்.. முழு விவரம்!

IRCTC Kodaikanal Tour Package:  நாட்டில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது ரயில் சேவை. ரயில்களில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். பயணிகளின் சீரான பயணித்திற்காக  இந்தியன் ரயில்வே பல்வேறு வசதிகளையும் செய்து வருகிறது. குறிப்பாக,  டிக்கெட் முன்பதிவில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. இந்தியன் ரயில்வே துறைக்கு கீழ் செயல்படும் IRCTC டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு மட்டுமின்றி, சுற்றுலா தொகுப்புகளை வழங்கி வருகிறது. முதலில் ஆன்மீக தலங்களுக்கு  மட்டுமே சுற்றுலா தொகுப்புகளை வழங்கி வந்த நிலையில், தற்போது பிரபல சுற்றுலா தலங்களுக்கும் பேக்கேஜ்களையும் வழங்கி வருகிறது.

Add Zee News as a Preferred Source

கம்மி செலவில் கொடைக்கானல் டூர்

இந்த நிலையில், தற்போது கொடைக்கானலுக்கு சுற்றுலா பேக்கேஜ்களை அறிமுகம் செய்து வருகிறது.  திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு வார இறுதி நாட்கள், தொடர் விடுமுறை, பண்டிகை நாட்களில் சுற்றுலா பயணிகள் அதிகமானோர் வருகை தருவார்கள். இதனை கருத்தில் கொண்டு, ஐஆர்சிடிசி குறைந்த செலவில் டூர் பேக்கேஜ்களை அறிமுகம் செய்துள்ளது. 

சென்னையில் இருந்து புறப்பட்டு, கொடைக்கானல், மதுரை ஆகிய மாவட்டங்களில் உள்ள முக்கியமான சுற்றுலா தலங்களை பார்த்து வரும் வகையில், சுற்றுலா பேக்கேஜை ஐஆர்சிடிசி அறிமுகப்படுத்தியுள்ளது. சென்னையில் இருந்து மாலை 5.50 மணிக்கு புறப்படும் ரயில், மறுநாள் காலை 3.20 மணிக்கு மதுரைக்கு சென்றடைவீர்கள். அங்கிருந்து கொடைக்கானலுக்கு கார் மூலம் செல்வீர்கள். அங்கு கொடைக்கானலில் ஹோட்டலில் தங்கிவிட்டு, அதே நாளில் கிரீன் வேலி வியூ, கோக்கர்ஸ் வாக், பில்லர் ராக் ஆகியவற்றைப் பார்வையிடவும்.

இரவில் அதே ஹோட்டலில் தங்கி, மறுநாள் அப்பர் லேக் வியூ மற்றும் படகு சவாரிகள், பைன் காடு, குணா குகைகள் மற்றும் அருங்காட்சியகத்தை பார்வையிடலாம். அன்றைய இரவு அதே ஹோட்டலில் ஓய்வு எடுக்கலாம். பிறகு, காலை 09:00 மணிக்கு கொடைக்கானலில் இருந்து ஹோட்டலில் செக்அவுட். மதுரைக்கு புறப்படுவீர்கள். வழியில் வெள்ளி அருவி, மீனாட்சி அம்மன் கோயில், திருமலை நாயக்கர் மஹால் ஆகியவற்றை பார்வையிட்டு, இரவு 11.35 மணிக்கு மதுரை ரயில் நிலையத்தில் இருந்து சென்னைக்கு புறப்படுவீர்கள். காலை 6 மணிக்கு எழும்பூருக்கு ரயில் வந்தடையும்.

கட்டணம் எவ்வளவு?

இந்த தொகுப்பில் நான்கு நாட்கள் கொடைக்கானலில் பயணம் செய்வீர்கள். இதில் இரண்டு இரவு தங்கும் விடுதி, தனியாக வாகனம், டிராவல் இன்சூரன்ஸ், ஜிஎஸ்டி, ரயில் கட்டணம் போன்றவை சுற்றலா பேக்கேஜில் இடம்பெறுகிறது. இதில் குறிப்பாக, மூன்று வேளை உணவையும் நீங்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும்இதற்கு கட்டணமாக குறைந்தபட்சம் 9,105 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிகபட்சமாக ரூ.24,450 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முழுயைமாக அறிந்து ஐஆர்சிடிசி அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிட்டவும். இந்த இணையதளம் வாயிலாக மட்டுமே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: பான் கார்டு செல்லாது! ஆதார் கார்டில் பெயர் மாற்ற புது ரூல்ஸ்.. அதிரடி அறிவிப்பு

மேலும் படிக்க: குண்டா இருக்கீங்களா? இனி கவலையே இல்லை! இந்த 4 உணவுகள் போதும், டக்குனு குறைக்கலாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News