)
IRCTC Kerala Tour Package: மே மாதம் என்றாலே கோடை விடுமுறை தான். தமிழகத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் ஏராளமான மக்கள் குடும்பத்துடன் சுற்றுலா சென்று வருகின்றனர். குறிப்பாக ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, கேரளா உள்ளிட்ட முக்கிய சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கோடை வெயிலில் இருந்து தப்பிக்க குளிர்ச்சியான மலைப்பகுதிகளுக்கு செல்ல அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் ரயில், பேருந்து மற்றும் ஹோட்டல்களில் முன்பதிவுகள் வேகமாக நிரம்பி வருகிறது. பலரும் குடும்பத்துடன் சுற்றுலா சென்று விடுமுறையை மகிழ்ச்சியாக கழித்து வருகின்றனர். இந்த நிலையில் ஐஆர்சிடிசி சுற்றுலா பயணிகளுக்காக சூப்பரான திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
அதாவது ஐஆர்சிடிசி கேரளாவுக்கு சிறப்பு சுற்றுலா தொகுதி அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது, கேரளாவில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களை பார்வையிடும் வகையில் நான்கு நாட்கள் சுற்றுலா பேக்கேஜை ஐஆர்சிடிசி அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்த சுற்றுலா தொகுப்பு மே 18ஆம் தேதி முடிவடைகிறது. எர்ணாகுளம் ரயில் நிலையம் அல்லது கொச்சி விமான நிலையத்திற்கு வந்தடைந்ததும் மூணாறுக்கு அழைத்து செல்லப்படுவீர்கள். மூணாறு அடைந்ததும் அங்குள்ள முக்கிய சுற்றுலா தளங்களை பார்வையிட வாய்ப்புள்ளது.
தொடர்ந்து இரவு ஹோட்டலில் தங்குவீர்கள். இரண்டாம் நாள் மூணாறில் இருந்து தேக்கடிக்கு புறப்படுவீர்கள். தேக்கடியில் உள்ள பசுமையான மலைகள், புலிகள் காப்பகம் உள்ள இடங்களை பார்வையிட்டு இரவில் தேக்கடியில் தங்குவீர்கள்.
தொடர்ந்து மூன்றாம் நாள் தேக்கடியில் இருந்து ஆலப்புழா, குமரகம் செல்வீர்கள். ஆலப்புழாவில் உள்ள ஹோட்டலில் செக்கிங் செய்துவிட்டு அங்குள்ள முக்கியமான சுற்றுலா இடங்களை பார்வையிடுவீர்கள் மேலும் அதை நான் குமரகம் செல்வீர்கள். குமரகத்திலிருந்து எர்ணாகுளம் ரயில் நிலையத்திற்கு அல்லது கொச்சி விமான நிலையத்திற்கு அழைத்து செல்லப்படுவீர்கள்.
கொச்சியில் லூலு மால், கொச்சி மெட்ரோ போன்றவற்றையும் நீங்கள் பார்வையிடுவீர்கள். அத்துடன் உங்கள் கேரளா நான்கு நாட்கள் பயணம் நிறைவடையும் என ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது. நான்கு நாட்கள் கேரளா சுற்றுலாவிற்கு கட்டணமாக ஐஆர்சிடிசி ஒரு நபருக்கு ரூ.36,150 நிர்ணயத்துள்ளது.
இரண்டு பேருக்கு ரூபாய் 18,510, மூன்று பேருக்கு 14,460 ரூபாயா ஆகவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஐந்து முதல் 11 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கட்டணமாக 6500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கேரளா சுற்றுலா செல்ல விருப்பப்படுபவர்கள் ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது செயலி வாயிலாக டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளுங்கள். கேரளா சுற்றுலா தொகுப்பு சம்பந்தமாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் 8287932024, 828793117 என்று என்னை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
| சுற்றுலா தொகுப்பு | கேரளாவுக்கு 4 நாட்கள் |
| பயணம் தொடங்கும் நாள் | மே 18ஆம் தேதி |
| சுற்றுலா இடங்கள் | மூணாறு, தேக்கடி, ஆலப்புழா, குமரகம், கொச்சி |
| கட்டணம் (ஒரு நபர்) | ரூ.36,150 |
| இரண்டு பேர் கட்டணம் | ரூ.18,510 |
| மூன்று பேர் கட்டணம் | ரூ.14,460 |
| முன்பதிவு | ஐஆர்சிடிசி இணையதளம் |
| தொடர்புக்கு | 8287932024, 828793117 |