IRCTC New Tour Package: இந்திய ரயில்வே டூரிசம் மற்றும் கேட்டரிங் கார்ப்பரேஷன் (IRCTC - Indian Railway Catering and Tourism Corporation) இந்தியா முழுவதில் இருக்கும் பல்வேறு அழகிய சுற்றுலாத் தலங்களுக்கு சூப்பரான பேக்கேஜ்களை தற்போது தினம்தோறும் வழங்கி வருகிறது. அதேபோல் இந்த ஆனால் இந்திய ரயில்வே டூரிசம் மற்றும் கேட்டரிங் கார்ப்பரேஷன் (IRCTC) தாய்லாந்து, மலேசியா, துபாய், அமெரிக்கா என பல சர்வதேச சுற்றுலாத் தலங்களுக்கு மலிவான டூர் பேக்கேஜ்களை வழங்குகிறது. அவற்றில் இன்று நாம் தாய்லாந்து சுற்றுப்பயணத தொகுப்பை பற்றி தான் பார்க்கப் போகிறோம். எப்படி புக் செய்வது என்று பார்ப்போமா!
பொதுவாக இந்தியாவில் உள்ள இளைஞர்களுக்கு பிடித்த சர்வதேச சுற்றுலாத் தலத்தில் ஒன்று தான் தாய்லாந்து. IRCTC இன் தவிர்க்கமுடியாத பேக்கேஜுடன் தாய்லாந்திற்கு 4 நாள் பயணத்தை மேற்கொள்ளுங்கள். துடிப்பான நகரமான பாங்காக் முதல் பட்டாயாவின் பிரமிக்க வைக்கும் கடற்கரை வரை, இந்த சுற்றுப்பயணம் கலாச்சார அதிசயங்கள் மற்றும் இயற்கை அழகின் கலவையை உறுதியளிக்கிறது.
இந்த சுற்றுப்பயணமானது வருகிற ஏப்ரல் மாததிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றுலா தொகுப்பின் பெயர் Treasures of Thailand Ex – Hyderabad ஆகும். இந்த சுற்றுலா தொகுப்பில், சுற்றுலாப் பயணிகள் குறைந்த கட்டணத்தில் தாய்லாந்து முழுவதையும் ஆடம்பரமாக சுற்றிப்பார்க்க முடியும்.
சுற்றுலாப் பயணிகளுக்கு உணவு மற்றும் தங்குமிடம் இலவசம்: இந்திய ரயில்வே டூரிசம் மற்றும் கேட்டரிங் கார்ப்பரேஷன் (IRCTC - Indian Railway Catering and Tourism Corporation) இன் இந்த சுற்றுலாப் தொகுப்பு 4 பகல்கள் மற்றும் 3 இரவுகளுக்கானது. இந்த சுற்றுலா தொகுப்பில், சுற்றுலாப் பயணிகளுக்கு தங்குமிடம் மற்றும் உணவு இலவசமாக வழங்கப்படும். மேலும் இந்த சுற்றுலா தொகுப்பு வருகிற ஏப்ரல் 24 தொடங்க உள்ளது. இதற்கான விமானம் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து தாய்லாந்திற்குப் புறப்படும்.
இந்த சுற்றுலா தொகுப்பில், சுற்றுலாப் பயணிகள் பாங்காக் மற்றும் பட்டாயாவில் இருக்கும் அல்கசார் ஷோ, கோரல் தீவு சுற்றுப்பயணம், சஃபாரி உலக சுற்றுப்பயணம், கடல் பூங்கா மற்றும் வாட் டிரிமிட் ஆகியவற்றைப் பார்வையிட வாய்ப்பு பெறுவார்கள்.
இந்த சுற்றுலா தொகுப்பில், சுற்றுலாப் பயணிகள் 3 நட்சத்திர ஹோட்டலில் தங்கும் வசதியைப் பெறுவார்கள். சுற்றுலாப் பயணிகளுக்கு காலை உணவு, இரவு உணவு மற்றும் மதிய உணவு ஆகியவை இலவசமாக வழங்கப்படும். இந்த சுற்றுலா தொகுப்பில் நீங்கள் ஒரே ஆளாக தனியாக பயணம் செய்தால், ரூ.54,600 செலுத்த வேண்டியிருக்கும். இரட்டை மற்றும் மூன்று பேருடன் பயணம் மேற்கொண்டால் தலா ஒரு நபருக்கு ரூ.47,580 கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
இது தொடர்பான கூடுதல் தகவலுக்கு சுற்றுலாப் பயணிகள் IRCTC அதிகாரப்பூர்வ வலைத்தளமான irctctourism.com ஐ பார்வையிடலாம். இது தவிர, முன்பதிவு தொடர்பான கூடுதல் தகவலுக்கு, சுற்றுலாப் பயணிகள் 8287932228, 8287932229, 9281030733, 040-27702407 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









