கோடை விடுமுறையில்... கேரளா டூர் செல்ல IRCTC வழங்கும் சிறந்த பேக்கேஜ்

தென்னிந்தியாவில் உள்ள கேரளா மிகவும் இயற்கை அழகு நிறைந்த மாநிலம்  என்பதால், கடவுளின் தேசம் எனவும் அழைக்கப்படுகிறது. மலைகள், கடல் என எங்கும் அழகு கொட்டிக் கிடப்பதால் சுற்றுலா செய்வதற்கு கேரளாவை பெரும்பாலானோர் தேர்ந்தெடுக்கின்றனர். கோடை காலம் தொடங்கிய நிலையில், தங்கள் விடுமுறையைத் திட்டமிட தமிழ் நாட்டிற்கு அருகில் உள்ள கேரளா சிறந்த தேர்வாக இருக்கும். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 5, 2025, 01:34 PM IST
  • கேரளா மிகவும் இயற்கை அழகு நிறைந்த மாநிலம்.
  • விடுமுறையைத் திட்டமிட தமிழ் நாட்டிற்கு அருகில் உள்ள கேரளா சிறந்த தேர்வாக இருக்கும்.
  • இந்திய ரயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி ஒரு சிறந்த சுற்றுலா பேக்கேஜை வழங்குகிறது.
கோடை விடுமுறையில்... கேரளா டூர் செல்ல IRCTC வழங்கும் சிறந்த பேக்கேஜ்

Kerala Tourism: தென்னிந்தியாவில் உள்ள கேரளா மிகவும் இயற்கை அழகு நிறைந்த மாநிலம்  என்பதால், கடவுளின் தேசம் எனவும் அழைக்கப்படுகிறது. மலைகள், கடல் என எங்கும் அழகு கொட்டிக் கிடப்பதால் சுற்றுலா செய்வதற்கு கேரளாவை பெரும்பாலானோர் தேர்ந்தெடுக்கின்றனர். கோடை காலம் தொடங்கிய நிலையில், தங்கள் விடுமுறையைத் திட்டமிட தமிழ் நாட்டிற்கு அருகில் உள்ள கேரளா சிறந்த தேர்வாக இருக்கும். 

Add Zee News as a Preferred Source

கேரளாவில் உள்ள மலைவாசஸ்தலங்கள், அவற்றின் இயற்கை அழகு, உங்களை மீண்டும் மீண்டும் அங்கு செல்லத் தூண்டும் வகையில் இருக்கும். கேரளா செல்லஆர்வம் உடையவர்களுக்கு குறைந்த செலவில் கேரளா செல்ல இந்திய ரயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி ஒரு சிறந்த சுற்றுலாத் பேக்கேஜை வழங்குகிறது. இந்த பேக்கேஜில் அற்புதமான சலுகைகள் உள்ளன. இதன் மூலம் நீங்கள் குடும்பத்துடன் விடுமுறையை குறைந்த செலவில் அனுபவிக்க முடியும். இந்த பேக்கேஜைப் பற்றி விரிவாகச் அறிந்து கொள்வோம்.

IRCTC கேரளா பேக்கேஜின் பெயர் 

IRCTC பேக்கேஜின் பெயர் KERALA LUSH GREEN HILLS (SEH048). இந்த பேக்கேஜ் 4 பகல்கள் மற்றும் 3 இரவுகளுக்கானது. இந்த பேக்கேஜில், நீங்கள் எல்லா இடங்களுக்கும் ஏசி வாகனத்தில் தான் அழைத்துச் செல்லப்படுவீர்கள்.

கேரளா பயண விபரம்

முதல் நாள் நீங்கள் எர்ணாகுளம் ரயில் நிலையம் அல்லது கொச்சி விமான நிலையத்திற்குச் செல்வீர்கள். பின்னர் அங்கிருந்து நீங்கள் மூணாறு செல்வீர்கள். உயரமான மேகங்கள், அழகான மலைகள் மற்றும் வளைந்த மலைகள் ஆகிய கண்கவர் காட்சிகள் கொண்ட் மூணாறு உங்களுக்கு சிறந்த அனுபவத்தை பின்னர் மறுநாள் மூணாறிலிருந்து தேக்கடிக்குப் பயணம் செய்து சுற்றித் பார்க்கலாம். தேக்கடி இந்தியாவின் மசாலாத் தலைநகராகவும் அறியப்படுகிறது.

மூன்றாவது நாளில் நீங்கள் தேக்கடியிலிருந்து குமரகோமுக்கு செல்வீர்கள். குமரகம் கிராமம், வெம்பநாடு ஏரியின் சிறு தீவுகளின் ஒரு தொகுதி. இங்குள்ள பறவைகள் சரணாலயம் 14 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. அது புலம்பெயரும் பறவைகளுக்கு விருப்பமான இடம் மற்றும் பறவையியலாளர்களுக்கு சொர்க்கம்.   நான்காவது நாளில் நீங்கள் குமரகோமிலிருந்து கொச்சிக்குத் திரும்புவீர்கள். 

IRCTC கேரளா பேக்கேஜ் பெற எவ்வளவு செலவாகும்?

ஐ.ஆர்.சி.டி.சியின் இந்த பேக்கேஜ் பெற  நீங்கள் முன்பதிவு செய்ய விரும்பினால், ஒரு நபருக்கான முன்பதிவு செய்வதற்கு ரூ.35725 செலுத்த வேண்டும். இரு நபர்களுக்கான முன்பதிவுக்கு, ரூ.18390 செலுத்த வேண்டும். மூன்று நபர்களுக்கான முன்பதிவு செய்ய, ஒரு நபருக்கு ரூ.14205 செலவிட வேண்டும். அதே நேரத்தில்,  5 முதல் 11 வயது வரையிலான குழந்தைக்கு, படுக்கை வசதி பெற ரூ.6145 செலுத்த வேண்டும், படுக்கை வசதி வேண்டாம் என்றால், ரூ.3070 செலவாகும்.

மேலும் படிக்க | கேதார் - பத்ரி செல்ல பிளானா... நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்

மேலும் படிக்க | ரயில்வே விதிகள்: பயணிகளே கவனம்.. டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தால் எவ்வளவு அபராதம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News