IRCTC New Tour Package: ஐஆர்சிடிசி வெளியிட்டுள்ள சுற்றுலா தொகுப்பின் படி, கர்நாடகாவின் அழகிய மலைப்பிரதேசமான 'குடகு எனும் கூர்க்' பட்ஜெட் சுற்றுலாத் தலமாகும்.
கர்நாடகாவின் அழகிய மலைப்பிரதேசமான 'குடகு எனும் கூர்க்' ஸ்காட்லாந்துடன் ஒப்பிடப்படுகிறது. வியக்கவைக்கும் பள்ளத்தாக்குகள், மூடுபனி மலைகள், பசுமையான காட்சிகள் மற்றும் குளிர்ச்சியான, மிதமான காலநிலை ஆகியவற்றைக் கொண்டுள்ள குடகு அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய இடமாகும். மேலும் இது ஒரு பட்ஜெட் சுற்றுலாத் தலமாகவும் பார்க்கப்படுகிறது.
கூர்க்கில் மலையேற்றம், ரிவர் ராஃப்டிங், முகாம் மற்றும் வனவிலங்கு சஃபாரி போன்ற பல இடங்கள் உள்ளது சுற்றிப்பார்ப்பதற்கு. இந்நிலையில் இன்றைய கட்டுரையில், இந்த சுற்றுலா தொகுப்பு பற்றிய விரிவான தகவல்களை பெறலாம்.
சென்னை - கூர்க் சுற்றுலா தொகுப்பு:
சுற்றுலா தொகுப்பின் பெயர்: சென்னை - கூர்க் - சென்னை
பயண முறை - ரயில்
நிலையம்/புறப்படும் நேரம் - சென்னை சென்ட்ரல் இரவு 9:15 மணிக்கு
வகுப்பு - ஸ்லீப்பர்
இந்த தொகுப்பு சென்னையில் இருந்து தொடங்குகிறது.
மேலும் டூர் மார்ச் 27 அன்று தொடங்கும்.
இந்த டூர் 4 இரவுகள் மற்றும் 5 பகல்கள் கொண்டது.
இந்த டூர் பேக்கேஜிற்கான முன்பதிவை நீங்கள் இந்திய ரயில்வேயின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் செய்து டிக்கெட்டுக்கை பெற்றுக் கொள்ளலாம்.
டூர் பேக்கேஜ் கட்டணம்:
டூர் பேக்கேஜ் கட்டணம் - நீங்கள் தனியாக பயணம் செய்ய திட்டமிட்டு இருந்தால், இந்த டூர் பேக்கேஜுக்கு ரூ.22830 செலுத்த வேண்டி இருக்கும்.
இரண்டு பேருடன் பயணம் செய்ய விரும்பினால் தலா ஒரு நபருக்கு கட்டணமாக ரூ.12100 செலுத்த வேண்டும்.
மூன்று பேருடன் பயணம் செய்ய விரும்பினால் ஒரு நபருக்கு கட்டணமாக ரூ.9050 செலுத்த வேண்டும்.
குழந்தைகளுக்கான கட்டணம் ரூ.4750 ஆகும்.
டூர் பேக்கேஜ்ஜில் வழங்கப்படும் வசதிகள்:
ஸ்லீப்பர் வகுப்பில் ரயிலில் பயணிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
கூர்க்கில் 02 இரவுகள் தங்குமிடம் கிடைக்கும்.
பயணம் செய்வதற்கு கார் வசதி வழங்கப்படும்.
அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் சுற்றுலாக்கள் நடத்தப்படும்.
வகுப்பு (தரநிலை) | தனி நபர் | இரண்டு பேர் | மூன்று பேர் | குழந்தைக்கு தனி படிக்கை | படுக்கை இல்லாமல் |
(2-3 pax) | 22830 | 12080 | 9000 | 4710 | 3840 |
(4-6 pax) | Nil | 9740 | 9160 | 7990 | 7120 |
இது தொடர்பான கூடுதல் தகவலுக்கு சுற்றுலாப் பயணிகள் IRCTC அதிகாரப்பூர்வ வலைத்தளமான irctctourism.com ஐ பார்வையிடலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ