ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி.... இந்திய ரயில்வே துறையின் புது ரூல்ஸ் தெரிஞ்சுக்கோங்க

Indian Railways : ரயிலில் வெயிடிங் லிஸ்ட் டிக்கெட்டுடன் (waiting list ticket) பயணித்தால், உங்களுக்கு அதிக அபராதம் விதிக்கப்படும், நீங்கள் எவ்வளவு அபராதம் செலுத்த வேண்டும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

Written by - Karthikeyan Sekar | Last Updated : Apr 12, 2025, 01:05 PM IST
  • இந்திய ரயில்வே முக்கிய விதிமுறைகள்
  • முன்பதிவு பெட்டியில் பயணித்தால் அபராதம்
  • எவ்வளவு அபராதம் செலுத்த வேண்டும் தெரியுமா?
ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி.... இந்திய ரயில்வே துறையின் புது ரூல்ஸ் தெரிஞ்சுக்கோங்க

IRCTC Waiting List Ticket Rules : இந்திய ரயில்வேயில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்கிறார்கள். அதனால் எல்லோருக்கும் கன்பார்ம் டிக்கெட் கிடைப்பது கடினம். அதேநேரத்தில், முன்பதிவு செய்தும் கன்பார்ம் டிக்கெட் கிடைக்கவில்லை என்றால், காத்திருப்பு டிக்கெட்டுடன் ரயிலில் ஏறலாம் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் அப்படி காத்திருப்பு டிக்கெட்டுடன் பயணம் செய்யலாம் என நினைத்துக்கொண்டிருப்பவர்களில் நீங்களும் ஒருவர் என்றால் இந்த செய்தி உங்களுக்கு மிகவும் முக்கியமானது. இந்திய ரயில்வே சமீப காலங்களில் சில முக்கியமான மாற்றங்களைச் செய்துள்ளது, இது உறுதிப்படுத்தப்பட்ட ரயில் டிக்கெட் இல்லாமல் பயணிக்கும் பயணிகளுக்கு அபராதம் விதிக்கும். 

Add Zee News as a Preferred Source

வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் வைத்திருந்தாலும் ரயிலில் ஏறி பயணம் செய்வது பெரிய விஷயமல்ல என்று பெரும்பாலும் மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் அவ்வாறு செய்வது உங்கள் பணத்தை காலியாக்கும். குறிப்பாக நீங்கள் காத்திருப்பு டிக்கெட்டுடன் ஏசி பெட்டியில் ஏறினால், அபராதம் மிக அதிகமாக இருக்கலாம், அந்த அபராத தொகையை கேட்டால் நீங்கள் அதிர்ச்சியடைவீர்கள். ரயில்வேயின் விதி என்ன, எவ்வளவு அபராதம் விதிக்கப்படலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்..

வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் அபராதம்

பலர் வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டுகளை எடுத்துக்கொண்டு ரயிலில் ஏறுவதை பார்க்க முடிகிறது. குறிப்பாக ஸ்லீப்பர் பெட்டிகளில் ஏறியே பயணிக்கிறார்கள். இதனால் டிக்கெட்டுகள் உறுதி செய்யப்பட்ட பயணிகளுக்கு கடும் சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். இது பெரும் பிரச்சனையாக உருவெடுத்த நிலையில், பயணிகளின் வசதியையும் பயண அனுபவத்தையும் மேம்படுத்துவதற்காக, காத்திருப்பு டிக்கெட்டுகளுடன் பயணம் செய்வதற்கான விதிகளை இப்போது ரயில்வே கடுமையாக்கியுள்ளது.

ஸ்லீப்பர் கோச்சில் காத்திருப்பு டிக்கெட்டுக்கு எவ்வளவு அபராதம் விதிக்கப்படலாம்?

ஸ்லீப்பர் பெட்டியில் காத்திருப்பு டிக்கெட்டுடன் பயணம் செய்யும் ஒருவர் பிடிபட்டால், அவருக்கு ரூ.250 அபராதம் விதிக்கப்படலாம். இது தவிர, பயணத்திற்கான முழு கட்டணமும் வசூலிக்கப்படும், மேலும் தூரத்தைப் பொறுத்து கூடுதல் கட்டணமும் செலுத்த வேண்டியிருக்கும்.

ஏசி பெட்டியில் பயணம் செய்தால் அதிக அபராதம்

நீங்கள் மூன்றாவது ஏசி அல்லது இரண்டாவது ஏசி பெட்டியில் காத்திருப்பு டிக்கெட்டுடன் பயணம் செய்தால், அபராதம் இன்னும் அதிகமாக இருக்கலாம். இந்த நிலையில், பயணக் கட்டணத்துடன் சேர்த்து ரூ.440 செலுத்த வேண்டும். இதனுடன், பயணிகளை பொதுப் பெட்டிக்கு அனுப்பவோ அல்லது அடுத்த நிலையத்தில் ரயிலில் இருந்து இறங்கவோ TTE க்கு உரிமை உண்டு. அதே நேரத்தில், முதல் வகுப்பில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்ததற்காகவும் கடுமையான அபராதம் விதிக்கப்படலாம்.

அபராதம் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

நீங்கள் ரயிலில் பயணிக்க திட்டமிட்டிருந்தால், உங்கள் டிக்கெட் உறுதி செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் காத்திருப்பு டிக்கெட்டுடன் பயணம் செய்வது விதிகளுக்கு எதிரானது, இது பயணத்தில் சிக்கலை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், நீங்கள் கடுமையான அபராதத்தையும் செலுத்த வேண்டியிருக்கும்.

மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கு ரயில் டிக்கெட் கட்டணத்தில் சலுகையா? நாடாளுமன்றத்தில் விளக்கிய ரயில்வே அமைச்சர்

மேலும் படிக்க | பல சாதனைகளை தொடர்ந்து செய்துவரும் இந்தியன் ரயில்வே! அதிக லாபம் ஈட்டி புதிய சாதனை...

மேலும் படிக்க | இந்திய ரயில்வே விதிகள்... இந்த ஆவணம் இல்லை என்றால்... உங்கள் டிக்கெட் செல்லாது... கவனமாக இருங்க

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

...Read More

Trending News