)
IRCTC Thailand Tour Package: இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் அதாவது ஐ.ஆர்.சி.டி.சி ஒரு சிறப்பு சுற்றுலா தொகுப்பை அறிமுகப்படுத்தியுள்ளது, ஆனால் அது ரயில் பயணத்திற்காக அல்ல, விமான பயணத்திற்கானது. உண்மையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள மத மற்றும் சுற்றுலா தலங்களுக்கு ரயில் பயணத்துடன் விமான சுற்றுலா தொகுப்புகளையும் ஐ.ஆர்.சி.டி.சி வழங்கிளி வருகிறது. அதே நேரத்தில், வெளிநாட்டு பயணத்திற்கான பல பேக்கேஜ்களையும் கொண்டு வந்துள்ளது. அதன்படி தாய்லாந்து பயணத்திற்காக ஒரு அற்புதமான டூர் பேக்கேஜ் ஐ அறிமுகம் செய்துள்ளது.
குறைந்த பட்ஜெட்டில் ஒரு அழகான நாட்டிற்குச் செல்ல நீங்கள் திட்டமிட்டிருந்தால், இந்த செய்தி உங்களுக்கானது. IRCTC உங்களுக்காக ஒரு அற்புதமான சுற்றுலா டூர் பேக்கேஜை தற்போது கொண்டு வந்துள்ளது. இந்த சுற்றுலா தொகுப்பின் கீழ், தெற்காசியாவின் அழகான நாடான தாய்லாந்தைப் பார்வையிட உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். தாய்லாந்தில், அழகான கடற்கரைகள், வண்ணமயமான சந்தைகள், அற்புதமான கோயில்கள் மற்றும் அந்நாட்டின் இரவு வாழ்க்கை ஆகியவற்றை பார்வையிட வாய்ப்பு கிடைக்கும். இது தவிர, இங்குள்ள உணவு மற்றும் கலாச்சாரமும் மிகவும் வளமானது. தாய்லாந்த் சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்க்கும் ஒரு இடமாகும். IRCTC இன் இந்த சுற்றுலா டூர் பேக்கேஜில் பல வகையான வசதிகளையும் நீங்கள் பெறுகிறீர்கள்.
IRCTC இன் இந்த சுற்றுலா தொகுப்பின் பெயர் Amazing Thailand X Lucknow ஆகும். இந்த சுற்றுலா தொகுப்பில், நீங்கள் பயணம் செய்யும் போது எந்த வகையான சிக்கல்களையும் எதிர்கொள்ள வேண்டியதில்லை. IRCTC உங்கள் உணவு மற்றும் பானத்திற்கான வசதியை ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
அதுமட்டுமின்றி இது IRCTCயின் விமான சுற்றுலா தொகுப்பு ஆகும். உங்களை மற்ற இடங்களுக்கு அழைத்துச் செல்ல பேருந்துகளும் ஏற்பாடு செய்துத் தரப்படும் இந்த சுற்றுலா தொகுப்பில் பல வசதிகள் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த சுற்றுலா தொகுப்பின் கட்டணத்தை பற்றி பேசுகையில், நீங்கள் தனியாக பயணம் செய்ய விரும்பினால், நீங்கள் ரூ.73,300 கட்டணம் செலுத்த வேண்டும். நீங்கள் இரண்டு பேருடன் பயணம் செய்தால், ஒரு நபருக்கு ரூ.62,800 கட்டணம் செலுத்தினால் போதும். இது தவிர, நீங்கள் மூன்று பேருடன் பயணம் செய்ய விரும்பினால், ஒரு நபருக்கு ரூ.61,600 கட்டணம் செலுத்த வேண்டும்.
ஐ.ஆர்.சி.டி.சி.யின் இந்த சுற்றுலா தொகுப்பு குறித்து கூடுதல் தகவல்களுக்கு ஐ.ஆர்.சி.டி.சி. வலைத்தளமான www.irctctourism.com ஐப் பார்வையிடவும் அல்லது 9236367954/8287930922 என்ற மொபைல் எண்களில் கால் செய்து தகவலைப் பெற்றுக்கொள்ளலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ