ITR 2025: வருமான வரி தாக்கலை ஆன்லைனில் நிமிடங்களில் செய்யலாம்... எளிய வழிமுறை விபரம்

ITR 2025: வருமான வரி தாக்கல் செய்வது என்பது உங்கள் வருமானம், வரி சேமிப்பு முதலீடுகள், வரி விலக்குகள் மற்றும் அரசாங்கத்திற்கு வரி செலுத்துதல் பற்றிய முழுமையான தகவல்களை வழங்குவதாகும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 3, 2025, 04:12 PM IST
  • வருமான வரித் துறை, வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை நீட்டித்துள்ளது.
  • ITR வருமான வரியை எவ்வாறு தாக்கல் செய்வது?
  • ITR தாக்கல் செய்யத் தேவையான ஆவணங்கள்.
ITR 2025: வருமான வரி தாக்கலை ஆன்லைனில் நிமிடங்களில் செய்யலாம்... எளிய வழிமுறை விபரம்

வருமான வரி செலுத்தும் கோடிக்கணக்கானோருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், வருமான வரித் துறை, வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை நீட்டித்துள்ளது. இப்போது 2025-26 மதிப்பீட்டு ஆண்டிற்கான வரி வருமானத்தை செப்டம்பர் 15, 2025 வரை தாக்கல் செய்யலாம். தணிக்கை அல்லாத வகையில் வரும் வரி செலுத்துவோருக்கு முன்னதாக ஜூலை 31 ஆம் தேதி என இருந்த காலக்கெடு இப்போது 45 நாட்கள் கூடுதல் அவகாசம் கிடைக்கும் வகையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

Add Zee News as a Preferred Source

வருமான வரி தாக்கல் செய்வது என்பது உங்கள் வருமானம், வரி சேமிப்பு முதலீடுகள், வரி விலக்குகள் மற்றும் அரசாங்கத்திற்கு வரி செலுத்துதல் பற்றிய முழுமையான தகவல்களை வழங்குவதாகும். 1961 வருமான வரிச் சட்ட வழிமுறையின் கிழ், உங்கள் ஆண்டு வருமானம் அடிப்படை விலக்கு வரம்பை விட அதிகமாக இருந்தால், வருமான வரி தாக்கல் செய்வது அவசியமாகிறது.

இந்த முறை வருமான வரி படிவத்தில் ஏற்பட்ட மாற்றங்கள், TDS தொடர்பான சிக்கல்கள் மற்றும் பிற தொழில்நுட்ப காரணங்களைக் கருத்தில் கொண்டு வரித் துறை இந்த நீட்டிப்பை வழங்கியுள்ளது. இதற்கிடையில், ஆன்லைன் வருமான வரி தாக்கல் செய்வதை எளிதாக்கும் ITR செயலிகளையும் வருமான வரித்துதுறை வெளியிட்டுள்ளது.

ITR வருமான வரியை எவ்வாறு தாக்கல் செய்வது?

ITR தாக்கல் ஆஃப்லைனிலும் ஆன்லைனிலும் செய்யப்படலாம், ஆனால் பெரும்பாலான மக்கள் இப்போது மின்ணணு-தாக்கல் வலைத்தளம் மூலம் ஆன்லைனில் வருமானத்தை தாக்கல் செய்ய விரும்புகிறார்கள். இந்த போர்ட்டலில் உள்நுழைய PAN அடிப்படையிலான பயனர் ஐடி பயன்படுத்தப்படுகிறது. மேலும் இதில் முன்பே நிரப்பப்பட்ட தகவல்களும் கிடைக்கின்றன, இது செயல்முறையை இன்னும் எளிதாக்குகிறது.

ITR தாக்கல் செய்யத் தேவையான ஆவணங்கள்

படிவம் 16 கிடைத்தவுடன், படிவம் 26AS, வருடாந்திர தகவல் அறிக்கை (AIS), வரி தகவல் அறிக்கை (TIS), வங்கி அறிக்கை மற்றும் வட்டி சான்றிதழ் போன்ற பிற தேவையான ஆவணங்களையும் சேகரிக்க வேண்டும். இவை அனைத்தும் வருமானம் மற்றும் வரி விவரங்களை குறுக்கு சோதனை செய்ய உதவுகின்றன. இதற்குப் பிறகு அடுத்த வழிமுறை சரியான ITR படிவத்தைத் தேர்ந்தெடுப்பதாகும். வருமான வரித் துறை 2024-25 நிதியாண்டிற்கான ITR-1 முதல் ITR-7 வரை மொத்தம் 7 படிவங்களை வெளியிட்டுள்ளது. இவற்றில், ITR-1 முதல் ITR-4 வரை பொதுவாக தனிநபர்கள் மற்றும் HUF களுக்கானவை.

சம்பள வகுப்பினர் சிறிது காலம் காத்திருக்க வேண்டும்

ITR படிவங்கள் மற்றும் செயலிகள் தற்போது கிடைத்தாலும், சம்பள வகுப்பினர் பொதுவாக ஜூன் 15 க்குப் பிறகுதான் வருமானத்தை தாக்கல் செய்யத் தொடங்குவார்கள். இதற்குக் காரணம் படிவம் 16 சம்பள பிரிவினருக்கான முக்கியமான ஆவணமாகும். பெரும்பாலான நிறுவனங்கள் ஜூன் மாத இறுதியில் அல்லது ஜூலை தொடக்கத்தில் அதை வழங்குகின்றன.

மின்னணு தாக்கல் செய்வதற்கான எளிய வழிமுறை

வழிமுறை 1:

வருமான வரி மின்-தாக்கல் வலைத்தளத்திற்குச் சென்று 'உள்நுழை' என்பதைக் கிளிக் செய்யவும். பயனர் ஐடியில் (User ID) உங்கள் பான் எண்ணை உள்ளிடவும். 'Continue' என்பதைக் கிளிக் செய்து கடவுச்சொல்லை உள்ளிடவும். பின்னர் 'Continue' என்பதை மீண்டும் அழுத்தி உள்நுழையவும்.

வழிமுறை 2:

 'e-File' தாவலுக்குச் சென்று > 'Income Tax Returns' > 'File Income Tax Return' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்

வழிமுறை 3:

மதிப்பீட்டு ஆண்டாக (Assessment Year )'AY 2025-26' என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது, தாக்கல் முறையில் 'Online' என்பதைத் தேர்ந்தெடுக்கவும். தாக்கல் வகையில் Original அல்லது Revised என்ற விருப்பங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.

வழிமுறை 4:

உங்கள் நிலையைத் தேர்ந்தெடுக்கவும் - தனிநபர், HUF அல்லது பிற. பெரும்பாலானோருக்கு, 'Individual' என்ற ஆப்ஷன் தான் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது

வழிமுறை 5:

இப்போது சரியான ITR படிவத்தைத் தேர்வு செய்யவும். இது உங்கள் வருமான மூலத்தின் படி தீர்மானிக்கப்படுகிறது.

வழிமுறை 6:

தாக்கல் செய்வதற்கான காரணத்தைக் குறிப்பிடவும். அதாவது உங்கள் வருமானம் வரி விலக்கிற்கான வரம்பை மீறுகிறது அல்லது சில அளவுகோல்களின் படி வருமான வரி தாக்கல் செய்யப்படுகிறது.

வழிமுறை 7:

ஏற்கனவே கணினியில் உள்ளிடப்பட்டவை - PAN, ஆதார், பெயர், தொடர்பு மற்றும் வங்கி விவரங்கள் போன்ற தகவலைச் சரிபார்க்கவும். உங்கள் வருமானம், விலக்குகள் மற்றும் கழித்தல் விவரங்களை கவனமாகச் சரிபார்க்கவும்.

வழிமுறை 8:

இறுதியாக ITR வருமான வரி தாக்கலை வெரிஃபை செய்ய வேண்டும். நீங்கள் ஆதார் OTP, நெட் பேங்கிங், EVC போன்ற முறைகளைப் பயன்படுத்தி இதைச் செய்யலாம். அல்லது நீங்கள் ITR-V-யை பிரிண்ட் செய்து எடுத்து, அதில் கையொப்பமிட்டு பெங்களூரு CPC அலுவலகத்துக்கு அனுப்பலாம்.

மேலும் படிக்க | ITR 2025: வருமான வரி தாக்கலின் போது இதனை சரிபார்க்க மறக்காதீங்க... இல்லை என்றால் சிக்கல் வரலாம்

மேலும் படிக்க | ITR 2025: யாரெல்லாம் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்... தேவையான ஆவணங்கள் எவை?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News