‘காேபம் இருக்கும் இடத்தில் குணம் இருக்கும்’- இந்த பழமொழி உண்மையா? பொய்யா?

Is It True That Angy People Have Beautiful Heart : அடிக்கடி உபயோகிக்கப்படும் “கோபம் இருக்கும் இடத்தில்தான் குணம் இருக்கும்” என்கிற பழமொழி உண்மையா? பொய்யா? இதோ, இங்கு அது குறித்து பார்ப்போம்.  

Written by - Yuvashree | Last Updated : Jun 11, 2025, 05:10 PM IST
  • கோபப்படுபவர்கள் இடத்தில் குணம் இருக்குமா?
  • இந்த பழமொழி உண்மைதானா?
  • இதோ முழு விவரம்!
‘காேபம் இருக்கும் இடத்தில் குணம் இருக்கும்’- இந்த பழமொழி உண்மையா? பொய்யா?

Is It True That Angy People Have Beautiful Heart : நம்மை சுற்றி இருப்பவர்களில், ஏன் நாமே கூட அடிக்கடி கோபப்படும் குணம் கொண்டவராக இருந்திருப்போம். “கோபம் இருக்கும் இடத்தில்தான் குணம் இருக்கும்” என்று பெரியவர்கள் கூறுவதையும் கேட்டிருப்போம். இதனாலேயே, கோபப்படுபவர்கள் எதை செய்தாலும், அதிலிருந்து அவர்கள் தப்பித்துக்கொள்வதும் உண்டு. “அவன் கோபக்காரன்தான்..ஆனா ரொம்ப நல்லவன்..” என்று சிலர் கூறுவதுண்டு. ஆனால், ஒரு சிலர் கோபப்பட்டு கத்துவதை பார்க்கும் போது நமக்கு எரிச்சல் உண்டாகும் இல்லையா? அப்போது மேற்கூறியது போன்ற பழமொழிகள் உண்மையா இல்லையா என்று தோன்றும். இது குறித்து இங்கு முழுமையாக பார்ப்போம்.

Add Zee News as a Preferred Source

நல்ல மனம் படைத்தவர்களாக இருப்பர்-காரணங்கள்:

கோபம் என்பது, பல இடங்களில் அன்பின் வெளிபாடாக இருக்கிறது. ஒரு சிலர், தாங்கள் இன்னொருவரை பற்றி ஆழமாக கேர் செய்வதால் அவர்களிடம் இப்படி கோபப்படுகின்றனர். உதாரணத்திற்கு உங்கள் அன்புக்குரியவருக்கு நீங்கள் மரியாதையின்மையுடன் சில சமயங்களில் நடத்தப்படும் போது கோபம் வந்தால், அந்த கோபம் அன்பின் வெளிபாடு என அர்த்தம்.

உணர்ச்சி: மென்மையானவர்கள் தங்களின் உணர்ச்சிகள் அணைத்தையும் ஆழமாக எடுத்துக்கொள்பவர்களாக இருப்பார்கள். அவர்கள் அன்பு செலுத்தினாலும், கோபத்தை கொட்டினாலும், வலியை அனுபவித்தாலும் அது ஆழமானதாக இருக்கும்.

தவறு-சரி கணக்கு: ஒரு சிலர், தார்மீக அடிப்படையில் எது சரி எது தவறு என்று தனக்கு தானே சில வரைமுறைகளை வைத்திருப்பர். எனவே, தவறை சிறிதளவில் உணரும் போதும் அவர்களுக்கு கோபம் மூக்கிற்கு மேல் வந்துவிடுகிறது.

கோபம் தவறு...ஏன்?

கட்டுப்படுத்த முடியாத கோபம், அவர்களை மட்டுமல்ல அவர்களை சுற்றி இருப்பவர்களையும் சேதப்படுத்துகிறது. காேபப்படுபவரின் நோக்கம் எதுவாக இருந்தாலும், கோபம் புண்படுத்தும் வார்த்தைகளாகவோ அல்லது செயல்களாகவோ மாறினால், அது உணர்ச்சி ரீதியான பாதிப்பை ஏற்படுத்தும்.

நன்மை என்பது உணர்ச்சிகளை வைத்து மட்டுமே அளவிடப்படுவதில்லை.  உண்மையிலேயே கனிவான இதயத்திற்கு எடுத்துக்காட்டு, பொறுமையாக இருப்பது, தன்னை மீறி வலுவாக இருக்கும் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது ஆகும். அதையும் தாண்டி, பிறரிடம் இரக்கத்துடன் செயல்படுவது எப்படி என்பதையும் அந்த உள்ளம் அறிந்திருக்கும்.

ஈகோவில் இருந்தும் கோபம் பிறக்கலாம். அனைத்து கோபமும் அன்பின் வெளிபாடாக இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. சில சமயங்களில் கோபம், அவமானம், அசிங்கம் மற்றும் தன் கையில் கண்ட்ரோல் இல்லாததால் கூட வரும். எனவே, இது போன்ற குணாதிசயம் கொண்டவர்கள் நிச்சயமாக கோபத்தை கொண்டவர்கள் இல்லை.

இதன் உண்மையான அர்த்தம்:

ஒருவர் எவ்வளவு கோபப்படுகிறார் என்பதை வைத்து அவர் நல்ல உள்ளம் கொண்டவறா இல்லையா என்பதை கூறிவிட முடியாது. அவர்கள் ஏன் கோபப்படுகிறார்கள், அந்த கோபத்தை எப்படி வெளிப்படுத்துகிறார்கள், எப்படி கையாள்கிறார்கள் என்பதை வைத்து அவர்களின் குணமானது அமையும். அடிக்கடி கோபம் வரும் குணம் கொண்டவர்களுக்கு நல்ல மனம் இருக்கலாம், நல்ல குணமும் இருக்கலாம். ஆனால், அந்த கோபத்தை அவர்கள் எப்படி தீங்கு விளைவிக்காமல் செயல்படுத்துகின்றனர் என்பதை வைத்துதான் அவர்களின் குணத்தை நாம் தீர்மானிக்க முடியும்.

மேலும் படிக்க | காதல் உடனே கைகூடனுமா? இந்த 7 பழக்கங்களை குப்பையில் போடுங்க..

மேலும் படிக்க | 2 மாதங்களில் 10 கிலோ குறைத்த பிரபல நடிகர்! சிம்பிள் சீக்ரெட் சொல்கிறார் கேட்டுக்கோங்க..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News