Waiting List Confirm Tips: உங்களுக்கான ரயில் டிக்கெட் வெயிட்டிங் லிஸ்டில் இருந்தால், ஈஸியாக நீங்கள் உறுதி செய்துவிடலாம். எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Waiting List Confirm Tips: இந்தியாவில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது ரயில் சேவை. ரயில்களில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். குறைவான கட்டணம், கழிவறை வசதி போன்றவை இருப்பதால் பயணிகள் ரயில்களில் பயணித்து வருகின்றனர். ஆனால், ரயில்களில் டிக்கெட் கிடைப்பது அவ்வளவு ஈஸியான விஷயம் இல்லை. தொடர் விடுமுறை, விசேஷ தினங்களில் பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்படும். இதனால், பலருக்கும் டிக்கெட் வெயிட்டிங் லிஸ்டில் இருக்கும். ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது பலருக்கும் வரும் பெரிய பிரச்னையாக வெயிட்டிங் லிஸ்ட் இருக்கிறது. இதனால், கடைசி நேரம் வரை பயணிகள் பயத்திலே இருப்பார்கள். இதற்கான தான், ஐஆர்சிடிசி Vikalp என்ற அம்சத்தை கொண்டு வந்தது.
Vikalp அம்சத்தை இந்தியன் ரயில்வே பல ஆண்டுகளுக்கு முன்பே கொண்டு வந்தது. இந்த அம்சம் ஒரு ரயில் டிக்கெட் காத்திருப்போர் பட்டியலில் இருந்தால், ஆப்ட் விகல்ப் மூலம், அதை உறுதிப்படுத்த முடியும். இந்த அம்சம் மூலம் உங்கள் காத்திருப்பு டிக்கெட்டை மற்றொரு ரயிலில் உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டாக மாற்ற முடியும். அதாவது, நீங்கள் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது, உங்களுக்கான டிக்கெட் காத்திருப்பு பட்டியலில் இருந்தால், அதே வழித்தடத்தில் செல்லும் மற்ற ரயிலில் சீட் இருக்கும் பட்சத்தில், தானாகவே உங்களுக்கு அந்த ரயிலில் டிக்கெட் ஒதுக்கப்படும். இந்த Vikalp அம்சம் உங்கள் டிக்கெட் உறுதி செய்வதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். இந்த Vikalp அம்சம் மற்ற ரயில்களில் உள்ள காலி இருக்கைகளை தேடி, அந்த புதிய ரயிலுக்கு உங்கள பிஎன்ஆர் புதுப்பிக்கப்படும். இந்த அம்சத்திற்கு எந்த ஒரு கட்டணமும் வசூலிக்கப்படாது.
1. நீங்கள் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது, ஐஆர்சிடிசி செயலி அல்லது இணையதள்ததில் Vikalp என்ற ஆப்ஷன் வரும். அதனை நீங்கள் தேர்வு செய்தாலே போதுமானது. தானாகவே உங்கள் டிக்கெட் வெயிட்டிங் லிஸ்டில் இருந்தால், உங்களுக்கான ரயில் டிக்கெட் உறுதி செய்யப்படும்.
2. முதலில் ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது செயலிக்குள் செல்ல வேண்டும். நீங்கள் எப்போது டிக்கெட் புக் செய்வது போன்று தான்.
3. உங்கள் பயண தேதி, ஏறும் இடம், இறங்கும் இடத்தை தேர்வு செய்து கொள்ளவும்.
4. இதன்பிறகு, பயணிகளின் விவரத்தை சரியாக பூர்த்தி செய்ய வேண்டும். இதன்பிறகு, OPT For Vikalp என்ற ஆப்ஷனை பயன்படுத்த வேண்டும்.
5. இதன்பிறகு, நீங்கள் எத்தனை ரயில்கள் என்பதை தேர்வு செய்ய வேண்டும். இதனை தேர்வு செய்தால், எந்த ரயில்களில் டிக்கெட் காலியாக இருக்கிறதோ அங்கு உங்கள் டிக்கெட் உறுதி செய்யப்படும்.
உங்கள் டிக்கெட் வெயிட்டிங் லிஸ்டில் இருந்தால், நீங்கள் டிக்கெட் முன்பதிவு செய்த பிறகு, Vikalp அம்சத்தை பயன்படுத்தலாம். ஆனால், முன்பதிவு டிக்கெட் அட்டவணை வெளியாகும் வரை நீங்கள் இந்த அம்சத்தை enable செய்து கொள்ளலாம். முதலில் ஐஆர்சிடிசி செயலி அல்லது இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அங்கு மேலே உங்கள் மூன்று புள்ளிகளை கிளிக் செய்தால், opt vikalp என்ற அம்சத்தை கிளிக் செய்ய வேண்டும். இதன்பிறகு, உங்கள் டிக்கெட் வெயிட்டிங் லிஸ்டில் இருக்கும் வழித்தடத்தில் செல்லும் ரயில்களில் பட்டியல் உங்களுக்கு தோன்றும். அதில்இருந்து விரும்பிய பட்டியலை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம். எனவே, இந்த ஆப்ஷனை பயன்படுத்தி நீங்கள் காத்திருப்பு பட்டியலில் இருக்கும் டிக்கெட்டை உறுதிப்படுத்த முடியும்.
இந்தியன் ரயில்வே அண்மையில் காத்திருப்பு டிக்கெட் குறித்த முக்கிய அறிப்விப்பை வெளியிட்டது. அதாவது, கடைசி நேரத்தில் வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டுகள் ரத்து செய்யப்படுவதை தடுக்க புதிய விதிமுறையை இந்தியன் ரயில்வே கொண்டு வந்துள்ளது. அதன்படி, காலை 5 மணிக்கும், மதியம் 2 மணிக்கும் இடையில் புறப்படும் ரயில்களுக்கான முதல் முன்பதிவு அட்டவணை முந்தைய நாள் இரவு 8 மணிக்கு தயாராகிவிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெயிட்டிங் லிஸ்ட் உறுதி செய்யப்படவில்லை என்றால், அதற்கு ஏற்றவாறு பயணிகள் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ள முடியும். மேலும், மதியம் 2 மணியில் இருந்து நள்ளிரவு புறப்படும் ரயில்களுக்கான முன்பதிவு அட்டவணை ரயில் புறப்படுவதற்கு குறைந்தது 10 மணி நேரத்திற்கு முன்பே முதல் சார்ட் தயாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இறுதி முன்பதிவு பட்டியல் ரயில் புறப்படுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு ரயில்வே நிர்வாகம் தயார் செய்கிறது. இதன் முலம் தட்கல் டிக்கெட்டில் ஏற்படும் காலியான இருக்கைகள், காத்திருப்பு பட்டியலில் இருப்பவர்கள் வரிசைப்படி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ