UPI GST news Tamil : சமீப நாட்களில் சமூக ஊடகங்களில் ₹2,000க்கு மேல் மதிப்புள்ள UPI பரிவர்த்தனைகளில் GST விதிக்கப்படும் என்ற செய்தி பரவலாக பகிரப்பட்டது. இந்த செய்தி பொதுமக்களிடையே குழப்பத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இது உண்மையா அல்லது வதந்தியா என்பதை தெரிந்துகொள்வோம். மத்திய நிதி அமைச்சகம் இந்த வதந்தியை தெளிவாக மறுத்துள்ளது. அமைச்சகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், "UPI பரிவர்த்தனைகளில் GST விதிப்பது தொடர்பாக எந்த திட்டமும் அரசிடம் இல்லை" என்று தெளிவுபடுத்தியுள்ளது. மேலும் இது முற்றிலும் தவறான தகவல் என்றும் குறிப்பிட்டுள்ளது.
UPI பரிவர்த்தனைகளின் தற்போதைய நிலை
தற்போது UPI மூலம் செய்யப்படும் எந்தவொரு பரிவர்த்தனையிலும் (Person-to-Person அல்லது Person-to-Merchant) GST விதிக்கப்படுவதில்லை. 2020ஆம் ஆண்டில் மெர்க்கண்ட் டிஸ்கவுண்ட் ரேட் (MDR) ரத்து செய்யப்பட்டதால், GST விதிக்கப்படுவதற்கான வாய்ப்புகளும் இல்லை. அதேநேரத்தில் UPI பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை ஊக்கத் திட்டம்
2021-22 நிதியாண்டு முதல் அரசு UPI பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க ஒரு சிறப்புத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் கடந்த மூன்று ஆண்டுகளில் முறையே ₹1,389 கோடி, ₹2,210 கோடி மற்றும் ₹3,631 கோடி ஊக்கத் தொகைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த திட்டம் முக்கியமாக சிறு மற்றும் குறு வணிகர்களுக்கு பயனளிப்பதாக அமைந்துள்ளது.
UPI பரிவர்த்தனைகளின் வளர்ச்சி புள்ளிவிவரங்கள்
இந்தியாவின் UPI பரிவர்த்தனைகள் கடந்த சில ஆண்டுகளில் வியத்தகு வளர்ச்சியைக் கண்டுள்ளன. 2023ஆம் ஆண்டில் உலகளாவிய ரியல்-டைம் பரிவர்த்தனைகளில் இந்தியாவின் பங்கு 49% ஆக உயர்ந்துள்ளது. 2025ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் UPI பரிவர்த்தனைகளின் மொத்த மதிப்பு ₹260 லட்சம் கோடியைத் தொட்டுள்ளது. இதில் Person-to-Merchant பரிவர்த்தனைகளின் பங்கு ₹59.3 லட்சம் கோடியாக உள்ளது.
பொது மக்களுக்கான அறிவுரை
எனவே மத்திய அரசு யுபிஐ பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், யுபிஐ பரிவர்த்தனைக்கு ஜிஎஸ்டி விதிக்கப்பட உள்ளது என்ற இத்தகைய தவறான செய்திகளால் ஏமாற வேண்டாம். எந்தவொரு புதிய வரி விதிப்பு தொடர்பான செய்திகளையும் மத்திய அரசின் அதிகாரப்பூர்வ தளங்களில் இருந்து மட்டுமே உறுதிப்படுத்திக் கொள்ளவும். UPI பரிவர்த்தனைகள் தற்போது GST இலவசமாகவே உள்ளன. டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மேலும் படிக்க | உங்கள் EPF கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது? தெரிந்துகொள்ள ஈசியான 5 வழிகள் இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ